Sukran Peyarchi Palangal : ஜோதிட சாஸ்திரத்தில், அனைத்து கிரகங்களிலுமே சுக்கிரன் மிகவும் சுப கிறக்கமாக கருதப்படுகிறது. அதனுடன் இந்த கிரகம் செல்வம், ஆடம்பரம், அன்பு, அழகு, போன்றவற்றை அள்ளி வழங்கும் என்பது ஐதீகம். ஒருவரிடன் ஜாதகத்தில் சுக்கிரன் சுப ஸ்தானத்தில் இருந்தால், அந்த ராசி நபருக்கு அரசனைப் போல வாழ்க்கையும், மகிழ்ச்சியும் கிடைக்கும். இது தவிர, சுக்கிரனின் நிலையில் ஏற்படும் மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் காதல், திருமண வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுவார், அதனுடன் நிதி நிலையிலும் பாதிப்பு ஏற்படும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுக்கிரன் பெயர்ச்சி:
இந்நிலையில் நாளை சுக்கிரன் கடக ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். அதாவது ஜூலை 7, 2024, அதிகாலை 04:39 மணிக்கு, சுக்கிரன் கடக ராசிக்குள் நுழையப் போகிறார். இதற்குப் பிறகு, சுக்கிரன் 31 ஜூலை அன்று சிம்ம ராசிக்கு மாற்றுவார். தற்போது 23 நாட்கள் கடக ராசியில் பயணிக்க போகும் சுக்கிரன் 12 ராசிகளில் 5 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான செல்வத்தையும், திகட்ட திகட்ட மகிழ்ச்சியையும் தருவார். எனவே சுக்கிரன் பெயர்ச்சி எந்த 5 ராசிக்காரர்களின் தலைவிதியை மாற்றப் போகிறது என்பதை பார்ப்போம்.


இந்த 5 ராசிக்காரர்களின் கஜானாவை நிரப்புவார் சுக்கிரன்:


ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சியால் பெரும் நிதி ஆதாயத்தைத் தரும். வியாபாரத்தில் பெரும் லாபம் கிடைப்பதுடன் சிக்கிய பணத்தை திரும்பப் பெறுவீர்கள். நிதி நிலைமை மும்பை விட சிறப்பாக இருக்கும், பெரிய அளவில் லாபத்தை பெறலாம். புதிய வேலை வாஉப்பு உங்களை தேடி வரும். இந்த மாற்றங்கள் உங்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை தரும். காதல் வாழ்க்கை பொறுத்த வரை எப்போதும் போல சிறப்பாகவே இருக்கும்.


மேலும் படிக்க | நாளை சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல நாட்கள் ஆரம்பம்


மிதுனம்: சுக்கிரன் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு பல வித நன்மைகளைத் தரும். குடும்ப வாழ்க்கையில் அளவில்லா மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். எதிர்பாராத இன்பமான தருணங்கள் உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்வில் அன்பு அதிகரிக்கும். மூதாதையர் சொத்துகள் உங்களை  தேடி தானாகவே வரும் அல்லது வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.


கன்னி: சுக்கிரன் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு பல தரப்பில் இருந்து நல்ல சுப பலன்களை தரும். வாழ்க்கைத் தரம் மும்பை விட தரமாகவும், சிறப்பாகவும் இருக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். மனைவியுடன் அன்யோன்யமான நேரத்தை செலவிடுவீர்கள். பண பலன் உண்டாகும்.


துலாம்: துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன் ஆவார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி பெருகும். செல்வ செழிப்பு உண்டாகும். நன்மைகள் உண்டாகும். வேலை வாய்ப்பு உங்களைத் தேடி வரும். வியாபாரம் பெருகும். புதிய வழிகளில் இருந்து பணம் உங்களைத் தேடி வரும். நல்ல செய்திகளையும் பெறலாம். மூதாதையர் சொத்துக்கள் மூலம் லாபம் உண்டாகும்.


மகரம்: மகர ராசியினருக்கு சுக்கிரன் பெயரச்சியால் நல்ல நாட்கள் ஆரம்பிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும். காதலர்களிடையே அன்பு அதிகரிக்கும். பதவி உயர்வு அல்லது புதிய வேலை வாய்ப்பு பெறலாம். முதலீடு மூலம் லாபம் உண்டாகும். நல்ல நிதி நிலை ஆதாயம் உண்டாகும், இதனால் மகிழ்ச்சி அடைவீர்கள்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: தீபாவளி வரை இந்த ராசிகளுக்கு ராஜ பொற்காலம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ