குரு பெயர்ச்சியும் குரு சாண்டள யோகமும்! தப்பிக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்..!

2023 ஏப்ரல் மாதத்தில் குருவும் ராகுவும் மேஷ ராசியில் இணையுல் நிலையில், இந்த இரு கிரகங்களும் 6 மாதங்கள் அங்கு தங்கப் போகிறார்கள். இந்நிலையில் குரு சண்டாள யோகம் உருவாகி வருகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 17, 2023, 05:58 PM IST
  • குரு சண்டாள தோஷம் ராகு மற்றும் குரு கிரகங்களின் சேர்க்கையால் உருவாகிறது.
  • பங்குச் சந்தையில் பெரும் குழப்பங்கள் இருக்கும்.
  • குரு சண்டாள யோகத்தால் ஏற்படும் விளைவுகளை குறைக்கும் பரிகாரங்கள்.
குரு பெயர்ச்சியும் குரு சாண்டள யோகமும்! தப்பிக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்..! title=

2023 ஏப்ரலில் உண்டாகும் குரு சண்டாள யோகம்: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் பெயர்ச்சிகளால் பல சுப மற்றும் அசுப விளைவுகள் உருவாக்கப்படுகின்றன. ஏப்ரல் மாதத்தில் குருவும் ராகுவும் மேஷ ராசியில் 6 மாதங்கள் தங்கப் போகிறார்கள். இந்நிலையில் குரு சண்டாள யோகம் உருவாகி வருகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி எந்த ஒருவரின் ஜாதகத்திலும் குருவும் ராகுவும் சேர்ந்தால் குரு சண்டள யோகம் உண்டாகும். இந்த யோகத்தால், ஒருவர் வாழ்க்கையில் முன்னேறுவதில் சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது.

2023ல் குரு சண்டள யோகம் எப்போது உருவாகும்

இந்து பஞ்சாங்கத்தின்படி, மேஷத்தில் குருவின் ராசி மாற்றத்தினால் 23 ஏப்ரல் 2023 அன்று குரு சண்டள யோகம் உருவாகிறது. குரு மேஷ ராசியில் நுழைவார், ராகு ஏற்கனவே அங்கு அமர்ந்திருக்கிறார். ஜோதிட சாஸ்திரப்படி ராகு மற்றும் குரு இணைவதால் குரு சண்டள யோகம் உருவாகிறது. இந்த யோகம் யாருடைய ஜாதகத்தில் அமைகிறதோ, அவர்கள் அடுத்த 6 மாதங்களுக்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 23 ஏப்ரல் 2023 முதல் அக்டோபர் 30, 2023 வரையிலான காலகட்டம் சிரமங்கள் நிறைந்ததாக இருக்கும். இந்த நேரத்தில் பங்குச் சந்தையில் பெரும் குழப்பங்கள் இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு முன் நிறைய ஆலோசனை தேவை.

மேலும் படிக்க | தை மாத ராசி பலன்: ஆரோக்கியத்தில் ‘சில’ ராசிகளுக்கு எச்சரிக்கை தேவை!

ஜாதகத்தின் முதல் வீட்டில் வியாழனும் ராகுவும் ஒன்றாக அமர்ந்திருந்தால், அந்த மனிதனுக்கு சந்தேகப்படும் தன்மை உண்டாகிறது. இதனுடன், அந்த நபர் சட்டவிரோதமாக பணம் சம்பாதிப்பதில் ஈடுபடும் வாய்ப்பும் அதிகம் ஏற்படுகிறது. ஜாதகத்தின் இரண்டாம் வீட்டில் குரு சண்டாள யோகம் அமைந்தால், அந்த நபர் செல்வந்தராக இருப்பார். ஆனால் மகிழ்ச்சிக்காகவும் ஆடம்பரத்திற்காகவும் பணத்தை செலவிடுபவராக இருப்பார். இது தவிர, குரு பலவீனமானமாக, இருப்பதால் நபர் போதைக்கு அடிமையாகவதாக இருப்பார். ஜாதகத்தின் மூன்றாவது வீட்டில் குருவும் ராகுவும் சந்திப்பதால், ஒரு நபர் வலிமையும் தைரியமும் கொண்டவராகவும் இருக்கிறார். ஆனால் தவறான செயல்களில் பெயர் போனவராக இருப்பார். மேலும், அந்த நபர் பந்தயம், சூதாட்டம் போன்றவற்றின் மூலம் பணம் சம்பாதிக்க முயற்சிப்பவராக இருப்பார்.

குரு சண்டாள யோகத்தால் ஏற்படும் விளைவுகளை குறைக்கும் பரிகாரங்கள்

ஒருவரது ஜாதகத்தில் குரு சண்டல் யோகம் இருந்தால் அதை நிவர்த்தி செய்ய குருவை வழிபடுவதே சிறந்த வழி. இந்த வழிபாட்டின் மூலம் சண்டாள யோக பலன் பெருமளவு குறையும் என்கின்றனர் ஜோதிடர்கள். குரு சண்டாள தோஷம் நீங்க, குரு மற்றும் ராகு சாந்தி பாராயணம் செய்ய வேண்டும். இது தவிர, பெற்றோருக்கு சேவை செய்ய வேண்டும். வீட்டில் அல்லது கோவிலில் விஷ்ணுவை வழிபடுவது குரு சண்டாள தோஷத்தின் எதிர்மறை விளைவுகளை குறைக்கிறது. திங்கட்கிழமை இரண்டு முகம் ருத்ராட்சம் அணிவதும் நன்மை தரும். மேலும் விநாயகப் பெருமானை தொடர்ந்து வழிபடுவதால் குரு சண்டாள தோஷம் நீங்கும். குரு மந்திரம் 'ஓம் ப்ரம் பிரிம் ப்ரௌன் சஹ குர்வே நமஹ' என்ற மந்திரத்தை தினமும் உச்சரிக்க வேண்டும். மேலும், குரு சண்டாள யோகம் உருவாகி இருந்தால், இவர்கள் வியாழன் அன்று விஷ்ணுவை வழிபட வேண்டும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | செல்வந்தராக்கும் லட்சுமி குபேர பூஜையை எளிமையாக செய்யும் முறை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News