141 நாட்கள் சனி வக்ர பெயர்ச்சி, நாட்டிலும் உலகிலும் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

Shani Vakri 2023: ஜூன் 17, 2023 அன்று, கும்ப ராசியில் இருக்கும் சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடைகிறார், இது நாட்டையும் உலகையும் பாதிக்கும். எனவே வக்ர சனியின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 31, 2023, 04:48 PM IST
  • சனி கர்மாவை அளிப்பவராகவும், நீதியின் கடவுளாகவும் கருதப்படுகிறார்.
  • சனியின் வக்ர இயக்கம் அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கும்.
  • சனி வக்ர பெயர்ச்சி இந்த ராசிகளை 5 மாதம் படுத்துவார்.
141 நாட்கள் சனி வக்ர பெயர்ச்சி, நாட்டிலும் உலகிலும் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? title=

சனி வக்ர பெயர்ச்சி 2023: ஜோதிடத்தின் படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை தங்கள் ராசிகள் மற்றும் இயக்கங்களை மாற்றுகின்றன. இதன் காரணமாக அனைத்து ராசிகளிலும் சாதகமான மற்றும் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுகின்றன. தற்போது, நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் நீதியின் கடவுளான சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடைய தயாராகி வருகிறார். தற்போது நீதிக்கடவுள் சனி, தனது ராசியான கும்ப ராசியில் இருக்கிறார். அடுத்த 2 ஆண்டுகளுக்கு, அவர் இந்த ராசியில் தான் இருப்பார். இப்போது, ​​ஜூன் 17, 2023 இரவு 10.48 மணிக்கு, கும்ப ராசியிலேயே சனி பகவான் வக்ர பெயர்ச்சி ஆகவுள்ளார். 

சனியின் இந்த வக்ர இயக்கம் நவம்பர் 4, 2023 வரை இருக்கும். சனி மொத்தம் 141 நாட்களுக்கு வக்ர நிலையில் தான் இருக்கும். சனி வக்ர நிலையில் இருக்கும் போது, ​​அதன் பலன் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சனி கும்ப ராசியில் இருப்பதால் மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு தற்போது ஏழரை சனி நடக்கிறது.

மேலும் படிக்க | ரோகிணி நட்சத்திரத்தில் சூரியன் பெயர்ச்சி: இந்த 5 ராசிகள் ஜூன் 3 வரை கவனம்

நாடு மற்றும் உலகத்தில் சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் (Shani Vakri 2023 Impact)
* சனி தன் வீட்டில் சுமார் இரண்டரை வருடங்கள் இருப்பார். இதனால் இந்த மாற்றம் நாட்டுக்கு நன்மை பயக்கும்.
* தானியங்களின் நல்ல விளைச்சலுடன் சந்தையில் ஏற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
* சர்வதேச அளவில் நாடு முன்னேறும், ஆனால் இயற்கை சீற்றங்கள் பாதிக்கப்படலாம்.
* தீவிரவாத தாக்குதல்கள் அதிகரிக்கலாம்.
* முக்கிய பதவிகளை வகிப்பவர்கள் தங்கள் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
* நிலையற்ற தன்மை அதிகரிக்கலாம். நோய்களுக்கான சிகிச்சையிலும் புதிய கண்டுபிடிப்புகள் இருக்கும்.
* புதிய மருந்துகள் மற்றும் நுட்பங்கள் உருவாக்கப்படும்.
* அதிகார அமைப்பில் மாற்றங்கள் ஏற்படும்.
* உலகெங்கிலும் உள்ள எல்லைகளில் பதற்றம் தொடங்கும்.
* நாட்டில் கிளர்ச்சி, வன்முறை, மறியல், வேலைநிறுத்தம், வங்கி மோசடி, விமான விபத்து, விமானம் செயலிழப்பு, இடையூறு மற்றும் தீ வைப்பு போன்ற சூழ்நிலைகளை உருவாக்கலாம்.
* இயற்கை சீற்றத்துடன் தீ, நிலநடுக்கம், கேஸ் விபத்து, விமான விபத்து போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.

வக்ர சனியின் பலன்கள்
சனியின் சுப பலன்களால் மக்களின் தடைபட்ட வேலைகள் நிறைவேறும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் தலைதூக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். பதவி உயர்வு ஏற்படலாம். பணியின் பொறுப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. தொழிலதிபர்களுக்கு பணியிட மாற்றம் ஏற்படும். வசிக்கும் இடமும் மாறலாம். அதே சமயம், அதன் அசுப பலன் காரணமாக, சிலருக்கு கால் அல்லது எலும்பில் காயம் ஏற்படலாம். கடன் வாங்க நேரிடலாம். உத்தியோகத்தில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன் - இந்த 3 ராசிகளுக்கு பண மழை நிச்சயம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News