ஜூலை மாதத்தில் பல பெரிய கிரகங்கள் தங்களின் ராசியை மாற்றுகின்றன. இதில் சனி பக்கவானும் அடங்குவர். அதன்படி வருகிற ஜூலை 12 அன்று, சனி பகவான் அதன் சொந்த ராசியான மகரத்தில் வக்ர நிலையில் வருவார். மேலும் மகர ராசியில் பெயர்ச்சிக்கு பிறகு 2023 ஜனவரி 17 ஆம் தேதி வரை சனி பகவான் இதே ராசியில் பயணிப்பார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதமே, சனி பகவான் தனது ராசியை மாற்றி கும்பத்தில் நுழைந்து ஜூன் 5 ஆம் தேதி பிற்போக்குத்தனமாக மாறினார். தற்போது மீண்டும் சனி தனது சொந்த ராசியான மகர ராசியில் ஜூலை 12 ஆம் தேதி வக்ர பெயர்ச்சி அடைவார். எனவே சனி பகவானின் இந்த மாற்றத்தால் மீண்டும் இரண்டு ராசிக்காரர்கள் சனியின் பிடியில் சிக்கித் தவிக்க போகிறார்கள். அவை எந்த ராசிகள் என்பதை காண்போம்.


மேலும் படிக்க | Weekly Horoscope: இந்த 4 ராசிக்காரர்கள் ஜூலை 10 வரை கவனமா இருக்கணும் 


இந்த ராசிக்காரர்கள் சனி தசை பிடியில் சிக்குவார்கள்
சனி இடம் மாறியவுடன், அதன் சுப, அசுப பலன்கள் அனைத்து ராசிகளிலும் காணப்படும். அதன்படி சனி மகர ராசியில் நுழைந்தவுடன் மிதுனம், துலாம் ராசிக்காரர்கள் சனி தசையின் பிடியில் சிக்கிக் கொள்வார்கள். மேலும் ஜனவரி 17ம் தேதி வரை இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் சனியின் கொடுமையான பார்வை இருக்கும். அத்துடம் சனி இந்த ராசிகளில் இரண்டரை வருடங்களுக்கு பதிலாக 6 மாதங்கள் மட்டுமே இருப்பார்.


இந்த இரண்டு ராசிக்காரர்களும் முக்தி அடைவார்கள்
ஜோதிட சாஸ்திரப்படி ஏப்ரல் 29 ஆம் தேதி சனி கும்ப ராசியில் பிரவேசித்ததும் கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி தசை ஆரம்பித்தது. ஆனால் ஜூலை 12 ஆம் தேதி சனி மகர ராசியில் சஞ்சரிக்கும் போது இந்த இரண்டு ராசிக்காரர்களும் மீண்டும் சனி தசை விலகும், அத்துடன் இந்த விலகு வெறும் 6 மாதங்களுக்கு மட்டுமே இருக்கும். இதற்குப் பிறகு, ஜனவரி 17, 2023 முதல், மீண்டும் சனி தசையின் பிடியில் இவர்கள் சிக்கிக் கொள்வார்கள்.


சனி தசையால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கும் பரிகாரங்கள்
சனியின் கொடூரமான பார்வை ஒரு நல்ல மனிதனை சீரழிக்கிறது. சனி தசையால், ஒரு நபர் பல ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடும். அத்தகைய சூழ்நிலையில், இந்த நேரத்தில் ஒரு சில ராசிக்காரர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எனவே சனியின் தாக்கங்களைத் தவிர்க்க, முடிந்தவரை ஏழைகளுக்கு உதவுங்கள். சனிக்கிழமையன்று சனிபகவானுக்கு கடுகு எண்ணெய் வழியவும். சுந்தரகாண்டத்தையும் பாராயணம் செய்யவும்.  


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஜூலை மாதம் இந்த ராசிகளுக்கு அன்னை லட்சுமியின் சிறப்பு அருள் கிடைக்கும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR