உச்சத்தில் சனி இன்னும் 44 நாட்களுக்கு.. இந்த ராசிகளுக்கு பண மழை, அதிர்ஷ்ட கதவு திறக்கும்
Shani Nakshatra Parivartan 2024 Rasipalan : ஆகஸ்ட் மாதத்தில், நீதியின் கடவுளான சனி குருவின் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு இது சுப அல்லது அசுப பலன்களை ஏற்படுத்தலாம்.
Saturn nakshatra transit horoscope 2024: வேத ஜோதிடத்தின் படி, சனி பகவான் பலன்களை அள்ளித் தருபவராகவும், நியாயமானவராகவும் கருதப்படுகிறார். சனி பகவான் ஒரு நபரின் செயல்களின் அடிப்படையில் நல்ல மற்றும் கெட்ட பலனைத் தருகிறார் என்று நம்பப்படுகிறது. மேலும் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாகும். அதனுடன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாற சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக் கொள்ளும் சனி. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு முழுவதும், சனி பாகவான் கும்ப ராசியில் தான் பயணிப்பார், ஆனால் நட்சத்திரத்தை மாறிக்கொண்டே இருப்பார். இதனிடையே கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி, சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் (Poorattathi) பெயர்ச்சி அடைந்துள்ளார். மே 12 ஆம் தேதி அன்று, சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நுழைந்தார், இப்போது ஆகஸ்ட் 18 ஆம் தேதி, 2024 அன்று, அது பூரட்டாதி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் கடந்து அக்டோபர் 3 ஆம் தேதி வரை பயணிக்கும். சனியின் நட்சத்திர மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் மாறும் என்பதை தெரிந்து கொள்வோம்...
மிதுன ராசி (Gemini Zodiac Sign): ஆகஸ்ட் மாதத்தில் சனி பகவானின் (Shani Dev) சிறப்பு ஆசிகள் கிடைக்கும், இந்த நேரத்தில் மிதுன ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நேர்மறை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் வெற்றி பெறும். தொழிலில் வெற்றியை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
கன்னி ராசி (Virgo Zodiac Sign): கன்னி ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர பெயர்ச்சியால் தொழிலில் இருந்த தடைகள் அனைத்தும் நீக்கும், உத்தியோகத்திலும் வியாபாரத்திலும் முன்னேற்றத்தை காண்பீர்கள். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணத்தை இப்போது திரும்பப் பெறுவீர்கள். ஒவ்வொரு வேலையிலும் விரும்பிய பலனைப் பெறுவீர்கள். சமூகத்தில் அந்தஸ்தும் கௌரவமும் அதிகரிக்கும். நிதி பிரச்சனைகளில் இருந்து விடுப்படுவீர்கள். செல்வ செழிப்பு உண்டாகும்.
கும்ப ராசி (Aquarius Zodiac Sign): கும்ப ராசிக்காரர்கள் சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் (Saturn Nakshatra Transit ) சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில், நீங்கள் அனைத்து துறைகளிலும் மகத்தான வெற்றியைப் பெறுவீர்கள். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காண பல பொன்னான வாய்ப்புகளை கும்ப ராசிக்காரர்கள் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r