புதன் ராசி மாற்றம் 2022: புதன் ராசி மாற்றம் ஜோதிடத்தில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. புத்திசாலித்தனம், வியாபாரம், தர்க்கம் மற்றும் பணம் போன்றவற்றின் காரணியாக புதன் கிரகம் கருதப்படுகிறது. அந்தவகையில் இன்னும் 4 நாட்களில் அதாவது ஆகஸ்ட் 21 முதல் புதன் கிரகம் தனது ராசியை மாற்றப் போகிறது. புதன் தனது சொந்த ராசியான கன்னி ராசியில் சஞ்சரிக்க உள்ளார். அதனால் புதனின் பெயர்ச்சி பலன் 12 ராசிகளை பாதிக்கக்கூடும். இருப்பினும், கன்னி ராசிக்காரர்களுக்கு புதன் ராசி மாற்றத்தால், பொருளாதார நிலை, தொழில் வாழ்க்கை மற்றும் கல்வி ஆகியவற்றில் மிகப்பெரிய பாசிட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்தி தரும். எனவே ஜோதிடக் கணக்கீடுகளின்படி புதன் சஞ்சாரத்தால் அதாவது புதன் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிக பலன் கிடைக்கும் என்பதை இங்கே விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதன் பெயர்ச்சியால் இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும்


ரிஷபம் - புதன் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தரும். இந்த நேரத்தில் உங்கள் நிதி பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். அதேபோல் உங்களின் காதல் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படுத்தி தரும். பணமும், புத்தி சாதுர்யமும் பெறுவீர்கள். இருப்பினும், உங்கள் ஆரோக்கியத்தில் சிறுதி கவனிம் செலுத்திக் கொள்ளவது நல்லதாகும்.


மேலும் படிக்க | சிம்மத்தின் இணையும் சூரியன் - சுக்கிரன்; இந்த ‘4’ ராசிகளின் பொற்காலம் ஆரம்பம்! 


மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் செய்யும் காலம் நன்மை பலன்களை பயக்கும். இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை நீங்கள் பெறுவீர்கள். குடும்பத்துடன் இனிமையாக பொழுதைக் கழிப்பீர்கள். இந்த ராசியில் இருக்கும் வியாபாரிகள் தங்களின் வியாபாரத்தில் லாபம் அடையலாம். நீங்கள் புதிய வேலை தொடங்க நினைத்தால் இது சரியாமன நேரமாக அமையும்.



சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி சாதகமாக பலனை தரும். இந்த காலகட்டத்தில் நீங்கள் மரியாதை மற்றும் கௌரவத்தை பெறவீர்கள். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் பெறவீர்கள். எந்த ஒரு முக்கிய முடிவையும் எடுப்பதற்கு முன், பெரியவர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது..


கன்னி - புதன் சஞ்சாரம் கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு தரும். இந்த காலகட்டத்தில் உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். அதேபோல் உங்களின் தொழிலில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்துவீர்கள். உங்களின் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். கூட்டாளியின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)


மேலும் படிக்க | ஆகஸ்டில் கிரகங்களின் ராசி மாற்றத்தால் இந்த ராசிகளுக்கு எக்கச்சக்க ஏற்றம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ