கடன் பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டுமா... சில எளிய ‘வெள்ளிக்கிழமை’ பரிகாரங்கள்!
ஜாதகத்தில் சுக்கிரன் கிரகத்தின் நிலை வலுவாக அல்லாமல் இருந்தால், வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடும்.
சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல அம்சங்களுடன் அமைந்தால் எல்லா விதமான சௌபாக்யமும் கிடைக்கும். பருவ வயதில் திருமணம் கூடிவரும். நீங்காத செல்வமும், நிறைவான சந்தோஷமும் கிடைக்கும். ஜாதகத்தில் சுக்கிரன் சிறப்பாக அமைந்திருந்தால் செல்வ வளம், வசதிகள், திருமண வாழ்க்கை, ஆற்றல், அழகு மற்றும் காதல் விவகாரங்களில் வெற்றி போன்றவற்றை அடையலாம்.வாழ்க்கையில் சகல சௌபாக்ய யோகங்களையும் தரவல்லவர் சுக்கிரன். திருமண பந்தத்துக்கு காரணமானவர் என்பதால் இவருக்கு களத்திர காரகன் என்ற அந்தஸ்தும் உண்டு.
ஜாதகத்தில் சுக்கிரன் கிரகத்தின் நிலை வலுவாக அல்லாமல் இருந்தால், வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடும். ஜாதகத்தில் சுக்கிரன் பலம் குறைவதால் சிறுநீரகம், கண் தொடர்பான நோய்கள் ஏற்படும்.சுக்கிரன் அமைந்திருக்கக்கூடிய இடம், சில கிரகங்களின் தாக்கம் போன்ற சில காரணங்களால், அசுப பலன்களைத் தரக்கூடியதாக இருக்கும். வாழ்க்கையில் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சில சமயங்களில் வறுமை நிலைக்கும் தள்ளப்படலாம். திருமண வாழ்க்கையில் பிரச்சனை, குழந்தை பேறு இல்லாத நிலை, போன்றவற்றையும் எதிர் கொள்ள நேரிடும்.
ஆனால் சில எளிய பரிகாரங்கள் மூலம் உங்கள் சுக்ரன் கிரகத்தை வலுப்படுத்தி, பாதிப்புகளில் இருந்து தப்பிக்கவோ, அல்லது பாதிப்புகளை பெருமளவு குறைக்கவோ முடியும். சுக்கிரன் பலம் பெற்றிருந்தாலும், பலம் குறைந்திருந்தாலும், சுக்கிரனுக்குரிய வழிபாடுகள், பரிகாரங்கள் செய்வதன் மூலம் யோகங்கள் விருத்தியடையும்.
வெள்ளிக்கிழமை பரிகாரங்கள்
1. பெண்கள் சுக்கிர வாரம் எனும் வெள்ளிக்கிழமை விரதம் இருந்து வீட்டில் திருவிளக்கு பூஜை செய்வது நலம் பயக்கும். ஸ்ரீலட்சுமி காயத்ரி மந்திரம், அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், சுக்கிர காயத்ரி மந்திரம் சொல்லி வழிபடலாம். சுக்ரனின் தலமான தஞ்சாவூர் மாவடத்தில் கஞ்சனூரில் உள்ள அருள்மிகுன் அக்கினீனீஸ்வரர் திருக்கோவில் சென்று வழிபடுவது நல்ல பலன்களைக் கொடுக்கும். சுக்கிரனின் விசேஷ கோயில்களுக்கு சென்று வழிபட முடியாதவர்கள் வீட்டருகே இருக்கும் கோயிலில் நவக்கிரக சன்னதியில் சுக்கிர பகவானை வழிபடலாம்.
2. ஜாதகத்தில் சுக்கிரன் தோஷம் அல்லது சுக்கிரன் பலவீனமாக இருக்கும் போது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அன்னை லட்சுமியை வழிபடவும். பாயசம் அல்லது பாலில் செய்யப்பட்ட இனிப்புகளை அர்பணித்து வணங்கவும். இதற்குப் பிறகு ஸ்ரீ சுக்தம் மற்றும் கனக்தாரா ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்யவும். இதனால் பண நெருக்கடிகள் நீங்கி பண வரவுகள் உண்டாகும்.
3. வெள்ளிக்கிழமை சுக்கிரன் கிரகத்திற்கு உகந்த பொருட்களை தானம் செய்யுங்கள். வெள்ளை இனிப்புகள், பால், சர்க்கரை, அரிசி போன்றவற்றை தானம் செய்யுங்கள். மேலும், சுக்கிரனின் ஆசியைப் பெற, நீங்கள் 6 முகம் அல்லது 13 முக ருத்ராட்சத்தை அணியலாம். இதனால் சுக்கிரன் வலுவடைந்து வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் பெருகும்.
மேலும் படிக்க | வெற்றிகளை தேடி தருவார் குரு.. ராஜ வாழ்க்கை இந்த ராசிகளுக்கு தான்
4. சுக்கிர தோஷத்தால் ஒருவருக்கு திருமணத்தில் சிக்கல் இருந்தால், அதன் பலனைக் குறைக்க, ஓம் த்ரான் த்ரீன் த்ரௌண் ச: சுக்ரே நம (ॐ द्रां द्रीं द्रौं स: शुक्राय नम:) என்ற மந்திரத்தை வெள்ளிக்கிழமை அல்லது தினமும் வெள்ளை ஆடை அணிந்து இந்த மந்திரத்தை குறைந்தது 5, 11 அல்லது 21 முறை ஜபிக்கவும்.
மேலும் படிக்க | 50 ஆண்டுக்கு பிறகு அபூர்வ நிகழ்வு.. இந்த ராசிக்காரர்களுக்கு குபேர வாழ்க்கை
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ