சனிப்பெயர்ச்சியால் ஏழரை சனியில் சிக்கவுள்ள ராசிகள் இவை: நிவாரணம் காண பரிகாரங்கள் இதோ
Ezharai Nattu Sani: சனியின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இந்த மாற்றம் சில ராசிகளுக்கு நல்ல பலன்களையும் சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் கொண்டு வரும்.
சனிப்பெயர்ச்சி பலன்கள்: ஜோதிட சாஸ்திரப்படி ஜனவரி 17 ஆம் தேதி அதாவது இன்று சனி பகவான் கும்ப ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். இன்று சனி தனது திரிகோண ராசியான கும்ப ராசிக்கு இரவு 8.02 மணிக்கு பிரவேசிக்கிறார். சனியின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இந்த மாற்றம் சில ராசிகளுக்கு நல்ல பலன்களையும் சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் கொண்டு வரும். சனிப்பெயர்ச்சிக்கு பிறகு சிலருக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கம் தொடங்கும். சிலர் அதிலிருந்து விடுபடுவரகள்.
இந்த ராசியில் ஏழரை சனியின் முதல் கட்டம்
சனிப்பெயர்ச்சிக்கு பிறகு குறிப்பிட்ட நான்கு ராசிகளின் கஷ்டங்கள் அதிகரிக்கப்போகின்றன. இவர்களது கஷ்ட காலத்தின் துவக்கமாக இது இருக்கலாம். ஜோதிட சாஸ்திரப்படி, சனி பகவானின் ராசி மாற்றத்தால் வியாழனின் ராசியான மீனத்தில் இன்று முதல் ஏழரை சனி தொடங்கப் போகிறது. இன்று முதல் மீன ராசியில் ஏழரை சனியின் முதல் கட்டம் தொடங்கும்.
கும்ப ராசியில் இரண்டாம் கட்டம்
கும்ப ராசியில் ஏற்கனவே ஏழரை சனி நடக்கிறது. இன்று முதல் இவர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் இரண்டாம் கட்டம் தொடங்கவுள்ளது.
இவர்களுக்கு சனி தசை
இது தவிர கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று முதல் சனி தசை தொடங்கும். இந்த காலத்தில் இந்த ராசிக்காரர்கள் சனியின் கோபத்திற்கு ஆளாகாமல் இருக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சனியின் கோபம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதையும் அதற்கான பரிகாரங்களையும் இந்த பதிவில் காணலாம்.
இந்த ராசிகளுக்கு பாதிப்பு
ஜோதிட சாஸ்திரப்படி இந்த வருடம் கும்பம், மீனம், கடகம், விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்கள் மீது சனியின் பார்வை இருக்கும். இந்த காலத்தில், இந்த ராசிக்காரர்கள் தவறான செயல்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். இந்த நேரத்தில், நீங்கள் செய்யும் செயல்களின் பலன் அப்படியே உங்களுக்கு கிடைக்கும். சனி பகவான் செயல்களுக்கு ஏற்ப பலனை கொடுப்பவர். ஒவ்வொரு மனிதரும் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் அதற்கான விளைவுகளை ஏற்படுத்துகிறார். குறிப்பாக சனியின் பார்வையின் கீழ் உள்ளவர்கள் இதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க | குரு பெயர்ச்சியும் குரு சாண்டள யோகமும்! தப்பிக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்..!
ஏழரை சனி பாதிப்புகளை குறைப்பதற்கான நிவாரணங்கள்
- ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஏழரை சனி மற்றும் சனி தசையின் தாக்கம் ஆரம்பிக்கும் நபர்கள், முழுமனதோடு சனி பகவனை வணங்க வேண்டும்.
- சனியின் கோபத்தைத் தவிர்க்க, கோளறு பதிகம், சனி சாலிசா ஆகியவற்றை தவறாமல் பாராயணம் செய்யுங்கள். தினமும் முடியாவிட்டாலும், கண்டிப்பாக சனிக்கிழமையில் இதை செய்யுங்கள். இது அதிகப்படியான பலன் தரும்.
- சனியின் மஹாதசையால் பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமையன்று சனி பகவானின் கோவிலுக்குச் சென்று சனி பகவானை பிரார்த்திக்க வேண்டும். இதன் மூலம் சிறப்பான பலனைப் பெறுவீர்கள்.
- அரச மரத்தை வணங்கி. அதன் அடியில் விளக்கு ஏற்றி வழிபடுவதும் நல்ல பலன் தரும்.
- ஏழை எளியவர்களுக்கு முடிந்தவரை தானம் செய்யுங்கள். ஏழைகளுக்கு உங்களால் முடிந்தவற்றை தானம் செய்வதால் சனி பகவான் மகிழ்வார்.
- சனி பகவான் அனுமனின் பக்தர்களுக்கு இன்னல் கொடுப்பதில்லை. ஆகையால், ஹனுமான் சாலிசா படிப்பதும் நல்ல பலன்களை அளிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | வக்ர நிவர்த்தி அடையும் புதனால் பம்பர் பலன்களை பெறும் ‘சில’ ராசிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ