2 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம் ஆரம்பம்
Sukran Peyarchi Palangal: சில ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியின் காரணமாக மிக அதிக அளவிலான நற்பலன்கள் கிடைக்கவுள்ளன. இவர்கள் வெற்றியின் உச்சம் தொடுவார்கள்.
சுக்கிரன் பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவம்பர் மாதத்தில் மிகவும் மங்களகரமான கிரகமான சுக்கிரன் பெயர்ச்சி ஆகவுள்ளார். மகிழ்ச்சி, செழிப்பு, அன்பு மற்றும் செல்வத்தின் கிரகமான சுக்கிரன் நவம்பர் 3 ஆம் தேதி தனது ராசியை மாற்றுகிறார். தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக இது ஒரு பெரிய ராசி மாற்றமாக பார்க்கப்படுகின்றது. சுக்கிரன் சிம்ம ராசியை விட்டு கன்னி ராசியில் பிரவேசிப்பார்.
பொதுவாக அனைத்து கிரகங்களின் மாற்றமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் பெயர்ச்சியும் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை கொண்டு வரும். இதனால் சில ராசிகளுக்கு சுப பலன்களும் சில ராசிகளுக்கு அசுப பலன்களும் கிடைக்கும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியின் காரணமாக மிக அதிக அளவிலான நற்பலன்கள் கிடைக்கவுள்ளன. இவர்கள் வெற்றியின் உச்சம் தொடுவார்கள். அப்படிப்பட்ட அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சுக்கிரன் பெயர்ச்சியால் அசத்தனால நன்மைகளை அடையவுள்ள ராசிகள்
மேஷ ராசி (Aries)
ஜோதிட சாஸ்திரப்படி, மேஷ ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். மேஷ ராசிக்கார்ரகளின் பணம் எங்காவது சிக்கி இருந்தால், அது இப்போது எளிதாக கிடைத்துவிடும். நிதிநிலை நன்றாக இருக்கும். வாழ்வில் அமைதி நிலவும். சுக்கிரனின் தாக்கம் உங்கள் வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வரலாம். நீங்கள் உங்கள் வேலையை மாற்ற திட்டமிட்டால், இந்த காலகட்டத்தில் உங்களுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். பணி இடத்தில் பாராட்டுகள் அதிகமாகும். மாணவர்களுக்கு படிப்பில் நாட்டமும் கவனமும் அதிகரிக்கும்.
ரிஷப ராசி (Taurus)
ரிஷப ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் மிகவும் சாதகமான மாதமாக இருக்கும். இவர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டம் உடன் இருக்கும். ரிஷப ராசிக்காரர்களுக்கு இதுவரை வழியில் வந்து கொண்டிருந்த தடைகள் நீங்கி பணவரவு அதிகமாகும். நீங்கள் இதுவரை நிதிப் பிரச்சினைகளால் போராடிக் கொண்டிருந்தீர்கள் என்றால், இப்போது சூழ்நிலைகள் மாறும். உங்கள் நிதி நிலைமையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். ரிஷப ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும். இன்னும் திருமணம் ஆகாத ரிஷப ராசிக்காரர்களுக்கு இப்போது திருமணம் நிச்சயிக்கப்படலாம்.
மிதுன ராசி (Gemini)
சுக்கிரனின் ராசி மாற்றம் மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல காலத்தை கொண்டு வரும். குறைந்த முயற்சி மற்றும் கடின உழைப்பால் வெற்றி பெறலாம். இந்த ராசிக்காரர்கள் பண பலன்களைப் பெறலாம். நிலுவையில் இருந்த பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பு உண்டு. நிதி நிலைமை மேம்படும். ஏதேனும் சட்டச் சிக்கல்களில் சிக்கி இருந்தால், அதுவும் உங்களுக்கு சாதகமாக அமையும். தொழில் துறையில் நல்ல பலன்கள் கிடைக்கலாம். கடின உழைப்பின் அடிப்படையில் வேலை மற்றும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் இருக்கும். இதுதவிர தொழில் செய்யும் மிதுன ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் அமோக வெற்றிகளைப் பெறலாம்.
துலா ராசி (Libra)
துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் அதிக அளவில் நன்மை பயக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பண பலன்கள் கிடைக்கும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கூடும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தேவையற்ற காதல் விவகாரங்களில் இருந்து விலகி இருப்பது உங்களுக்கு நல்லது. உங்களின் பழைய ஆசை நிறைவேறும். உங்கள் தொழிலில் சிறந்த வெற்றியைப் பெறுவீர்கள். இது தவிர, பல தொழில் வாய்ப்புகளும் இருக்கும். வெளிநாட்டில் இருந்தும் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | பணத்திற்கு பஞ்சமே இருக்காது... இந்த ‘6’ அதிசய செடிகள் இருந்தால் போதும்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ