Trigrahi Yoga: மீனத்தில் உருவாகும் 'திரிகிரஹி யோகம்' மீனத்துக்கு ஜாலி! தனுசுக்கு?

Powerful Trigrahi Yoga In Pisces: இன்று மீன ராசியில் திரிகிரஹி யோகம் உருவாகிறது. மீனத்தில் குரு, சூரியன் மற்றும் புதன் என மூன்று கிரகங்கள் இணைவதால் 3 ராசிக்காரர்களுக்கு வலுவான பண மழை கொட்டும், வாழ்வில் உயர்வு உண்டாகும்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 16, 2023, 08:34 AM IST
  • மீன ராசியில் திரிகிரஹி யோகம் உருவானது
  • வியாழன், சூரியன் மற்றும் புதன் என மூன்று கிரகங்கள் இணைவதால் யோகம்
  • வாழ்வில் உயர்வைக் காணும் 3 ராசிக்காரர்கள்
Trigrahi Yoga: மீனத்தில் உருவாகும் 'திரிகிரஹி யோகம்' மீனத்துக்கு ஜாலி! தனுசுக்கு? title=

Surya Budh Guru yuti:  செல்வம், புத்திசாலித்தனம் மற்றும் தொழிலுக்கு காரகர் புதன் பகவான். 2023, மார்ச் 16, அதாவது இன்று மீன ராசிக்குள் நுழைந்த புதன், நேற்று மீனத்துக்கு வந்த சூரியன், மற்றும் ஏற்கனவே மீன ராசியில் இருக்கும் குரு பகவானுடன் இணைந்தார். தன்னுடைய சொந்த வீடான மீனத்தில் இருக்கும் குரு, நல்ல பலன்களை அளிக்கும் நேரத்தில் அவருடன் சுப கிரகங்களான சூரியன், குரு, புதன் ஆகிய மூன்று கிரகங்களும் இணைவது திரிகிரஹி யோகத்தை உருவாக்கியது.

இந்த திரிகிரஹி யோகம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், 3 ராசிக்காரர்களுக்கு சிறப்பான சுப பலன்களைத் தரும். திரிகிரஹி யோகம் உள்ளவர்களுக்கு தொழில் முன்னேற்றமும் பணமும் கிடைக்கும்.

மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு சாண்டள யோகம்; சில எளிய பரிகாரங்கள் 

மீனத்தில் சூரியன், புதன் மற்றும் வியாழன் சேர்க்கையால் லாபம் அடையும் ராசிகள் 
 
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு திரிகிரஹி யோகம் பல நன்மைகளைத் தரும். இவர்கள் தொழிலில் பெரிய முன்னேற்றம் அடையலாம். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. பெரிய வெற்றியை அடைய முடியும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். உறவுமுறைகள் சிறப்பாக இருக்கும். திடீரென்று பணம் வந்து சேரும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தேர்வுகள் மற்றும் நேர்காணலில் வெற்றி பெறுவீர்கள்.
 
தனுசு: சூரியன், குரு, புதன் ஆகிய 3 கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் திரிகிரஹி யோகம், தனுசு ராசிக்காரர்களுக்கு அருமையான பலன்களைத் தரும். வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் பெருகும். பண வரத்து சாதகமாக இருக்கும். புதிய வீடு, வாகனம், ஆடை-நகைகள் அல்லது எலெக்ட்ரானிக் பொருட்களை வாங்கலாம். சொத்து தொடர்பான ஒரு ஒப்பந்தம் ஏற்படும் வாய்ப்புண்டு. தடைபட்ட வேலைகள் நிறைவேறும். தாயாரின் ஒத்துழைப்பு சாதகமாக இருக்கும்.

மீனம்: மீனத்தில் உருவாகும் திரிகிரஹி யோகம், மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன்களைக் கொடுக்கும். உங்கள் ஆளுமையில் அற்புதமான முன்னேற்றம் இருக்கும்,  கூட்டாண்மையில் வேலை தொடங்க விரும்பினால், அதற்கு இது நல்ல நேரம். காதல் துணை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

மேலும் படிக்க | Surya Gochar: பண நஷ்டத்தை தவிர்க்கவும்! பங்குனி மாத ராசி பலன் எச்சரிக்கை

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News