இன்னும் 5 நாட்களில் இந்த 4 ராசிகளுக்கு மகாலட்சுமி யோகம் கிடைக்கும்
Shukra Rashi Parivartan 2022 on Ganesh Chaturthi: விநாயக சதுர்த்தி நாளில் இருந்து இந்த 4 ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும். அந்த ராசிக்காரர்கள் எவை என்பதை பார்ப்போம்.
விநாயக சதுர்த்தி அன்று சுக்கிரன் ராசி பெயர்ச்சி 2022: வேத ஜோதிடத்தில், சுக்கிரன் கிரகம் செல்வம், பணம், அந்தஸ்து, மகிழ்ச்சி, செழிப்பு காதல், திருமண மகிழ்ச்சி, அழகு, கலை, ஆடம்பரம் மற்றும் அன்பு போன்றவற்றின் காரணியாக கருதப்படுகிறது. மேலும் இது பொதுவாக நன்மை தரும் கிரகமாக அறியப்படுகிறது. அதேபோல் சுக்கிரன் துலாம் மற்றும் ரிஷபத்தை ஆளும் கிரகமாகவும் கருதப்படுகிறார். மேலும் மீனம் உயர்வாகவும், கன்னி குறைவாகவும் கருதப்படுகிறது. அந்தவகையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி சுக்கிரன் தனது ராசியை மாற்றப் போகிறார். இந்த நாளில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் விநாயக சதுர்த்தி தினத்தன்று சுக்கிரன் கடக ராசியை விட்டு விலகி சிம்ம ராசியில் பிரவேசிப்பார். எனவே விநாயக சதுர்த்தி நாளில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக அமையும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு விநாயக சதுர்த்தி முதல் நல்ல நாட்கள் தொடங்கும்.
மேஷம்
சுக்கிரன் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில், மேஷ ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அந்தஸ்து ஆகிவற்றை பெறுவீர்கள். தந்தையின் பணிகளில் உங்கள் ஒத்துழைப்பு பாராட்டப்படும். குடும்ப உறுப்பினர் ஒருவரிடமிருந்து பரிசு பெறுவீர்கள். முதலீடு செய்வதற்கு சாதகமான காலமாக இது அமையும் .
மேலும் படிக்க | ஆகஸ்ட் 31 சுக்கிரன் பெயர்ச்சி, இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் ராசி மாற்றம் சுபமான்அ பலனை ஏற்படுத்தி தரும். இந்த காலகட்டத்தில் அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் அடைவீர்கள். கூட்டுப் பணிகளில் வெற்றி உண்டாகும். அதேபோல் உங்களின் கௌரவம் கூடும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.
சிம்மம்
சுக்கிரன் ராசி மாற்றம் சிம்ம ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைத் தரும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். திருமணமாகாதவர்களின் திருமணம் நிச்சயிக்கப்படும். அதேபோல் சிம்ம ராசிக்காரர்கள் பணம் குவிப்பதில் வெற்றி பெறுவீர்கள். தொழிலில் முன்னேற வாய்ப்புகள் அமையும்.
கும்பம்
சுக்கிரன் சஞ்சாரம் கும்ப ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியைத் தரும். இந்த காலகட்டத்தில் குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். பொருளாதார நிலை கும்ப ராசிக்காரர்களுக்கு மேம்படும். பணம் குவிப்பதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்களின் துறையில் முன்னேற்றம் ஏற்படும். அதேபோல் இந்த ராசியில் இருக்கும் வியாபாரிகளின் வியாபாரம் வேகமாக பெருகும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )
மேலும் படிக்க | செப்டம்பர் மாதம் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்: மகிழ்ச்சி பொங்கும், உங்க ராசி என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ