கிருத்திகையில் குரு பெயர்ச்சி... ஜாக்பாட் பலன்களை பெறும் ‘4’ ராசிகள் இவை தான்..!!

Guru Nakshatra Peyarchi & LUCKY Zodiacs: ஜோதிட சாஸ்திரத்தில் குரு பகவான், ஞானம், அறிவு, திருமண யோகம், மனம் நிறைந்த வாழ்க்கை ஆகியவற்றை வழங்கும் காரகராக கருதப்படுகிறார். சனி பெயர்ச்சிக்கு அடுத்தப்படியாக, குரு  பெயர்ச்சி, ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஜோதிட சாஸ்திரத்தில், அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் கிரகங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. கிரக பெயர்ச்சியினால், ராசிகளுக்கு உண்டாகும் பலன்களால் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றன.

1 /7

குரு பெயர்ச்சி: மே மாத தொடக்கத்தில், குரு பகவான் தனது ராசியை மாற்றியிருந்தார். மே 1 ஆம் தேதி குரு மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷபம் ராசிக்குள் நுழைந்தார். அதே நேரத்தில், மாத இறுதிக்கு முன்பாக, தனது நட்சத்திரத்தை மாற்ற உள்ளார்.

2 /7

குரு நட்சத்திர பெயர்ச்சி: மே 29 புதன்கிழமை இரவு 09:47 மணிக்கு குரு தனது நட்சத்திர மாற்றுகிறார். இந்த காலகட்டத்தில், குரு பகவான் கிருத்திகை நட்சத்திரத்தில் நுழைவார்.  இதனால் 4 ராசிகளுக்கு சுப யோகம் உண்டாகும் என்கின்றனர் ஜோதிடர்கள். 

3 /7

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு குருவின் நட்சத்திர பெயர்ச்சி சாதகமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் வெற்றி பெறலாம். உத்தியோகஸ்தார்கள் தங்கள் பணியில் சிறப்பாக செயல்படுவார்கள். குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஜூன் மாதம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

4 /7

கடக ராசிக்காரர்களுக்கு குருவின் நட்சத்திரத்தில் ஏற்படும் மாற்றத்தால் நல்ல செய்திகள் வரலாம். கடக ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் மே 29க்கு பிறகு மாறலாம். வியாபாரத்தில் லாபமும் செல்வமும் அதிகரிப்பதோடு புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். திருமணத்தில் இருந்த தடைகளும் நீங்கும்.

5 /7

துலாம் ராசிக்காரர்களுக்கு குருவின் நட்சத்திர மாற்றம் பலன் தரும். பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படும். நிதி விஷயங்களில் ஆதாயம் இருக்கும். பொருளாதாரம் உயரும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு. வாழ்க்கையில் நிம்மதி இருக்கும்.

6 /7

மகரம் ராசிக்காரர்கள் குருவின் நட்சத்திரத்தில் ஏற்படும் மாற்றத்தால் நன்மை அடைவார்கள். நீங்கள் கடன் தொல்லையில் இருந்தால் விரைவில் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். குடும்பத்துடன் எங்காவது வெளியூர் செல்லும் வாய்ப்பு உண்டு. குடும்ப உறுப்பினர்களிடையே நெருக்கம் அதிகரிக்கும். தொழிலதிபர்களுக்கு வியாபாரத்தில் வெற்றியும், வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வும் கூடும்.

7 /7

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.