சனி வக்ர பெயர்ச்சி: பணம், பதவி, புகழ்... இந்த ராசிகளுக்கு சனி அருளால் சகலமும் கிடைக்கும்

Sani Peyarchi Palangal: சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். ஒவ்வொரு ராசியிலும் அவர் அதிக நாட்களுக்கு இருப்பதால், ராசிகளில் அவரது தாக்கமும் அதிகமாக இருக்கும்.

Sani Peyarchi Palangal: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான், தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் உள்ளார். சமீபத்தில் அவர் நட்சத்திர பெயர்ச்சி அடைந்தார். ஜூன் 30 ஆம் தேதி அவர் வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார்.  நட்சத்திர பெயர்ச்சி மற்றும் சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நல்ல பலன்கள் கிடைக்கும். இவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். அந்த ராசிகளை பற்றி இங்கே காணலாம். 

1 /11

ஜோதிட கணக்கீடுகளின் படி சனி பகவான் 2023 ஆம் ஆண்டு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பெயர்ச்சி ஆனார்.  அவர் 2025 ஆம் ஆண்டு வரை இந்த ராசியிலேயே இருப்பார். எனினும் வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி, உதயம், அஸ்தமனம் போன்ற மாற்றங்கள் இருக்கும்.   

2 /11

ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவானின் அனைத்து வித அசைவுகளுக்கும், இயக்கங்களுக்கும் அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கமும் ராசிகளில் அதிகமாக இருக்கின்றது.  

3 /11

சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் உள்ளார். அவர் மே 12 ஆம் தேதி நட்சத்திர பெயர்ச்சியை மேற்கொண்டார். ஜூன் 30 ஆம் தேதி அவர் வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். இவை இரண்டும் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன. 

4 /11

சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான அற்புதங்கள் நிகழும். இவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். அந்த ராசிகளை பற்றி இங்கே காணலாம். 

5 /11

மேஷம்: சனி வக்ர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு அற்புதமான நற்பலன்களை அள்ளித்தரவுள்ளது. பணி இடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பும் புரிதலும் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். 

6 /11

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சி நல்ல பலன்களை அளிக்கும். முறையான முயற்சியால் அபரிமிதமான செல்வத்தை சம்பாதிக்கலாம். பல்வேறு வழிகளில் இருந்து பண வரவு கூடும். தடைபட்ட வேலைகள் முடிவடைந்து நன்மை தரும். குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் ஆதரவால் நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். 

7 /11

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சி பல நல்ல செய்திகளை கொண்டு வரும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். வணிகத்தில் பல வித முன்னேற்றங்கள் ஏற்படும். 

8 /11

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி மகிழ்ச்சியை அளிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் இருக்கும். சட்ட சிக்கல்களில் நிவாரணம் கிடைக்கும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். 

9 /11

கும்பம்: சனி வக்ர பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு இப்போது நல்ல வாய்ப்பு கிடைக்கும். அனைத்து முயறிசிகளிலும் வெற்றி காண்பீர்கள். 

10 /11

சனி பகவானின் அருள் பெற, சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளறு பதிகம் ஆகியவற்றை கூறலாம். ஏழை எளியவர்களுக்கு உதவுபவர்களை சனிபகவான் எப்போதும் தொந்தரவு செய்ய மாட்டார். ஆகையால் நம்மால் ஆனவரை நலிந்தோருக்கு உதவுவது நல்லது.  

11 /11

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை