ஜூலை மாதம் இந்த ராசிகளுக்கு அன்னை லட்சுமியின் சிறப்பு அருள் கிடைக்கும்

July 2022 Lucky Zodiacs: ஜூலை மாதம் சில ராசிகளுக்கு அமோகமாக இருக்கப்போகிறது. இந்த ராசிகளுக்கு அன்னை மகாலட்சுமியின் சிறப்பு அருள் கிடைக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 5, 2022, 12:32 PM IST
  • ஜோதிட சாஸ்திரப்படி மிதுன ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகளாகக் கருதப்படுகிறார்கள்.
  • இந்த ராசிக்காரர்கள் மீது எப்போதும் அதிர்ஷ்ட காற்று அடிக்கும் என்பது ஐதீகம்.
  • சிம்ம ராசிக்காரர்களுக்கு அன்னை லக்ஷ்மியின் சிறப்பு அருள் உண்டு.
ஜூலை மாதம் இந்த ராசிகளுக்கு அன்னை லட்சுமியின் சிறப்பு அருள் கிடைக்கும் title=

ஜூலை 2022, அதிர்ஷ்டக்கார ராசிகள்: இந்து மதத்தில் அன்னை லட்சுமியின் வழிபாடு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அன்னை லட்சுமி செல்வத்தின் தெய்வமாக கருதப்படுகிறார். லட்சுமி தேவியை வழிபட்டால் வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் உண்டாகும் என்பது நம்பிக்கை. 

ஜோதிடர்களின் கூற்றுப்படி, லட்சுமி தேவி வசிக்கும் வீட்டில் பணத்திற்கு பஞ்சம் இருக்காது. ஜோதிடத்தின் படி, சில அதிர்ஷ்டக்கார ராசிக்காரர்களுக்கு அன்னை லட்சுமியின்ன் சிறப்பு அருள் எப்போதும் கிடைக்கும். ஜூலை மாதத்தில் சில குறிப்பிட்ட ராசிக்காரர்களின் மீது லட்சுமி தேவியின் அபரிமிதமான அருள் இருக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மிதுனம்:

ஜோதிட சாஸ்திரப்படி மிதுன ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகளாகக் கருதப்படுகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் மீது எப்போதும் அதிர்ஷ்ட காற்று அடிக்கும் என்பது ஐதீகம். அன்னை லட்சுமியின் அருளால் இவர்களுக்கு பணப் பற்றாக்குறை ஏற்படாது. இந்த ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள். இதனால் இவர்கள் அனைத்திலும் வெற்றி பெறுகிறார்கள்.

மேலும் படிக்க | துன்பங்களை போக்கும் கந்தசஷ்டி விரதம் இருப்பது எப்படி 

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு அன்னை லக்ஷ்மியின் சிறப்பு அருள் உண்டு. இந்த ராசிக்காரர்கள் தங்கள் தைரியம் மற்றும் கடின உழைப்பின் பலத்தால் அனைத்து பணிகளிலும் வெற்றி பெறுவார்கள். இந்த ராசிக்காரர்கள் சமூகத்தில் உயர்ந்த, கௌரவமான பதவியைப் பெறுவார்கள்.

துலாம்:

துலா ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள். இவர்கள் மக்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதில் வல்லவர்கள்.  இந்த ராசிக்காரர்கள் முதல் சந்திப்பிலேயே அனைவரையும் தங்கள் பக்கம் இழுத்துவிடுவார்கள். இந்த ராசிக்காரர்கள் ஒரு பணியை துவக்கி விட்டால், அதை முடித்த பின்னர்தான் நிம்மதி அடைவார்கள். துலாம் ராசிக்காரர்களுக்கு அன்னை லக்ஷ்மியின் ஆசிர்வாதத்தால் பணப் பற்றாக்குறை ஏற்படாது.

தனுசு:

தனுசு ராசிக்காரர்கள் தங்களின் பணி செய்யும் பாணியால் மக்களின் பாராட்டுகளைப் பெறுவார்கள். அவர்கள் வாழ்வின் அனைத்து திருப்பங்களிலும் அன்னை லட்சுமியின் ஆசீர்வாதத்தைப் பெறுகிறார்கள். லட்சுமி தேவி மற்றும் சுக்ரதேவரின் சிறப்பு அருளால், அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் வசதிகளையும் பெறுகிறார்கள்.

மீனம்:

மீன ராசிக்காரர்கள் மிகவும் கடின உழைப்பாளிகளாகக் கருதப்படுகிறார்கள். செல்வத்தைக் குவிப்பதில் இவர்கள் பெரும் வெற்றியை பெறுகிறார்க்ள். அவர்கள் இயல்பில் நேர்மையானவர்கள் மற்றும் இரக்கமுள்ளவர்கள். ஜூலை மாதத்தில், இந்த ராசிக்காரர்களுக்கு அன்னை லட்சுமியின் அபரிமிதமான அருள் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சுக்கிரன் அருளால் இன்னும் 10 நாட்களில் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், தொட்டது துலங்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News