Saturn Transit 2024: ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தனது இயக்கத்தை மாற்றிக்கொண்டே இருக்கும். அந்த வகையில் கர்ம கடவுளான சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் 12 ராசிகள் வாழ்க்கையிலும் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். இந்து ஜோதிடத்தின்படி, வருகிற ஜூன் 29 ஆம் தேதி நள்ளிரவு 12:35 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடையப் போகிறார். இதன் பின்னர், வரும் நவம்பர் 15 முதல், சனி வக்ர நிவர்த்தி நிலையில் நகரத் தொடங்கும், அதன் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் நேர்மறை அல்லது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் எந்தெந்த மூன்று ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சியால் அற்புத பலன் கிடைக்கும் என்பதை ஜோதிடத்தில் தெரிந்து கொள்வோம்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம் (Aries Zodiac Sign): ஜோதிடத்தின் படி, சனியின் வக்ர பெயர்ச்சியால் (Saturn Retrograde) மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் இணைந்திருந்தால் அதில் வளர்ச்சியை பெறுவார்கள். வேலைக்கான தேடுதலில் இருப்பவர்கள் வெற்றி பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு சனியின் சிறப்பு அருள் கிடைப்பதுடன், சிக்கிய பணத்தை திரும்பப் பெறுவார்கள். இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு அமைதியான சூழல் நிலவும். வியாபாரம் செழிக்கும். வியாபாரத்தில் விருத்தி ஏற்படும். தொழிலில் புதிய சிந்தனைகள் நல்ல பலன் தரும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். 


மேலும் படிக்க | Sukran Peyarchi Palangal: சுக்கிரன் பெயர்ச்சி.... மேஷம் முதல் மீனம் வரை... அனைத்து ராசிகளுக்கான பலன்கள்!


ரிஷபம் (Taurus Zodiac Sign): ஜோதிட சாஸ்திரத்தின்படி சனியின் வக்ர பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். எல்லாவிதமான பிரச்சனைகளில் இருந்தும் விடுப்படுவீர்கள். இதடன் இந்த ராசிக்காரர்களின் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளும் தீர்வுக்கு வரும். அதுமட்டுமின்றி ரிஷப ராசிக்காரர்களின் நிதி நிலையும் வலுப்பெறும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். உறவுனர்களின் வருகையால் நன்மை நடக்கும். உங்கள் வீட்டிற்கு ஒரு சிறிய விருந்தினர் வரலாம். திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சி இருக்கும். மற்றவர்களைப் புரிந்துகொண்டு பொறுமையுடன் முடிவுகளை எடுங்கள்.


விருச்சிகம் (Scorpio Zodiac Sign): ஜோதிட சாஸ்திரப்படி, விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சியால் பல பலன்களைத் தரப்போகிறது. இந்த ராசிக்காரர்களின் தொழிலில் அதீத வளர்ச்சி இருக்கும். மேலும், வியாபாரத்திலும் முன்னேற்றம் ஏற்படும். இந்த ராசிக்காரர்களின் மதப் பணியில் ஆர்வம் அதிகளவில் அதிகரிக்கலாம். இந்த ராசிக்காரர்களுக்கு செல்வத்தின் புதிய வழிகள் திறக்கப்படும். கடந்த கால பிரச்சனைகளை தீர்க்க இது ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடும். தொழிலில் வெற்றியும் முன்னேற்றமும் அடையலாம்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Jupiter Transit in Taurus: குரு பெயர்ச்சி... பணம் - அதிர்ஷ்டத்திற்கு குறைவிருக்காது... கவலை வேண்டாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ