ஜூலை 7 முதல் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்: கொட்டிக்கொடுப்பார் சுக்கிரன்

Sukran Peyarchi Palangal: சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படு. எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 5, 2024, 12:28 PM IST
  • கடக ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும்.
  • கடின உழைப்பின் பலனை இப்போது பெறுவார்கள்.
  • பொருளாதார நிலை முன்பை விட வலுவாக இருக்கும்.
ஜூலை 7 முதல் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்: கொட்டிக்கொடுப்பார் சுக்கிரன் title=

Sukran Peyarchi Palangal: ஜூலை மாதம் கிரகப் பெயர்ச்சிகளின் பார்வையில் மிக முக்கியமான மாதமாக பார்க்கப்படுகின்றது.  இந்த மாதம் 4 பெரிய கிரகங்களின் ராசிகள் மாறப்போகின்றன. அதில் ஒன்று சுக்கிரன்.

செல்வம், செழிப்பு, தரமான வாழ்க்கை, பேச்சாற்றல், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ள சுக்கிரன் ஜூலை 7 ஆம் தேதி பெயர்ச்சி ஆகவுள்ளார். அவர் கடக ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படு. எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும். இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும். நீண்ட நாட்களாக காத்திருந்த பல நல்ல செய்திகள் வந்து சேரும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 

1. மேஷம் (Aries)

சுக்கிரன் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களை அள்ளித் தரும். வியாபாரிகளுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் வளர்ச்சியும் லாபமும் அதிகரிக்கும். பண அவரவு அதிகமாகும். ஆகையால், நிதி நிலை நன்றாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்சியும் புரிதலும் அதிகமாகும். அலுவலக பணிகளில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. 

2. ரிஷபம் (Taurus)

சுக்கிரன் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல காலத்தை கொண்டு வரும். பணி இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல லாபம் இருக்கும். இதனால் நிதி நிலை வலுவடையும். இந்த காலத்தில் பண வரவு அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். 

3. கடகம் (Cancer)

கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி பல வித நல்ல செய்திகளை கொண்டு வரும். ஜூலை மாதம் உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். வருமானம் அதிகரிப்பதால் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். முன்னர் செய்த முதலீட்டால் லாபம் அடைவீர்கள். பல நாட்களாக எங்கெங்கோ சிக்கி இருந்த பணம் திரும்பக் கிடைக்கும். இப்போது முதலீடு செய்தாலும், அதனால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

4. கன்னி (Virgo)

சுக்கிரன் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு அமோகமான பலன்களை அளிக்கும். தொழிலில் சாதகமான பலன்கள் கிடைக்கும். கடின உழைப்பிற்கான பலன் முழுமையாக கிடைக்கும். இது தொழிலில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் லாபம் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. பண வரவு இந்த காலத்தில் அதிகமாகும். எதிர்பாராத இடங்களிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும்.

மேலும் படிக்க | சனியின் முக்கிய மாற்றம்: தீபாவளிக்கு முன் இந்த ராசிகளுக்கு திகட்ட திகட்ட வெற்றி

5. துலாம் (Libra)

துலா ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி வரப்பிரசாதமாக அமையும். அலுவலக பணிகளில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயரும் கிடைக்கும். வியாபாரம் செய்துகொண்டு இருப்பவர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். பொருளாதார நிலை இப்போது மிக வலுவாக இருக்கும்.

6. தனுசு (Sagittarius)

கடக ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும். கடின உழைப்பின் பலனை இப்போது பெறுவார்கள். வியாபாரம் செய்பவர்களுக்கும் இந்த காலகட்டத்தில் தங்கள் கடின உழைப்பின் முழு பலனும் கிடைக்கும். அது உங்களது லாபத்தில் பிரதிபலிக்கும். பண வரவு அதிகமாவதால் பொருளாதார நிலை முன்பை விட வலுவாக இருக்கும். திடீர் நிதி ஆதாயம் ஏற்படும். இதனால் வாழ்க்கைத் தரம் உயரும்.

7. மகரம் (Capricon)

கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சி, மகர ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றத்தை அளிக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் மகர ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் காதல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பலன்களைப் பெறுவீர்கள். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | அஸ்த நட்சத்திரத்தில் இரண்டாம் பாதத்திற்கு பெயர்ச்சியாகும் கேது யாருக்கு நல்லது செய்வார்? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News