லட்சுமி அன்னையின் செல்ல ராசிகள் இவைதான், செல்வச்செழிப்பில் மிதப்பார்கள்: உங்க ராசி என்ன?

Personality by Zodiac Sign:  இந்த ராசிக்காரர்கள் அன்னை லக்ஷ்மிக்கு மிகவும் பிரியமானவர்களாக கருதப்படுகிறார்கள். இந்த ராசிகள் லக்ஷ்மி அன்னையின் ஆசியுடன், வாழ்க்கையில் அதிக பணம் சம்பாதித்து, ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 1, 2023, 05:16 PM IST
  • 12 ராசிகளிலும், சிம்ம ராசிக்காரர்கள் லட்சுமி அன்னைக்கு மிகவும் பிடித்தமான ராசிகளாக இருக்கிறார்கள்.
  • அன்னை லட்சுமி அவர்களிடம் எப்பொழுதும் அன்பாக இருக்கிறார்.
  • இவர்கள் எந்த வேலையைத் தொடங்கினாலும், அதில் வெற்றியும், அபரிமிதமான லாபமும் கிடைக்கும்.
லட்சுமி அன்னையின் செல்ல ராசிகள் இவைதான், செல்வச்செழிப்பில் மிதப்பார்கள்: உங்க ராசி என்ன?

லக்ஷ்மி அன்னைக்கு பிடித்தமான ராசிகள்: ஜோதிடத்தின்படி, அனைத்து ராசிகளுக்கும் அவற்றுக்கான தெய்வங்கள் உள்ளன. அந்த தெய்வங்களுக்கு ஏற்ப அந்த ராசிகளின் தனித்தன்மையும் அமையும். சிலர் படிப்பில் சிறந்து விளங்குவார்கள், சிலர் வேலையில் நன்றாக செயல்படுவார்கள்.  சிலர் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். சிலருக்கோ, கடின உழைப்பு இல்லாவிட்டாலும் வாழ்க்கையில் முழு செல்வச்செழிப்புடன் இருப்பார்கள். 

அதிகமாக உழைக்காமலும், செல்வத்தை அனுபவித்து மகிழ்ச்சியாக வாழும் சில ராசிகள் உள்ளன. இவர்கள் சகல சௌகரியங்களையும் பெறுகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் அன்னை லக்ஷ்மிக்கு மிகவும் பிரியமானவர்களாக கருதப்படுகிறார்கள். இந்த ராசிகள் செல்வத்தின் கடவுளான லக்ஷ்மி அன்னையின் ஆசியுடன், வாழ்க்கையில் அதிக பணம் சம்பாதித்து, ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார்கள். அப்படிப்பட்ட அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

துலாம்

ஜோதிட சாஸ்திரப்படி துலாம் ராசிக்காரர்கள் லக்ஷ்மி தேவிக்கு விருப்பமான ராசிகளில் மிகவும் முக்கியமானவர்கள். குறிப்பாக லட்சுமி அன்னையின் ஆசிகள் இவர்களுக்கு எப்போதும் இருக்கும். பிறப்பு முதல் செல்வச் செழிப்பு இருக்கும். தெய்வத்தின் அருளால் வாழ்வில் அனைத்து விதமான சுகபோகங்களையும் பெறுவார்கள். இதுமட்டுமின்றி, அவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படாது. அன்னையின் அருளால், பெரிய அளவிலான முயற்சி இல்லாமலேயே அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். துலாம் ராசிக்காரர்கள் பணத்தின் அடிப்படையில் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள்.

மேலும் படிக்க | February Horoscope 2023: பிப்ரவரி மாதம் யாருக்கு எழுச்சி, யாருக்கு வீழ்ச்சி? முழு ராசிபலன் இதோ

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களும் லக்ஷ்மி தேவியின் அருள் பெறுவதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். இவர்களுக்கு வாழ்க்கையில் எதிலும் குறை இருக்காது. அவர்கள் நிதி ரீதியாக மிகவும் வலிமையானவர்கள். அதுமட்டுமின்றி, அவர்கள் சொத்துக்களின் இன்பத்தையும் பெறுகிறார்கள். இவர்கள் பண விஷயத்தில், அதிர்ஷ்டம் மிகுந்த பணக்காரர்கள் இருக்கிறார்கள். இவர்கள் புத்திசாலிகள் மற்றும் கடின உழைப்பாளிகள். மேலும், வாழ்க்கையில் எப்போதும் முன்னேறிக்கொண்டே இருக்கிறார்கள். 

சிம்மம்

அனைத்து 12 ராசிகளிலும், சிம்ம ராசிக்காரர்கள் லட்சுமி அன்னைக்கு மிகவும் பிடித்தமான ராசிகளாக இருக்கிறார்கள். அன்னை லட்சுமி அவர்களிடம் எப்பொழுதும் அன்பாக இருக்கிறார். இவர்கள் எந்த வேலையைத் தொடங்கினாலும், அதில் வெற்றியும், அபரிமிதமான லாபமும் கிடைக்கும். இவர்கள் மீது அன்னை லட்சுமியின் ஆசீர்வாதம் எப்போதும் இருக்கும். 

அன்னை லட்சுமியின் அருளால் சிம்ம ராசிக்காரர்களின் பிம்பமும் சமூகத்தில் மிக நன்றாக இருக்கும். இவர்களுக்கு அதிகப்படியான மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பிப்ரவரி 2023 ராசி பலன்: ‘இந்த’ ராசிகளுக்கு பண விரயம்; நிதி நெருக்கடி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

More Stories

Trending News