Surya Guru Yuti: 2023 புத்தாண்டில் பல்வேறு கிரகங்களின் ராசி மாற்றங்கள் தொடங்கிவிட்டன. பொதுவாகவே, ஜோதிட சாஸ்திரப்படி ஒரு கிரகம் ஒரு ராசியை விட்டு வேறு ராசிக்குள் நுழையும் போதெல்லாம் அதன் தாக்கம் பிரபஞ்சம் முழுவதும் தெரியும். கிரகங்களின் சஞ்சாரத்தால் பல ராசிக்காரர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படும், சிலர் இழப்புகளை சந்திக்க வேண்டி வரும். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, கிரகங்களின் ராஜாவான சூரியனும் குரு வியாழனும் ஒரே ராசியில் இணைந்து அருள்பாலிக்கும் போது, அது பலரின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

12 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியனுடன், குரு இணைந்து கூட்டணி அமைக்கப் போகிறார், இதனால் 3 ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியும். வாழ்க்கை குருவருளால் சிறக்கும். இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், கிரகங்களின் ராஜாவான சூரியக் கடவுளும், தெய்வங்களின் குருவான வியாழனும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கூட்டணி அமைக்க உள்ளனர். இந்த அபூர்வ சேர்க்கையால் 3 ராசிகளின் பொருளாதார நிலை மாறப்போகிறது.


குருப் பெயர்ச்சி 2023


ஜோதிடர்களின் கூற்றுப்படி, இந்த ஆண்டு ஏப்ரல் 22, 2023 அன்று, வியாழன் கிரகம் மேஷ ராசிக்கு மாறுகிறார். இந்த ராசியில் சூரிய பகவான் ஏற்கனவே இருப்பார். இப்படிப்பட்ட நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மேஷ ராசியில் சூரியனும், வியாழனும் இணைந்த அபூர்வ சங்கமம் உருவாகப் போகிறது.


இந்த இரண்டு கிரகங்களும் நலன் மற்றும் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கான காரணிகளாக கருதப்படுகின்றன. இந்த இரண்டு சக்திவாய்ந்த கிரகங்களின் சேர்க்கையால் 3 ராசிக்காரர்களுக்கு தொழில் முன்னேற்றமும், பண ஆதாயமும் உண்டாகும். அந்த மூன்று அதிர்ஷ்ட ராசிகளில் உங்கள் ராசியும் உண்டா ராசிக்காரர்களே?


மேலும் படிக்க | நாளை சனிப் பெயர்ச்சி, இந்த ராசிகளின் கடினமான நேரம் துவங்கும்


மீனம்


குரு மற்றும் சூரியன் கூட்டணி அமைப்பதால், மீன ராசிக்காரர்களின் பொருளாதார நிலை படிப்படியாக மேம்படும். கடன் சுமைகள் குறையத் தொடங்கும், புதிய இடங்களில் முதலீட்டு வாய்ப்புகள் உருவாகும். உங்கள் பேச்சால் மற்றவர்கள் கவரப்படுவார்கள், சமூகத்தில்  நற்பெயர் அதிகரிக்கும். வெளியில் சிக்கியிருந்த பணம் திரும்பக் கிடைக்கும். இது உங்களுக்கு யோகமான காலம் ஆகும்.


கடகம்


பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும், புதிய பொறுப்புகள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கொடுத்த பணம் திடீரென்று திரும்ப வரலாம். வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல நேரம் தொடங்கும். பல புதிய ஒப்பந்தங்கள் கைக்கு வரலாம். நீதிமன்றம் தொடர்பான வழக்குகள் சாதகமாக முடியும்.


மேஷம்


சூரியன் மற்றும் வியாழன் சேர்க்கை மூலம் பணம் உங்கள் கையில் புரளும். வேலைக்காக அல்லது ஆன்மீக அமைதிக்காக நீண்ட பயணத்தை மேற்கொள்ளலாம். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். சமூகத்தில் நற்பெயர் உயரும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வந்தடையும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஹிந்தியை திணிக்கும் வரை இந்தித் திணிப்புக்கு எதிரான போர் தொடரும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ