சூரியப் பெயர்ச்சி 2023 பலன்கள்: கிரகங்களின் இயக்கங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமின்றி, கிரக சேர்க்கைகளும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். அவற்றால் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாவதுண்டு. அதன்படி ஜோதிடத்தில், வெற்றி, தன்னம்பிக்கை, தந்தை, ஆன்மா, வேலை, நிர்வாகம் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றின் காரணியாக சூரிய பகவான் கருதப்படுகிறார். சூரியனின் ராசி மாற்றம் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பாதிக்கிறது. அதன்படி வருகிற ஜூன் 15, 2023 அன்று, மாலை 06.29 மணிக்கு சூரியன் பெயர்ச்சிக்குப் (ரோகிணி நட்சத்திரம்) பிறகு மிதுன ராசியில் பிரவேசிக்கப் போகிறது. மிதுனத்தில் 32 நாள்கள் சஞ்சாரம் செய்த பின்னர் சூரியன் மீண்டும் தனது ராசியை மாற்றுவார். இதனால் குறிப்பாக மூன்று ராசிக்காரர்களுக்கு மிதுன ராசியில் சூரியனின் பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு திடீரென பண பலன்கள் கிடைக்கும். அதேபோல் தொழில் மாறும் வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். அத்துடன் பொருளாதார நிலையில் ஏற்றம் ஏற்படலாம். எனவே இந்த சூரியப் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும் என்பதை தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் சூரியனின் பெயர்ச்சியால் மினுமிணுவென பிரகாசிக்கும்


மிதுன ராசி
மிதுன ராசிக்காரர்களுக்கு சூரியனின் பெயர்ச்சி பல நன்மைகளைத் தரும். இந்த ராசிக்காரர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். உங்களின் உயர் பதவியில் இருப்பவர்களுடன் உறவுகள் ஏற்படும். உங்கள் புத்திசாலித்தனம் மற்றும் பேச்சின் அடிப்படை vcdrszqz யில் பல விஷயங்களைச் செய்து முடிப்பீர்கள். இந்த நேரம் மிதுன ராசிக்காரர்களுக்கு பண பலன்களையும் தரும். நீங்கள் எதிர்பாராத பண பலத்தைப் பெறுவீர்கள், மேலும் இந்த நேரத்தில் நீங்கள் சேமிக்கவும் முடியும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், ஆற்றல் நிறைந்தவராக இருப்பீர்கள். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 


மேலும் படிக்க | வாஸ்து தோஷ பரிகாரம்: வீட்டின் தவறுதலாக கூட இந்த வேலையை செய்யாதீர்கள்!


துலாம் ராசி
சூரியனின் ராசி மாற்றம் துலாம் ராசிக்காரர்களுக்குப் பல வகைகளில் நன்மையை தரும். உங்கள் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். நீங்கள் செய்யும் நல்ல செயலுக்கு வெற்றி பெறுவீர்கள். வீட்டில் ஏதேனும் சமய அல்லது சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். உங்களின் அனைத்து பெரிய ஆசையும், கனவும் நிறைவேறும். நிதி ஆதாயம் ஏற்படும், இதன் காரணமாக நீங்கள் பெரும் நிம்மதியைப் பெறுவீர்கள். மாறாக, திடீரென்று எங்கிருந்தாவது நிறைய பணம் கிடைக்கும்.


கும்ப ராசி
கும்ப ராசிக்காரர்களுக்கு சூரியனின் ராசி மாற்றம் அல்லது பெயர்ச்சி மிகுந்த நிம்மதியைத் தரும். பழைய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். பழைய முதலீட்டில் இந்த நேரத்தில் லாபத்தை தரும். திடீரென்று எங்கிருந்தாவது பணம் வரவு ஏற்படும், இதனால் நீங்கள் சில பெரிய பிரச்சனைகளில் இருந்து விடுப்படுவீர்கள். துணையால் ஆதாயம் உண்டாகும். வாழ்க்கைத்துணை முன்னேற்றம் அடையலாம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2023: ஆண்டு முழுதும் இந்த ராசிகளுக்கு அட்டகாசமான வாழ்க்கை.... அசச்சிக்க முடியாது!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ