Suriyan Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இந்த மாற்றம் கிரக பெயர்ச்சி என அழைக்கப்படுகிறது. இந்த கிரகப்பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சில ராசிகளில் இவற்றால் சுப விளைவுகளும் சில ராசிகளில் பிரச்சனைகளும் ஏற்படலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிரகங்களில் சூரியனுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. சூரியன் கிரகங்களின் அரசனாக கருதப்படுகிறார். ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் சுகமான இடத்தில் இருந்தால் அவரது வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும் ஒளிமயமாகவும் இருக்கும். ஒரு மாதத்திற்கு ஒரு முறை சூரியன் பெயர்ச்சி ஆகிறார். சூரியனின் பெயர்ச்சி ராசிகளில் மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் கொண்டு வருகின்றது.


ஜூன் 15 அதாவது நாளை சூரியன் பெயர்ச்சியாக உள்ளார். நாளை சூரியன் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசியில் பெயர்ச்சியாவார். சூரியன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். இவர்களுக்கு ஆக்கப்பூர்வமான பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு இருக்கும். பண வரவு அதிகமாகும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இங்கு காணலாம்.


மேஷம் (Aries)


சூரியன் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு விசேஷமான பலன்களை கொண்டு வரும். பொருளாதார நிலையும் மேம்படும். செலவுகள் குறையும். முதலீட்டின் மூலம் லாபம் அடையலாம். புதிய வேலைகளை தொடங்க இது சரியான நேரமாக இருக்கும். எதிர்பாராத இடங்களில் இருந்து லாபம் உண்டாகும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வசதிகள் பெருகும். பணியிடத்தில் உங்கள் உழைப்புக்கான பலன் கிடைக்கும். ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த நேரம் உங்களுக்கு ஒரு வரப் பிரசாதமாக இருக்கும். 


மேலும் படிக்க | குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஆரம்பமானது அற்புதமான ராஜயோகம்... கொட்டிக்கொடுப்பார் குரு


மிதுனம் (Gemini)


மிதுன ராசிக்காரர்களுக்கு சூரியன் பெயர்ச்சி பலவித நன்மைகளை அளிக்கும். நிதி சிக்கல்கள் நீங்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உங்கள் நிதிநிலை மேம்படும். தடைப்பட்டிருந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடந்து முடியும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நினைத்தது நடக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வு முடிவுகள் நன்றாக வரும். பண வரவு அதிகமாகும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் முழுமையான ஆதரவு கிடைக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். 


சிம்மம் (Leo)


சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியனின் பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். மாத வருமானம் கூடும். பொருளாதார நிலை மேம்படும். வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு இப்போது லாபம் அதிகரிக்கும். சூரியனின் விசேஷ அருளைப் பெறுவீர்கள். புதிய பணிகளை இப்போது தொடங்கலாம். ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த பணிகளை செய்ய உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும். 


பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.


மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ