Sukran Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைகப்படுகின்றன. ராசிகள் தவிர, கிரகங்களில் நட்சத்திரம், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவை அனைத்தின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் காணப்படும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுக்கிரன் அன்பு, அழகு, ஆடம்பரம், படைப்பாற்றல், செல்வம், செழிப்பு, பேச்சாற்றல், அறிவாற்றல், புலமைத்துவம் ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ளார். இவரது நிலை மற்றும் இயக்கங்களில் மாற்றம் ஏற்படும்போது மனிதர்களின் வாழ்வில் இந்த அம்சங்களில் மாற்றங்கள் ஏற்படும். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால், அந்த நபர் மற்றவர்களை தன் பக்கம் ஈர்க்கும் ஆற்றல் கொண்டவராகவும், படைப்பாற்றல் மற்றும் கலைத்திறன் உடையவராகவும் இருக்கிறார். சுக்கிரன் அருள் பெற்றவர்கள் வாழ்க்கையில் ஆடம்பரத்தையும் செழிப்பையும் அனுபவிக்கிறார்கள். அதே சமயம், சுக்கிரன் அம்சம் பலவீனமாக இருப்பவர்கள் காதலில் ஏமாற்றம், நிதி நெருக்கடி மற்றும் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.


மே 19, 2024 அன்று சுக்கிரன் மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷபம் ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார். சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் காணக்கிடைக்கும். இவர்களுக்கு இந்த பெயர்ச்சி மங்களகரமானதாக இருக்கும். பண வரவு அதிகமாகும். அந்த ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 


ரிஷபம் (Taurus)


ரிஷபத்தில்தான் சுக்கிரன் பெயர்ச்சி ஆகிறார். ஆகையால் இவர்களுக்கு அதிகப்படியான லாபம் கிடைக்கும். இவர்கள் சுக்கிரன் பெயர்ச்சியால் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். சுக்கிரன் உங்கள் வாழ்க்கையின் பல பகுதிகளில் நல்ல மற்றும் சாதகமான பலன்களை அளிப்பார். செல்வம் பன்மடங்கு அதிகரிக்கும். பல புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். உத்தியோகத்தில் பல புதிய வாய்ப்புகள் அமையும்.


சிம்மம் (Leo)


ரிஷப ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிக பலன் தரும். இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக பதவி உயர்வுக்காக காத்திருந்தவர்களின் காத்திருப்பு முடிவுக்கு வர வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் பல புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும்.


மேலும் படிக்க | கிருத்திகையில் குரு பெயர்ச்சி... ஜாக்பாட் பலன்களை பெறும் ‘4’ ராசிகள் இவை தான்..!!


துலாம் (Libra)


சுக்கிரன் பெயர்ச்சி காரணமாக, துலாம் ராசிக்காரர்களுக்கு புதிய வேலைகளைத் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த காலத்தில் பண வரவு அதிகமாகும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். சுக்கிரனின் பெயர்ச்சியால் பழைய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.


மீனம் (Pisces)


மீன ராசிக்காரர்களின் வாழ்வில் சுக்கிரன் பெயர்ச்சி மகிழ்ச்சியை அள்ளித் தரும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். காதல் உறவுகளில் வெற்றி பெறுவீர்கள். மீன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். திடீர் நிதி ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் ஒரு பெரிய ஒப்பந்தத்தை கையெழுத்திடுவீர்கள். லாபம் அதிகரிக்கும். 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: பணம், பதவி, புகழ்... இந்த ராசிகளுக்கு சனி அருளால் சகலமும் கிடைக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ