Mercury, Venus and Saturn Rajyogam: ஜோதிடத்தின் படி, சனி கிரகம் மிகவும் சக்திவாய்ந்த கிரகமாக கருதப்படுகிறது, ஏனெனில் மற்ற கிரகங்களை விட சனி மிகவும் மெதுவாக நகரக் கூடிய கிரகமாகும். மேலும் சனி நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலனைத் தரும் கிரகமாகும். மறுபுறம் சுக்கிரன் செல்வம், செழிப்பு மற்றும் செல்வத்தை அளிப்பவர். கிரகங்களின் அதிபதியான புதன் வியாபாரம், பேச்சு மற்றும் புத்திசாலித்தனத்தை அளிப்பவர். 0
இதனிடையே ஆகஸ்ட் மாதத்தில் சனி (Shani Dev) ஷஷ ராஜயோகத்தை உருவாக்க உள்ளது. மேலும் புதன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை நடக்க உள்ளது. மேலும் புதன் (Mercury), சுக்கிரன் (Venus), சனி (Saturn) ஆகிய கிரகங்களின் நிலையால் சமசப்தம ராஜயோகம், கேந்திர திரிகோண (Kendra Trikona Yoga) ராஜயோகத்தை உருவாகப் போகிறது. இந்த யோகங்கள் அனைத்தும் 12 ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் இந்த ராஜயோகம் அதிர்ஷ்ட பலன்களை அள்ளித் தரும். இந்த ராசிக்காரர்கள் ஆகஸ்ட் மாதத்தில் (August Month Zodiac Sign) அதிக பலன்களை அடைவார்கள்.
ஆகஸ்ட் மாத அதிர்ஷ்ட ராசிகள் இவையே:
ரிஷபம் (Taurus Zodiac Sign): ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக அமையும். ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன் மற்றும் சனியின் நட்பு கிரகமாகும். இந்த நேரத்தில் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனி பகவான் பல நன்மைகளைத் தருவார். இந்த ராசிக்காரர்கள் தொழிலில் பல நன்மைகளைப் பெறலாம். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலும் உங்களின் கடின உழைப்பின் முழுமையான பலனைப் பெறுவீர்கள். அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள். செல்வம் பெருகும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.
சிம்மம் (Leo Zodiac Sign): சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் பெரும் நற்பலன்களைத் தரும். வேலை சம்பந்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். இந்தப் பயணங்களால் லாபம் உண்டாகும். குறிப்பாக தொழிலதிபர்கள் அதிக லாபம் ஈட்டலாம். திடீர் பண ஆதாயம் உண்டாகும். மனைவியுடனான உறவுகள் இனிமையாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும். நிதி பிரச்சனைகளில் இருந்து விடுப்படுவீர்கள். செல்வ செழிப்பு உண்டாகும்.
விருச்சிகம் (Scorpio Zodiac Sign): விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் விரும்பிய பலன்களை மட்டுமே தரும். உங்கள் பெரிய ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். தொழில் செய்யும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். அரசாங்கத்தின் ஆதரவை பெறுவீர்கள். நிதி ஆதாயம் உண்டாகும். உங்கள் குடும்பத்துடன் இனிமையாக பொழுதைக் கழிப்பீர்கள். பொருளாதார அம்சம் சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | கோவை : வழக்கறிஞர் கொலை வழக்கில் 4 பேர் கைது - கொலைக்கான காரணம் இதுதான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r