சனி வக்ர பெயர்ச்சி: வெள்ளம் ஒருபக்கம்; வறட்சி மறுபக்கம்... தீபாவளி வரை கஷ்டம் தான்..!
Saturn Retrograde Transit: வக்ர நிலையில் கிரகங்களின் ஆற்றல் மிகவும் அதிகரிக்கும் என்பதால், சாதாரண நிலையில் இருப்பதை விட அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்றாலும், அவற்றின் பலன்களைத் தரும் திறன் நிச்சயமற்றதாக இருக்கும்.
Saturn Retrograde Transit: ஜோதிடத்தில், கர்மாவிற்கு ஏற்ற பலனைத் தரும் சனி பகவான் நீதியின் கடவுளாக கருதப்படுகிறார். 2024 ஜூன் 29ம் தேதி வக்ர நிலையை அடைந்துள்ளார். வக்ர பெயர்ச்சி அடைந்துள்ள சனி பகவான் நவம்பர் 15 வரை இந்த நிலையில் நீடிப்பார். கிரகங்கள் வக்ர நிலையை அடைவது ஜோதிடத்தில், சுபமாகக் கருதப்படுவதில்லை. வக்ர நிலையில் கிரகங்களின் ஆற்றல் மிகவும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, கிரகங்கள் சாதாரண நிலையில் இருப்பதை விட அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்றாலும், அவற்றின் பலன்களைத் தரும் திறன் நிச்சயமற்றதாக இருக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
பலன்களை கொடுப்பதில் கிரகத்திற்கு எந்த விதமான வரம்புகளும் இல்லை என்பதால், பெரும்பாலும் முடிவுகள் எதிர்மறையாக இருக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். சனியின் வக்ர நிலையினால் உலகம், நாடு, வானிலை, இயற்கை, விவசாயம், அரசாங்கம் மற்றும் அரசியலில் ஏற்படக்கூடிய நேர்மறை மற்றும் எதிர்மறை பலன்கள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
சனி வக்ர பெயர்ச்சியின் நேர்மறை பலன்கள்
வக்ர சனியின் சாதகமான பலனைப் பொறுத்த வரை, தானியங்களில் நல்ல விளைச்சல் இருக்கும் என்று கூறப்படுகிறது. சந்தையில் தானியங்களின் விலை உயரும் வாய்ப்பு உள்ளது என்பதால், விவசாயிகளின் வருமானம் உயரும் என கூறப்படுகிறது. சர்வதேச அளவில் நாடு முன்னேறும். சனியின் வக்ர பெயர்ச்சி தாக்கத்தால் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வளரும். மருத்துவ அறிவியலில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். பல்வேறு நோய்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் புதிய மருந்துகள் மற்றும் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படும். தகவல் தொடர்புத் துறையிலும் புதிய கண்டுபிடிப்புகள் ஏற்படலாம்.
சனியின் வக்ர பெயர்ச்சியின் எதிர்மறை பலன்கள்
கடந்த ஜூன் 29 முதல் சனி தேவரின் வக்ர நிலை அடைந்துள்ளதன் தாக்கத்தை நாடு, உலகம் அளவில் மட்டுமல்லாது, மக்களின் இயல்பு வாழ்க்கையின் மீது ஏற்படக் கூடிய தாக்கத்தின் அறிகுறியை உடனடியாகவே காட்டத் தொடங்கிடவிட்டதாக ஜோதிடர்கள் கருதுகின்றனர். ஜூலை 2, செவ்வாய்க்கிழமை, உத்திர பிரதேசம் ஹத்ராஸில் நடந்த ஒரு நிகழ்வின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். சனியின் வக்ர பார்வையின் பலனாக நிகழ்ச்சி ஒன்றில் இப்படி ஒரு பயங்கரமான விபத்து நடந்துள்ளது என்கின்றனர் ஜோதிடர்கள்.
மேலும், உலகம் முழுவதும் எல்லைப் பதற்றம் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் நிச்சயமற்ற நிலை நிலவும். போராட்டம், வேலை நிறுத்தம், ஊழல், மோசடி, குழப்பம் மற்றும் வன்முறை சம்பவங்கள் அதிகரிக்கலாம்.
உலகில் தீவிரவாத சம்பவங்கள் அதிகரிக்கலாம். பிரபலங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். முக்கியப் பதவிகளில் இருப்பவர்களின் வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மை அதிகரிக்கலாம். உலக நாடுகளில் அரசியல் போட்டி அதிகரிக்கும், அதிகார அமைப்பில் மாற்றங்கள் வரலாம். முக்கிய தலைவர்களின் உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்படலாம்.
உலகம் முழுவதும் இயற்கை பேரழிவுகள் அதிகரிக்கலாம். சில இடங்களில் அதிக மழை மற்றும் வெள்ளத்தால் மக்கள் இழப்புகளை சந்திக்கும் அதே நேரத்தில், மற்ற இடங்களில் வறட்சியால் பயிர்கள் நாசமாகலாம் எனவும் ஜோதிடர்கள் கருதுகின்றனர். நிலநடுக்கம் மற்றும் சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களுடன், தீ, எரிவாயு விபத்து, விமானம், ரயில் மற்றும் சாலை விபத்துக்கள் போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்படக் கூடும் என கூறப்படுகிறது.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: தீபாவளி வரை இந்த ராசிகளுக்கு ராஜ பொற்காலம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ