குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஆரம்பமானது அற்புதமான ராஜயோகம்... கொட்டிக்கொடுப்பார் குரு

Guru Nakshatra Peyarchi Palangal: சந்திரனின் நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் உண்டாகும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 14, 2024, 09:01 AM IST
  • குரு நட்சத்திர பெயர்ச்சி துலா ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும்.
  • இவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.
  • மாத வருமானம் அதிகரிக்கும்.
குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஆரம்பமானது அற்புதமான ராஜயோகம்... கொட்டிக்கொடுப்பார் குரு title=

Guru Nakshatra Peyarchi Palangal: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. ராசிகளைத் தவிர கிரகங்களின் நட்சத்திரங்கள், உதய, அஸ்தமன நிலைகள், வக்கிரப் பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றது.

அனைத்து கிரகங்களிலும் சுப கிரகமாக இருப்பவர் குரு பகவான். செழிப்பு, பணவரவு ,மரியாதை, அறிவாற்றல், குழந்தைகள், திருமணம் ஆகியவற்றின் காரணி கிரகமாக இவர் இருக்கிறார். குரு பகவான் ஒரு வருடத்திற்கு ஒருமுறை தனது ராசியை மாற்றுகிறார். குரு பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. ராசியோடு அவ்வப்போது குரு பகவான் தனது நட்சத்திரத்தையும் மாற்றுகிறார். குருவின் நட்சத்திர பெயர்ச்சிக்கும் ஜோதிட சாஸ்திரத்தில் முக்கியமான இடம் உள்ளது.

ஜூன் 13 ஆம் தேதி குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் பெயர்ச்சியானார். ஆகஸ்ட் இருபதாம் தேதி வரை குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் இருப்பார். ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன். சந்திரனின் நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் உண்டாகும். இவர்களுக்கு பண வரவு அதிகரிக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.

ரிஷபம் (Taurus)

ரோகிணி நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு பல வித நன்மைகளை அள்ளித்தரும். பணியிடத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சியான பொழுதை செலவழிப்பீர்கள். பலவித புதிய கலைகளை கற்றுக் கொள்வீர்கள். அறிவாற்றல் மேம்படும்.

மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்

சிம்மம் (Leo)

குரு நட்சத்திர பயிற்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு பலவித மாற்றங்களை தரக்கூடியதாக இருக்கும். பணியிடத்தில் உங்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். ஆக்கபூர்வமான பல நல்ல மாற்றங்களை வாழ்வில் காண்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்து பணிகளை செய்ய உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும். புதிய வர்த்தகத்தை துவங்கும் எண்ணம் இருந்தால் அதற்கு இது சரியான நேரமாக இருக்கும். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டில் சென்று வேலை பார்க்க வேண்டும் என்று ஆசை உள்ளவர்களது ஆசை இப்பொழுது நிறைவேறும். அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

கன்னி (Virgo)

ரோகிணி நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு சுபமானதாக இருக்கும். கன்னி ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான ஆரம்பமாக இது இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பண வரவு அதிகமாகும். லாபம் அதிகரிக்கும். ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். 

துலாம் (Libra)

குரு நட்சத்திர பெயர்ச்சி துலா ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். இவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. மாத வருமானம் அதிகரிக்கும். இதனால் நிதிநிலை நன்றாக இருக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வாழ்க்கை நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சுக்கிரன் புதனுடன் மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரியன்! அதிர்ஷ்டத்தால் மகிழும் ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News