புத்தாண்டு 2024 இன்று மமுதல் தொடங்கியுள்ளது. அந்த வகையில் 2024 ஆம் புத்தாண்டு 12 ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும். இந்த ஆண்டு சனி பகவான் கும்ப ராசியிலும், குரு பகவான் ஆண்டின் முதல் பாதியில் மேஷத்திலும், பின்னர் ரிஷபத்திலும் மாற உள்ளார். ராகு மீனத்திலும், கேது கன்னி ராசியிலும் சஞ்சரிக்க உள்ளார். மற்ற கிரகங்களின் அடிப்படையில் இந்த புத்தாண்டு 12 ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன்களை தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்: மேஷ ராசியினருக்கு 2024-ம் ஆண்டில் திருமண வாழ்க்கை கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்றாக சேர வாய்ப்புக்கள் அதிகம்.


ரிஷபம்: இந்த வருடத்தின் அதிர்ஷ்ட ராசிகளில் ரிஷப ராசியும் ஒன்று. குறிப்பாக மே இறுதி வரை இந்த ஆண்டு உங்களுக்கு செழிப்பு மற்றும் ஆடம்பரங்கள் நிறைந்ததாக இருக்கும். ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டம் உங்கள் பக்கத்தில் இருக்கும். உங்கள் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளை வெல்ல தயாராக இருங்கள்.


மிதுனம்: மிதுன ராசிக்கு நல்ல வாய்ப்புகளை தரக்கூடிய நல்ல ஆண்டாக 2024ஆம் ஆண்டு அமையப்போகிறது. திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். தலைவலி உள்ளிட்ட ஒரு வாரகால உடல் பிரச்னைகள் வந்து போக வாய்ப்பு உள்ளது.


மேலும் படிக்க | 12 ஆண்டுக்குப் பிறகு உருவாகும் சக்திவாய்ந்த ராஜயோகம்... இந்த 5 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை


கடகம்: 2024 ஆம் ஆண்டின் ஆரம்ப நாட்களில் கடக ராசியினருக்கு ஏப்ரல் வரை பெரிய வெற்றிகள் தொழிலில், வருமானத்தில் வந்து சேராது. தொடர்ந்து போராடி முயன்றால் வெற்றி சாத்தியம் ஆகும். புதிய சொத்துக்களை வாங்கலாம். ஆனால் மிக மிக கவனமாக இருப்பது நல்லது.


சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு அற்புதமான ஆண்டாக 2024ஆம் ஆண்டு அமைந்துள்ளது. பண விசயத்தில் கவனம் தேவை. பங்குச்சந்தை முதலீடுகளில் கவனம் தேவை. நல்ல வாய்ப்புகள் தேடி வரப்போகிறது. தொழில் வியாபாரத்தில் கூட்டுத் தொழில் செய்பவர்கள் கணக்கு வழக்குகளில் கவனமாக இருக்க வேண்டும்.


கன்னி: 2024 ஆம் ஆண்டு கன்னி ராசியினருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பிரச்னைகள் இல்லாமல் ஓரளவுக்கு அமைதியான வாழ்க்கை ஆரம்பமாகும். மிகப்பெரிய யோகத்தை தரக்கூடிய ஆண்டாக 2024ஆம் ஆண்டு அமையப்போகிறது.ராகு, கேதுவால் அவ்வப்போது சின்ன ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும். எனவே உடல் நலத்தில் அக்கறை தேவை.


துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டு தொட்டதெல்லாம் பொன்னாகும். குலதெய்வத்தின் கருணை முழுவதுமாக உங்களுக்கு கிடைக்கப்போகிறது. பூர்வீக சொத்து விற்பனையில் லாபம் கிடைக்கும். நிறைய சுப விரைய செலவுகள் நடைபெறப்போகிறது. வாழ்க்கைத் துணைக்காக செய்த மருத்துவ செலவுகள் இனி முடிவுக்கு வரப்போகிறது.


விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் 2024-ம் ஆண்டில் தங்கள் தொழிலை கணிசமாக விரிவுபடுத்தும் வாய்ப்பைப் பெறலாம். ஒன்றன் பின் ஒன்றாக பலன்களைப் பெறுவீர்கள். தொழிலில் பெரிய சாதனைகளை அடையலாம். உறவுகள் மேம்படும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.


தனுசு: உங்கள் மீது பண மழை பொழியும். உங்கள் புத்திசாலித்தனம் இந்த ஆண்டு இன்றியமையாதது. புத்திசாலித்தனத்தை சரியாகப் பயன்படுத்துவது உலகில் உள்ள அனைத்து நல்லிணக்கத்தையும் கொண்டு வரும். 


மகரம்: மகர ராசிக்காரர்களுக்கும் இந்த ஆண்டு யோக ஆண்டாக அமைந்திருக்கிறது. குருவானவன், வீடு கார் உள்ளிட்டவற்றை வழங்க இருக்கிறார். சனி பணத்தை கொட்டோ கொட்டு என்று கொட்ட போகிறார்.


கும்பம்: பிப்ரவரி 14, 2024 உங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கியத்துவத்தைக் குறிக்கும். சமூகத்தில் உங்கள் தாக்கம் அதிகமாக இருக்கும். செவ்வாய் உங்கள் வாழ்க்கையை மிகவும் பிஸியாக மாற்றப் போகிறது. புதன் உங்கள் காதல் வாழ்க்கையை கொஞ்சம் கொந்தளிப்பாக மாற்ற முயற்சிக்கும்.


மீனம்: 2024 உங்களுக்கு ஒரு நல்ல காதல் வாழ்க்கையை உறுதி செய்யும். உங்கள் உறவுகள் அனைத்தும் சீரமைக்கப்படும். நிதி பிரச்சனை ஏற்படலாம். வருடத்தின் இறுதியில், நீங்கள் ஒரு வெற்றியாளராக வெளிப்படுவீர்கள்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | 10 ஆண்டுக்கு பிறகு உருவாகும் சுப ராஜயோகம், சனியால் இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ