கடக ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் ராசியை மாற்றிக் கொள்கின்றன. கிரகங்களின் பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது. மே 30, 2023 அன்று, செல்வம், செழிப்பு, ஆடம்பரம், காதல் ஆகியவற்றின் காரணியான சுக்கிரன் கடக ராசியில் நுழைந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுக்கிரன் சந்திரனின் ராசியான கடக ராசியில் பெயர்ச்சியாகி உள்ளார். இந்த பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சுக்கிரனின் இந்த சஞ்சாரம் 3 ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்களை அள்ளித் தரும். இவர்கள் வாழ்வில் இந்த பெயர்ச்சியின் காரணமாக பல நல்ல செய்திகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக தாமதமாகிக்கொண்டிருக்கும் வெற்றி இப்போது இவர்களைத் தேடி வரும். 


சுக்கிரன் ஜூலை 7, 2023 வரை கடக ராசியில் இருப்பார். அது வரை அவர் இந்த அதிர்ஷ்டசாலி ராசிகளின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்குவார். சுக்கிரனின் சஞ்சாரத்தால் அடுத்த 37 நாட்களுக்கு சில ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


சுக்கிரன் சஞ்சாரம் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும்


மேஷ ராசி: 


மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். இவர்களுக்கு புதிய வீடு, வாகனம், வாழ்வில் வசதிகள் கிடைக்கும். கடின உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். நட்பு நன்மை தரும். தொழில் நன்றாக இருக்கும். காதல் - திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்கள் சமூக வட்டம் அதிகரிக்கும். இந்த நேரம் வியாபாரிகளுக்கும் சாதகமாக இருக்கும். பெரிய ஒப்பந்தம் ஒன்று வெற்றிகரமாக இறுதி செய்யப்படும். வீட்டில் உள்ள பூஜை அறையில் தினமும் விளக்கேற்றி கடவுளுக்கு கற்பூரம் காட்டுவதால் பல நன்மைகள் உண்டாகும்.


மேலும் படிக்க | ஜூன் மாத ராசிபலன் 2023: 12 ராசிகளுக்கான சுருக்கமான பலன்கள் இதோ


மிதுன ராசி: 


சுக்கிரனின் ராசி மாற்றம் மிதுன ராசிக்காரர்களுக்கு நன்மைகளைத் தரும். திடீரென்று பண வரவு அதிகரிக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சம்பளம் அதிகரிக்கலாம். வியாபாரிகள் அதிக லாபம் அடைவார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கோவிலில் பசு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நன்மைகள் பெருகும்.


குடும்பத்தில் பொருளாதார நிலை உயரும். இந்த நேரத்தில் குடும்பத்தில் ஒருவருக்கு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. காதல் விவகாரங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் அங்கீகாரம் கிடைக்கும். வருமான வழிகளில் உயர்வு இருக்கும். 


கடக ராசி


உங்கள் ஆளுமை காரணமாக இந்த காலத்தில் அனைவரும் உங்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். இந்த நேரத்தில் உங்கள் ஆளுமை மேம்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். வியாபாரத்திலும் லாபம் தெரிகிறது. நகை வியாபாரிகளுக்கும் இந்த நேரம் நன்மை பயக்கும்.


மீன ராசி: 


சுக்கிரனின் சஞ்சாரம் மீன ராசிக்காரர்களின் வாழ்வில் பல மகிழ்ச்சியைத் தரும். பல துறைகளில் முன்னேற்றம் அடைவீர்கள். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். புத்திசாலித்தனம் மற்றும் விவேகத்தின் வலிமையால் லாபம் ஈட்டுவீர்கள். முன்னேற்றப் பாதை திறக்கும். வாழ்க்கைத் துணையுடன் நன்றாகப் பழகுவீர்கள். பண பலன்களுடன் இவர்களுக்கு இந்த காலத்தில் பல சொத்துகள் மூலம் லாபம் கிடைக்கும், புதிய சொத்து வாகனம் ஆகியவற்றை வாங்குவார்கள். தாய்க்கு சேவை செய்தால் நன்மை உண்டாகும். குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | புதனின் ராசி மாற்றம்: இன்னும் ஒரு வாரத்தில் இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ