ஜூன் கிரகப் பெயர்ச்சிகள், ராசிகளில் அதன் தாக்கம்: வேத ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசி மற்றும் நிலையை மாற்றுகின்றது. எந்த ஒரு கிரகமும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வது அனைத்து ராசிகளையும் பாதிக்கிறது. ஜூன் மாதத்தில் பல பெரிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றப் போகின்றன. இவற்றில் சூரியன், புதன் ஆகிய கிரகங்களின் ராசி மாற்றமும், சனியின் வக்ர மாற்றமும் 12 ராசிகளையும் பாதிக்கும். சனி கும்ப ராசியில் 140 நாட்களுக்கு வக்ர நிலையில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனியின் வக்ர பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. புதனின் நட்சத்திரம் ஜூன் மாதம் அஸ்தமனமாகிறது. அதேசமயம், புதன் 22 நாட்களுக்கு அஸ்தமன நிலையில் இருக்கும். ஜூன் மாதம் நிகழவுள்ள கிரக மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், 3 ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் நல்ல நாட்கள் தொடங்கும், தொட்டது அனைத்தும் துலங்கும்.


புதன் பெயர்ச்சி 2023


ஜோதிட சாஸ்திரப்படி ஜூன் 7ஆம் தேதி புதன் கிரகம் தனது ராசியை மாற்றப் போகிறார். இந்த நாளில் மாலை 7.58 மணிக்கு புதன் ரிஷப ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். இந்த நேரத்தில் புதன் மேஷ ராசில் உள்ளார். அவர் ஜூன் 7 முதல் ஜூன் 23 வரை ரிஷப ராசில் இருப்பார். மறுபுறம், புதன் கிரகம் ஜூன் 24 அன்று இரண்டாவது முறையாக தனது ராசியை மாற்றுவார். இந்த நாளில், புதன் 12:48 க்கு பெயர்ச்சியாகி ஜூலை 8 வரை மிதுன ராசியில் இருப்பார்.


சூரியன் பெயர்ச்சி 2023


ஜோதிட சாஸ்திரப்படி, சூரியன் ஒவ்வொரு மாதமும் தன் நிலையை மாற்றிக்கொள்கிறார். ஜூன் 15 மாலை 06.29 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு அவர் மாறப்போகிறார். சூரியன் மிதுன ராசியில் நுழையும் போது மிதுன சங்கராந்தி கொண்டாடப்படும். மே 14 வரை சூரியன் மிதுன ராசியில் இருப்பார். 


சனி வக்ர பெயர்ச்சி 2023


ஜனவரி 17 ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசிக்குள் பெயர்ச்சியானார். சனி அனைத்து கிரகங்களிலும் மெதுவாக நகரும் கிரகமாக கருதப்படுகிறார். சனி தற்போது கும்ப ராசியில் அமர்ந்து இரண்டரை வருடங்கள் இந்த ராசியில் இருக்கப் போகிறார். இந்த நிலையில் சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடையப்போகிறார். ஜூன் 17 ஆம் தேதி சனி வக்ரமாகி 140 நாட்கள் இந்த நிலையில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக சனியின் வக்ர நிலை அசுப பலன்களை அளிக்கும். சனியின் வக்ர நிலை நவம்பர் 4-ம் தேதி முடிவடைகிறது.


புதன் அஸ்தமனம் ஜூன் 2023 


கிரகங்களின் உதயமும் அஸ்தமன நிலையும் அனைத்து ராசிகளையும் பாதிக்கின்றன. ஜூன் 21 ஆம் தேதி அதிகாலை 4.35 மணிக்கு ரிஷப ராசியில் புதன் அஸ்தமனம் ஆகப் போகிறார். புதன் அஸ்தமனத்தின் தாக்கத்தை 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெளிவாகக் காணலாம். அஸ்தமன நிலையில் புதன் ஜூன் 24 ஆம் தேதி மிதுனத்தில் பெயர்ச்சி ஆவார். பின்னர் அவர் மிதுன ராசியில் ஜூலை 12 ஆம் தேதி உதயமாவார். அப்படிப்பட்ட நிலையில் புதன் கிரகம் 22 நாட்கள் அஸ்தமன நிலையில் இருப்பார். 


மேலும் படிக்க | 36 நாட்கள்.. இந்த ராசிகளுக்கு திடீரென்று பண வரவு உண்டாகும்


ஜூன் மாத கிரக மாற்றங்களால் இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் கிடைக்கும்


ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஜூன் மாதத்தில் கிரகங்களின் மாற்றம், அஸ்தமனம், வக்ர நிலை ஆகியவற்றின் காரணமாக பல ராசிகளில் ஆக்கப்பூர்வமான விளைவுகள் ஏற்படவுள்ளன. ஜூன் மாதத்தில் 3 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். அந்த ராசிகளை பற்றி இங்கே காணலாம்,


1. ரிஷப ராசி
ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். நீங்கள் உங்கள் வேலையை மாற்ற முயற்சிக்கிறீர்கள் என்றால், இந்த மாதம் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். 


2. சிம்ம ராசி
சிம்ம ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். பொருளாதார நிலை மேம்படும். அலுவலக பணி நிமித்தமாக பயணங்களை மேற்கொள்ள நேரிடலாம். இந்த பயணங்கள் சாதகமான பலன்களை அளிக்கும்.


3. தனுசு ராசி
தனுசு ராசிக்காரர்களுக்கு தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். இவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வுக்கான வய்ப்புகள் உள்ளன. இந்த நேரம் வணிகத்திற்கு சாதகமான நேரமாக இருக்கும். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | அடுத்த 4 மாதம் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பெருகும், சனியால் ராஜ வாழ்க்கை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ