Venus Transit: கிரகங்கள் அவ்வப்போது தங்கள் ராசிகளை மாற்றிக்கொண்டே இருக்கின்றன. கிரக மாற்றங்களால் பல சுப மற்றும் அசுப ராஜயோகங்கள் உருவாகின்றன. சில சமயங்களில் கிரகங்கள் பெயர்ச்சியாகி ஒரே ராசியில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்களும் இருப்பதுண்டு. இவை கிரக சேர்க்கை எனப்படும். கிரக பெயர்ச்சியால் ஏற்படும் ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகள் மட்டுமின்றி உலக மற்றும் நாட்டின் நிகழ்வுகளிலும் காணப்படும். அடுத்த மாதம் அதாவது மார்ச் மாதத்தில் 3 ராஜயோகங்கள் உருவாகவுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதலில் ஏற்கனவே கும்ப ராசியில் உள்ள சனி பகவானின் காரணமாக ஷஷ மகாபுருஷ ராஜயோகம் உருவாகிறது. மகர ராசியில் இருக்கும் செவ்வாய் ரூசக ராஜயோகத்தை உருவாக்குகிறார். மார்ச் மாதம் சுக்கிரன் மீன ராசியில் பிரவேசிக்கவுள்ளார். இதன் காரணமாக மாளவ்ய ராஜயோகம் உருவாகும். 


ஜோதிட கணக்கீடுகளின் படி, சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் மாதத்தில் 3 ராஜயோகங்கள் உருவாகின்றன. இந்த ராஜயோகங்களின் உருவாக்கத்தால் அனைத்து ராசிகளின் வாழ்விலும் மாற்றங்கள் ஏற்படும். எனினும், சில ராசிகளுக்கு இதனால் தலைவிதியில் மாற்றம் ஏற்படும். இவர்களுக்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பண லாபம் ஏற்படும். சனி, செவ்வாய் மற்றும் சுக்கிரனால் ஏற்படும் ராஜயோகங்களால் அதிர்ஷ்ட மழையில் நனையவுள்ள ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.


ரிஷபம் (Taurus)


ஜோதிட கணக்கீடுகளின் படி அடுத்த மாதம் உருவாகும் 3 ராஜயோகங்களால் ரிஷப ராசிக்காரர்களுக்கு அனுகூலமான சூழல் உருவாகும். இந்த நேரத்தில் இவர்களின் தொழில் மற்றும் பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் அடுத்த நிலைக்கு செல்ல நினைப்பவர்களுக்கு இந்த ராஜயோகங்கள் ஏணிப்படிகளாக உதவும். நிதி நிலை நன்றாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். பணியிடத்தில் திடீரென மதிப்பும் மரியாதையும் கூடும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சுற்றுலா சென்று வருவீர்கள்.


மேலும் படிக்க | 12 ஆண்டுக்கு பின் இணையும் குரு சுக்கிரன், 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை


மிதுனம் (Gemini) 


இந்த 3 ராஜயோகங்களும் மிதுன ராசிக்காரர்களுக்கு மிக சுபமாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் கடின உழைப்பால் நல்ல பலன்கள் கிடைக்கும். நீங்கள் செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவீர்கள். வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல ஆசை உள்ள மிதுன ராசிக்காரர்களின் ஆசை இப்போது நிஜமாகும். வணிகத்தில் உள்ள மிதுன ராசிக்காரர்களுக்கு இப்போது லாபம் அதிகரிக்கும். இப்போது முதலீடுகளுக்கு ஏற்ற நேரமாக இருக்கும். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் ஏற்படும்.


துலாம் (Libra)


3 ராஜயோகங்களின் உருவாக்கம் துலா ராசிக்காரர்களுக்கு அனுகூலமான சூழலை ஏற்படுத்தும். அலுவலக பணிகளில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ய வாய்ப்பு கிடைக்கும். இதனால் மனதில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை. )


மேலும் படிக்க | கும்ப ராசியில் சனியின் ஆட்டம்.. இந்த 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ