சனி பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு அமோகமான வாழ்க்கை, அருள் மழை பொழிவார் சனி

Sani Peyarchi 2023: சனிப்பெயர்ச்சிக்கு பிறகு சில ராசிக்கார்ரகளுக்கு தொழில், வேலை, திருமணம், காதல், குழந்தைகள், கல்வி, ஆரோக்கியம் போன்ற பல விஷயங்களில் சுப பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 17, 2023, 12:59 PM IST
  • துலா ராசிக்காரர்கள் அபரிமிதமான பலன்களை பெறுவார்கள்.
  • திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.
  • காதலர்கள் விரும்பிய துணையுடன் திருமணம் செய்து கொள்ளலாம்.
சனி பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு அமோகமான வாழ்க்கை, அருள் மழை பொழிவார் சனி title=

சனி பெயர்ச்சி 2023: ஜோதிடத்தில் சனி பகவான் மிகவும் முக்கியமான கிரகமாகக் கருதப்படுகிறார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர்களுக்கு பலன்களை அளிப்பவர் சனி. இந்த காரணத்திற்காக அவர் நீதிக்கடவுள் என அழைக்கப்படுகிறார். சனி பகவானை போல் கொடுப்பவரும் இல்லை, அவரை போல் கெடுப்பவரும் இல்லை என கூறுவார்கள். அவரது அசுப பார்வை ஒருவர் மீது பட்டால், அவர் அரசனாக இருந்தாலும், ஆண்டியாக வேண்டியதுதான். அதே சமயம், அவரது கருணை பார்வையில் நாம் இருந்தால், நமக்கு அனைத்து பித மகிழ்ச்சியும், செல்வச்செழிப்பும் கிடைப்பதை நாமே நினைத்தாலும் தடுக்க முடியாது.

இன்று நீதியின் கடவுளான சனி தனது ராசியை மாற்றவுள்ளார். ஜோதிட சாஸ்திரத்தில் இது மிகப்பெரிய நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. இன்று இரவு 8:02 மணிக்கு சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுகிறார். சனியின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். சனியின் பெயர்ச்சிக்கு பிறகு சிலருக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கம் துவங்கும். சிலருக்கு ஏழரை சனியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். குறிப்பாக சனிப்பெயர்ச்சிக்கு பிறகு சில ராசிக்கார்ரகளுக்கு தொழில், வேலை, திருமணம், காதல், குழந்தைகள், கல்வி, ஆரோக்கியம் போன்ற பல விஷயங்களில் சுப பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

மேஷம்:

சனிப்பெய்ரச்சிக்கு பிறகு மேஷ ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். பணம் சம்பாதிக்க புதிய வழிகள் கிடைக்கும். திடீரென்று எதிர்பாராத இடத்திலிருந்து பணம் வந்து சேரும். உங்கள் திட்டங்கள் நிறைவேறும். நீண்ட நாட்களாக நீங்கள் கொண்டிருந்த பெரிய ஆசை நிறைவேறும்.

ரிஷபம்:

சனியின் ராசி மாற்றத்தால், வேலை, வியாபாரம் இரண்டிலும் நன்மைகள் உண்டாகும். பெரிய அளவிலான வெற்றி கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் பெரும் வெற்றி உண்டாகும். புதிய திட்டங்களை விரைவுபடுத்துங்கள், அவை வெற்றிகரமாக நடந்துமுடியும்.

மிதுனம்:

வேலையில் மாற்றம் ஏற்படலாம். எனினும் இந்த மாற்றம் அனுகூலமான விளைவுகளையே கொண்டு வரும். வருமானம் அதிகரிக்கும். நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ரிஸ்க் எடுத்தாவது வியாபாரத்தில் வெற்றி காண்பீர்கள். இந்த கால கட்டத்தில் கடன் சுமை குறையும்.

மேலும் படிக்க | Saturn Transit: சனியின் அதிசார சஞ்சாரத்துக்கு முடிவு! மகரத்தில் வக்ரமாகும் சனீஸ்வரர் 

துலாம்:

மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும். மற்ற துலா ராசிக்காரர்கள் அபரிமிதமான பலன்களை பெறுவார்கள். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். காதலர்கள் விரும்பிய துணையுடன் திருமணம் செய்து கொள்ளலாம். தொழிலில் வெற்றி கிடைக்கும்.

தனுசு:

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் மரியாதை பெறுவீர்கள். தைரியமும் வலிமையும் அதிகரிக்கும். வியாபாரத்திலும் ரிஸ்க் எடுக்கலாம், விளைவுகள் நன்றாகவே இருக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். காதல் விவகாரங்களில் வெற்றி உண்டாகும்.

மகரம்:

சனி பெயர்ச்சி உங்கள் பல பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். கடின உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். பணத்தை சேமிக்க முடியும். சொத்துக்களால் லாபம் உண்டாகும்.

கும்பம்:

உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஆளுமையில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வேலை நன்றாக நடக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பண வரவு சாதகமாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ராசி மாறினார் சூரியன்: இந்த ராசிகளுக்கு நேரம் சரியில்லை, அதிகபட்ச கவனம் தேவை 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News