மீன ராசியில் புதன் பெயர்ச்சி 2023: இன்று மீன ராசியில் புதன் பெயர்ச்சியாகியுள்ளார். இந்த பெயர்ச்சி இன்று காலை 10.47 மணிக்கு நடந்துள்ளது. புதன் மீனத்தில் நுழையும் போது அந்த ராசியில் ஏற்கனவே சூரியனும், புதனும் சேர்ந்து புதாதித்ய யோகத்தை உருவாகியுள்ளது. மீனத்தில் புதாதித்ய யோகமும், திரிகிரஹி யோகமும் அமைவதால் அனைத்து ராசிக்காரர்களும் சுப பலன்களைப் பெறுவார்கள். இது உங்கள் ராசியை எப்படி பாதிக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷ ராசிக்கு புதன் பெயர்ச்சி
இந்த புதனின் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சில பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். சில காரணங்களால் நீங்கள் சிக்கலில் சிக்கி, விமர்சனத்திற்கு ஆளாக நேரிடலாம். ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படலாம். தாய் மாமாவின் முழு ஆதரவையும் நீங்கள் பெறுவீர்கள்.


மேலும் படிக்க | Trigrahi Yoga: மீனத்தில் உருவாகும் 'திரிகிரஹி யோகம்' மீனத்துக்கு ஜாலி! தனுசுக்கு?


ரிஷபம் ராசிக்கு புதன் பெயர்ச்சி
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. உங்கள் வாழ்க்கையில் இந்த நேரம் வெற்றிகரமான காலமாக இருக்கும். உங்கள் தொழிலில் சிறப்பான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். இருப்பினும், இந்த நேரத்தில் உங்கள் செலவுகள் கணிசமாக அதிகரிக்கும்.


மிதுன ராசிக்கு புதன் பெயர்ச்சி
வணிக ரீதியாக நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள். உங்களின் வியாபாரம் பெருகும். மிதுன ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி வேலை வியாபாரத்திலும் புதிய பரிமாணங்களை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் ஒரு புதிய ஒப்பந்தம் செய்யப்படலாம்.


கடக ராசிக்கு புதன் பெயர்ச்சி
கடக ராசிக்காரர்கள் தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் மற்றும் உங்கள் வாழ்க்கையில் பிரச்சினைகள் கணிசமாக அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களுடனான உங்கள் உறவும் பாதிக்கப்படலாம்.


சிம்ம ராசிக்கு புதன் பெயர்ச்சி
சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமானக இருக்கும். நிதி நிலை பலவீனமாகலாம். உடல்நிலையில் சரிவு ஏற்படலாம். சளி மற்றும் காய்ச்சலுடன் தொண்டை தொற்று பிரச்சனையும் இருக்கலாம். பண பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும்.


கன்னி ராசிக்கு புதன் பெயர்ச்சி
கன்னி ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி சாதகமாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் சுப பலன்கள் உண்டாகும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். வியாபாரத்திலும் லாபம் அடைவீர்கள். உங்கள் வாழ்க்கை துணையுடனான உங்கள் உறவு மேலும் பலப்படும்.


துலாம் ராசிக்கு புதன் பெயர்ச்சி
உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை அதிகரிக்கும். திடீர் செலவுகள் ஏற்படலாம். மாமியார் மற்றும் தாய்வழி நபர்களுடனான உங்கள் உறவு மோசமடையக்கூடும்.


விருச்சிக ராசிக்கு புதன் பெயர்ச்சி
விருச்சிக ராசிக்காரர்களின் தொழில் மற்றும் கல்வியில் சிறப்பான வெற்றியைப் பெறுவீர்கள். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேர்க்கை பெறலாம். அரசுப் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முடிவுகள் சாதகமாக அமையும்.


தனுசு ராசிக்கு புதன் பெயர்ச்சி
தனுசு ராசிக்காரர்களுக்கு சௌகரியத்தை அதிகரிக்கும். மகிழ்ச்சியை அதிகரிக்கும். தாய்வழியில் ஆதரவும் அனுகூலமும் கிடைக்கும். இதற்கிடையில் வாகன சுகம் பெறலாம்.


மகர ராசிக்கு புதன் பெயர்ச்சி
மீன ராசியில் புதன் பெயர்ச்சி செய்வது மகர ராசிக்காரர்களின் வாழ்வில் ஏற்ற இறக்கங்களைக் கொண்டு வரும். கல்வித் துறை அல்லது ஊடகத்துறையுடன் தொடர்புடையவர்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களுடனான உறவில் பதற்றம் அதிகரித்து சில சமயங்களில் தவறான புரிதல்கள் ஏற்படலாம்.


கும்ப ராசிக்கு புதன் பெயர்ச்சி
கும்ப ராசிக்காரர்களுக்கு அசுப பலன்கள் உண்டாகும். உங்கள் செலவுகள் பெருமளவில் அதிகரிக்கும். தொழிலில் பெரிய நஷ்டத்தையும் சந்திக்க நேரிடும். உடல்நிலையில் பெரும் சரிவைக் காணலாம்.


மீன ராசிக்கு புதன் பெயர்ச்சி
மீன ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி கலவையான பலனை தரும். வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த நேரம் வெற்றியைத் தரும். இந்த நேரத்தில் நீங்கள் வாகனம் ஓட்டும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | தினசரி ராசிப்பலன் - பணமழையில் நனையப்போகும் ராசிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ