கும்ப ராசியில் சனியின் ஆட்டம்.. இந்த 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்

வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி கும்ப ராசியில் சனி பகவான் அஸ்தமிக்கப் போகிறார். இதனால் 5 ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை பெறுவார்கள். அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 7, 2024, 04:14 PM IST
  • சனியின் அஸ்தமனத்தால் சுப பலன்கள் கிடைக்கும்.
  • வங்கி சேமிப்பும் அதிரடியாக உயரும்.
  • பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள்.
கும்ப ராசியில் சனியின் ஆட்டம்.. இந்த 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் title=

வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி கும்ப ராசியில் சனி பகவான் அஸ்தமிக்கப் போகிறார். ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்களின் அஸ்தமனம் என்பது சூரியனுக்கு மிக அருகில் கிரகங்கள் பயணிக்கும் காலமாகும். இக்காலத்தில் கிரகங்கள் வலுவிழந்து பலவீனமாக இருக்கும். அந்தவகையில் தற்போது சனி அஸ்தமனமாவதால், இக்காலத்தில் சனி வலுவிழந்து இருப்பார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு சுப மற்றும் அசுப பலன்களை பெறுவார்கள். மேலும் பல ராசிகளின் மீது சனியின் தாக்கம் குறைவாகவே இருக்கும். மேலும், மேஷம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்களுக்கு மிகுந்த பலனைத் தரக்கூடும். எனவே எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சனியின் அஸ்தமனத்தால் சுப பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம்: சனியின் அஸ்தமனத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு பாதக பாதிப்புகள் குறையும். இந்த நேரத்தில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அவற்றை எளிதில் சமாளிப்பீர்கள். பண வரவு, வருமானம் மற்றும் பொருளாதார நிலை சிறப்பாகவும் திருப்திகரமாகவும் இருக்கும். இதனால் வங்கி சேமிப்பும் அதிரடியாக உயரும். பொருளாதார உயர்வும் மேஷ ராசிக்காரர்களை மகிழ்ச்சியடையச் செய்யும். அதுமட்டுமின்றி நீங்கள் பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். நோய்கள் நீங்கும் கண்டங்கள் விலகும்.

மிதுனம்: சனியின் அஸ்தமனத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு முழுமையான அதிர்ஷ்டத்தை பெறுவார்கள். வெளிநாடு வியாபாரத்தால் நிதி ஆதாயங்கள் ஏற்படும். தொழில் சிறப்பாக இருக்கும். நல்ல வருமானம் கிடைக்கும். வியாபாரத்தில் பெரும் லாபத்தைப் பெறுவீர்கள். நிதி நிலை மேம்படும். துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும். மகிழ்ச்சியான தருணத்தை அனுபவிப்பீர்கள். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வந்து சேரும். பண வருமானம் வந்தாலும் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகள் மீது குரு பார்வை, கோடீஸ்வர யோகம் ஆரம்பம்

கடகம்: சனியின் அஸ்தமனத்தால் கடக ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயம் உண்டாகும். பல நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். வேலை மாற்றம் ஏற்படும். இதனால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். அலுவலக வேலையில் இருக்கும் கடக ராசிக்காரர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். செலவுகள் அதிகரிக்கும் அதை சுப செலவுகளாக மாற்றுங்கள்.

சிம்மம்: சனியின் அஸ்தமனத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு மண அமைதி உண்டாகும். அலுவலக பணியால் திருப்தி அடைவீர்கள். நண்பர்களிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். மனைவியுடனான உறவு சிறப்பாக இருக்கும். மிகவும் நன்றாக இருக்கும். பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சிலர் வெளிநாடு, வெளியூர் செல்ல வாய்ப்பு ஏற்படும். சமுதாயத்திலும் வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் மதிப்பும், மரியாதையும் கூடும். சகோதரர்கள் வழியில் உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணமெல்லாம் தேடி வரும்.

விருச்சிகம்: சனியின் அஸ்தமனத்தால் விருச்சிக ராசிக்காரர்கள் சுப பலன்களை பெறுவார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த பண வரவை பெறுவீர்கள். பொருளாதார நெருக்கடியால் தவித்து வந்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு இப்போது நிவாரணம் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | 18 ஆண்டுக்கு பிறகு இணையும் ராகு - சூரியன், இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், ராஜ பொற்காலம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News