சனி உதயம் 2023, அதிர்ஷ்ட ராசிகள்: மார்ச் மாதத்தில் சனி பகவான் உதயமாகப் போகிறார். ஹோலிக்கு முன்னதாக, மார்ச் 6, 2023 அன்று இரவு 11:36 மணிக்கு, சனி கும்ப ராசியில் உதயமாவார். சனியின் அஸ்தமனத்தால் பிரச்சனைகளை சந்தித்து வந்தவர்களுக்கு சனியின் உதயத்திற்கு பிறகு பிரச்சனைகள் தீரும். ஜோதிடத்தின்படி, சனியின் உதயம் 12 ராசிகளையும் பாதிக்கும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் உதயம் மிகவும் சுபமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோதிடத்தில் சனி பகவான் மிகவும் சக்திவாய்ந்த கிரகமாக கருதப்படுகிறார். சனி அனைத்து கிரகங்களிலும் மெதுவாக நகரும் கிரகம் ஆவார். சனியின் ராசி மாற்றங்களும், இயக்க மாற்றங்களும், அஸ்தமனம், உதயம் ஆகிய நிலைகளும் மிக முக்கியமான நிகழ்வுகளாகக் கருதப்படுகின்றன. ஏனெனில் இவை அனைத்து ராசிகளையும் சாதகமான மற்றும் சாதகமற்ற வழிகளில் பாதிக்கின்றன. 


முன்னதாக, சனி பகவான் ஜனவரி 31, 2023 அன்று அஸ்தமன நிலைக்கு சென்றார். சனியின் அஸ்தமனம் சுபமாக கருதப்படுவதில்லை. ஆனால் தற்போது 2023 மார்ச் 6-ம் தேதி கும்ப ராசியில் சனி உதயமாக உள்ளார். இது சில ராசிக்காரர்களுக்கு மட்டுமே பலன் தரும். சனி பகவான் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார். அப்படிப்பட்ட நிலையில் சனி தனது ராசியான கும்பத்தில் உதயமாவதால் எந்தெந்த ராசிக்காரர்கள் பலன் அடைவார்கள் என இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 


ரிஷபம்:


ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி உதயத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். ஒன்பது மற்றும் பத்தாம் வீட்டிற்கு அதிபதியான சனி இந்த ராசிக்காரர்களுக்கு யோக காரக் கிரகமாகவும் விளங்குகிறார். ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். சுக்கிரன் மற்றும் சனி இடையே நட்பு உணர்வு உள்ளது. சனியின் உதயத்திற்குப் பிறகு, ரிஷப ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். உங்கள் தடைபட்ட வேலைகள் அனைத்தும் முடிவடையும். மரியாதை கூடும், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.


மேலும் படிக்க | மஹாசிவராத்திரியில் அற்புத யோகம்! ஏழரை சனி பாதிப்பிலிருந்து விடுபட செய்ய வேண்டியவை!


மேஷம்:


சனி பகவானின் உதயமும் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். பத்தாம் மற்றும் பதினொன்றாம் வீட்டிற்கு அதிபதி சனி. கும்ப ராசியில் சனியின் உதயத்தால் உங்களுக்கு பண பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் வருமானமும், வியாபாரத்தில் லாபமும் கூடும். தங்கள் தொழிலைத் தொடங்க விரும்பும் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் நல்லது. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கும் இந்த நேரம் சாதகமாக இருக்கும்.


துலாம்:


நான்காம் மற்றும் ஐந்தாம் வீட்டிற்கு அதிபதியான சனி பகவான் துலா ராசிக்கு நன்மை தரும் கிரகம் ஆவார். சனி ஐந்தாம் வீட்டில் அமர்வதால் கல்வி, காதல், குழந்தை மகிழ்ச்சி போன்றவற்றில் உங்களுக்கு நன்மை உண்டாகும். கும்பத்தில் சனியின் உதயம் நன்மைகளை மட்டுமே தரும். குழந்தைப் பேறு விரும்புவோருக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். சனியின் உதயத்தால் உங்கள் குடும்ப வாழ்க்கை சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.


சிம்மம்:


சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி உதயம் சுபமாக இருக்கும். உங்கள் நிதி பிரச்சனைகள் குறையும் மற்றும் நீங்கள் கடன் தொல்லைகளிலிருந்து விடுபடலாம். உங்கள் குண்டலியின் ஏழாவது வீட்டில் உள்ள சனி, தன யோகத்தை உருவாக்கும் ஷஷ மஹாபுருஷ ராஜயோகத்தை உருவாக்குவார். இந்த நேரத்தில், உங்கள் வேலை-வியாபாரத்தில் இருந்து மூதாதையர் சொத்துக்கள் வரை பல வித பண ஆதாயங்கள் கிடைக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | மஹாசிவராத்திரி 2023: சிவராத்திரி முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், நல்ல நேரம் ஆரம்பம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ