செவ்வாய் பெயர்ச்சி: ஜூலை 1 வரை இந்த ராசிகளுக்கு திகட்ட திகட்ட லாபம், மகிழ்ச்சி
Mangal Gochar: செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், சில ராசிகளுக்கு இந்த பெயர்ச்சி மிக நல்ல பலன்களை அள்ளித் தரும்.
செவ்வாய் பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படுகிறார். செவ்வாய் மே 10 மதியம் 1.48 மணிக்கு மிதுன ராசியிலிருந்து விலகி கடக ராசியில் பிரவேசித்தார். செவ்வாய் ஜூலை 1ம் தேதி நள்ளிரவு வரை கடக ராசியில் சஞ்சரித்து அதன் பிறகு சிம்ம ராசிக்கு மாறுகிறார். பொதுவாகவே அனைத்து கிரகங்களின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதே போல், கடகத்தில் செவ்வாயின் பெயர்ச்சியும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், சில ராசிகளுக்கு இந்த பெயர்ச்சி மிக நல்ல பலன்களை அள்ளித் தரும். அதே சமயம் சில ராசிகள் பல ஏற்ற இறக்கங்களை காண வேண்டியுள்ளது. ஆக்கப்பூர்வமான விளைவுகளை சில ராசிகாரர்கள் பெறுவார்கள். இவர்களுக்கு அதிகப்படியான பண வரவு இருக்கும். செவ்வாயின் பெயர்ச்சியால் ஜூலை 1, 2023 வரை எந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இந்த ராசிகளுக்கு செவ்வாய்ப் பெயர்ச்சி நல்ல பலனைத் தரும்
மேஷம்:
செவ்வாய்ப் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு பல வித நன்மைகளைத் தரும். மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இவர்கள் வேலையில் முன்னேற்றம் அடைவார்கள். நிலம்-சொத்து தொடர்பாக ஏதாவது பிரச்சனையில் சிக்கி இருந்தால், அது இப்போது உங்களுக்கு சாதகமாக அமையும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். இந்த காலத்தில் கோபம், ஆணவம் ஆகியவற்றைத் தவிர்க்கவும். இப்போது மட்டுமல்ல, எப்போதுமே இவற்றை தவிர்ப்பது நல்லது.
கடக ராசி:
கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் கிரகம் எதிர்பாராத பலன்களைத் தரும். அரசாங்க டெண்டர் பெறுவதில் அல்லது புதிய ஒப்பந்தத்தை முடிப்பதில் வெற்றி கிடைக்கும். பண வரவு சாதகமாக இருக்கும். இந்த காலத்தில் செய்யப்படும் முதலீடுகள் மற்றும் செய்யும் பணிகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் உடல்நலனின் அதிக கவனம் தேவை. வாகனம் ஓட்டும்போது மிக ஜாக்கிர்தையாக இருப்பது நல்லது. ஏனெனில் அவசரம் ஆபத்தை விளைவிக்கலாம். உங்கள் மனைவியை நன்றாக நடத்துங்கள்.
கன்னி ராசி:
கன்னி ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி சுப பலன்களை அள்ளித் தரும். தேர்வு-நேர்காணலில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள், உங்கள் கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும். குறித்த நேரத்தில் பணிகள் முடிவடையும். புதுமணத் தம்பதிகள் குழந்தைகள் தொடர்பான இனிமையான தகவல்களைப் பெறலாம்.
துலாம் ராசி:
துலாம் ராசிக்காரர்களுக்கு ஜூலை 1 வரையிலான காலம் அவர்களின் தொழிலில் அதிக பலன்களைத் தரும். பணியிடத்தில் உங்கள் பதவி மற்றும் பொறுப்புகள் அதிகரிக்கும். உங்கள் பணிகள் பாராட்டப்படும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள துலா ராசிக்காரர்கள் புதிய ஒப்பந்தங்களை பெறுவீர்கள். இவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். நிலம், சொத்து சம்பந்தமான பிரச்னை தீரும். புதிய வாகனம் வாங்கும் யோகம் தற்போது உள்ளது.
மீன ராசி:
மீன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி சுப பலன்களைத் தரும். மீன ராசிக்காரர்களின் வருமானம் பெருகும். உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். தொழில்-வியாபாரத்திற்கு நல்ல நேரம் இருக்கும். உங்கள் திட்டங்களை ரகசியமாக வைத்து செயல்பட்டால், நீங்கள் வெற்றி பெறுவீர்கள். குழந்தை செல்வம் எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு இப்போது குழந்தை பிறக்கும் யோகம் உருவாகும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ