கிரகங்களின் பெயர்ச்சி... ஜூன் மாதம் வந்தால் இந்த 4 ராசிக்காரர்களை கையிலேயே பிடிக்க முடியாது!

Planets Transit June 2023: ஜீன் மாதம் ஏற்பட இருக்கும் பல்வேறு கிரகங்களின் ராசி மாற்றம் இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளை தரும். 

Written by - Sudharsan G | Last Updated : May 22, 2023, 11:13 PM IST
  • வரும் ஜூன் 7ஆம் தேதி புதன் மேஷ ராசியில் பெயர்ச்சியடைகிறார்.
  • ஜூன் 17இல் சனி பிற்போக்காக மாறும்.
  • ஜூன் 30 அன்று செவ்வாய் சிம்மத்தில் சஞ்சரிக்கிறார்.
கிரகங்களின் பெயர்ச்சி... ஜூன் மாதம் வந்தால் இந்த 4 ராசிக்காரர்களை கையிலேயே பிடிக்க முடியாது! title=

Planets Transit June 2023: ஒவ்வொரு குறிப்பிட்ட காலகட்டத்திலும், கிரகங்கள் தங்கள் போக்கை மாற்றி, ராசிகளை மாற்றி, ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நுழைகின்றன. ஜூன் மாதத்தில் பல முக்கியமான கிரகப் பெயர்ச்சிகள் நடக்கவுள்ளன. 

இது சில ராசிக்காரர்களை வாழ்வில் தாக்கத்த ஏற்படுத்தும். வரும் ஜூன் 7ஆம் தேதி புதன் மேஷ ராசியை விட்டு ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். இதற்குப் பிறகு சூரியன் வேறு ராசிக்கு சஞ்சரிக்கும், பின்னர் ஜூன் 17 முதல் சனி பிற்போக்காக மாறும். இதற்குப் பிறகு, இறுதியாக ஜூன் 30 அன்று, செவ்வாய் சிம்மத்தில் சஞ்சரிக்கிறார். இந்த கிரகப் பெயர்ச்சி 4 ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். அந்த ராசிகள் குறித்தும், அதன் பலன்கள் குறித்தும் இதில் காணலாம்.

மேஷம் 

மேஷ ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் பதவி உயர்வு கிடைக்கும். அவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. பண விஷயத்தில் அனைத்தும் சாதகமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். புதிய வீடு, நிலம், வாகனம் ஆகியவற்றை வாங்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் ஏற்றம் உண்டாகும். வெளிநாட்டு நிறுவனத்துடனான ஒப்பந்தம் பெரும் பலன்களைத் தரும்.

மேலும் படிக்க | இன்னும் 8 நாட்களில் 5 ராசிகளுக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம்..! கொட்டி கொடுக்கும் செவ்வாய் - சுக்கிரன்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் முன்னேற்றம் தரும். முன்னேற்றம் பெற புதிய வழிகள் அமையும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உங்கள் தந்தையின் ஆதரவைப் பெறுவீர்கள், அவர் உங்களுக்கு நன்மை செய்வார். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். மொத்தத்தில், இந்த நேரம் உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் அதிர்ஷ்டம் தரும். குறிப்பாக தொழிலதிபர்கள் அதிக லாபம் அடைவார்கள். வியாபாரம் வேகமாக வளரும். திடீரென்று எங்கிருந்தோ பண ஆதாயம் உண்டாகும். உங்கள் சூழ்நிலைகள் சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு துணை கிடைக்கும்.

துலாம் 

துலாம் ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதத்தில் கிரகப் பெயர்ச்சி பல நன்மைகளைத் தரும். உங்கள் தொழிலில் நீங்கள் பெரிய வெற்றியைப் பெறலாம். இதுவரை நிறுத்தப்பட்ட பணிகள் முடிவடையும். பொருளாதார பலன்கள் உண்டாகும். உங்கள் வாழ்வில் சுகபோகங்கள் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனியால் கேந்திர திரிகோண ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News