புதனின் ராசி மாற்றம்: இன்னும் ஒரு வாரத்தில் இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்

Budh Gochar: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் இயக்கம் மாறிக்கொண்டே இருக்கும். இந்த மாதமும் பல முக்கிய கிரகங்களின் இயக்கம் மாறப்போகிறது. இந்த கிரகங்களில் புதனும் ஒன்று. 

ஜூன் 7ம் தேதி இரவு 7.40 மணிக்கு புதன் கிரகம் ரிஷப ராசிக்குள் நுழைகிறார். அவரது இந்த ராசி மாற்றம் சுக்கிரனின் ராசியில் நடக்கும். புதனும் சுக்கிரனும் நல்ல நண்பர்களாக கருதப்படுகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், இந்த பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

1 /7

புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இருப்பினும் இந்த பெயர்ச்சி 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும், அவர்கள் சுப பலன்களைப் பெறத் தொடங்குவார்கள். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

2 /7

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு புதனின் இந்தப் பெயர்ச்சி இனிமையான பலன்களைத் தரும். குறிப்பாக பணம் மற்றும் தொழில் துறையில் நல்ல பலன்கள் காணப்படும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் அமையும். இந்த காலகட்டத்தில், பெரிய பண ஆதாயங்கள் இருக்கும், இதன் காரணமாக பொருளாதார நிலை வலுப்பெறத் தொடங்கும்.

3 /7

கடகம்: புதனின் இந்தப் பெயர்ச்சி வேலைத் துறையில் புதிய வாய்ப்புகளைத் தரும். வியாபாரம் செய்பவர்களுக்கு இது ஒரு நல்ல நேரமாக இருக்கும். இந்த காலத்தில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். திருமண வாழ்க்கையில் இனிமையான உறவுகள் உருவாகும், காதல் உறவுகள் வளரும்.

4 /7

கன்னி: ரிஷப ராசியில் புதன் நுழைவது கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில், தொழில் ரீதியாக சிறந்த வாய்ப்புகள் இருக்கும். நீண்ட நாட்களாக காத்திருந்த வேலை வாய்ப்புகள் இந்த காலகட்டத்தில் கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். இந்த நேரத்தில், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள், பொருளாதார முன்னேற்றம் இருக்கும்.

5 /7

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில், நீங்கள் விரும்பிய பலன்களைப் பெறுவீர்கள். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் பண ஆதாயம் உண்டாகும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தவர்களின் தேடல் நிறைவேறும். இந்த பெயர்ச்சி  பொருளாதார விஷயங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். பழைய முதலீடுகள் நல்ல பலனைத் தரும்.  

6 /7

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு புதனின் ராசி மாற்றம் நல்ல செய்திகளைத் தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முடிவுகள் காணப்படும். பணி மாறுதல் பெற நினைப்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். பண ஆதாயத்துடன் செலவுகளும் அதிகரிக்கும்.

7 /7

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.