1500 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த சுபநாள்! இன்று குரு புஷ்ய யோகம் தரும் பூச நட்சத்திரம்

Guru Pushya Yoga: இன்றைய பூச நட்சத்திரம் பல நூற்றாண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்த அபூர்வ நிகழ்வு... இந்த நாள் 1500 ஆண்டுகளுக்கு பிறகு வந்திருக்கிறது. இந்த நாள் மீண்டும் வருவதை பார்க்க நாம் இருக்கவே மாட்டோம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 25, 2022, 07:21 AM IST
  • உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புகள் இருக்கும்.
  • நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகளை முடிக்க முடியும்.
  • பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
1500 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த சுபநாள்! இன்று குரு புஷ்ய யோகம் தரும் பூச நட்சத்திரம் title=

Guru Pushya Yoga: இன்றைய பூச நட்சத்திரம் பல நூற்றாண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்த அபூர்வ நிகழ்வு... இந்த நாள் 1500 ஆண்டுகளுக்கு பிறகு வந்திருக்கிறது. இந்த நாள் மீண்டும் வருவதை பார்க்க நாம் இருக்கவே மாட்டோம். வியாழக்கிழமை அன்று பூச நட்சத்திரம் வருவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. 2022, ஆகஸ்ட் 25ம் நாளன்று 15 நூற்றாண்டுகளுக்கு வியாழன் அன்று குரு புஷ்ய யோகம் ஏற்பட்டுள்ளது. ஜோதிடத்தில் பூச நட்சத்திரம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இன்று வாங்கும் பொருட்கள் நீண்ட நாளைக்கு நிலைத்து நீடிக்கும் என்றும், வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரும் என்றும் நம்பப்படுகிறது. இன்று குரு புஷ்ய யோகத்துடன் வேறு சில மங்களகரமான யோகங்களும் உருவாகியுள்ளன. 1500 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற ஒரு அரிய தற்செயல் நிகழ்வு நடக்கிறது.  

இன்று, குரு புஷ்ய யோகத்துடன், சர்வார்த்தசித்தி, அமிர்தசித்தி, போன்ற மிகவும் மங்களகரமான யோகங்களும் உண்டாகும். இது தவிர, சுப, மூத்த, பாஸ்கர், உபயச்சாரி, ஹர்ஷ், சரல், விமல் என்ற ராஜயோகங்களும் உருவாகும். இது தவிர சூரியன் தன் சொந்த ராசியான சிம்மத்திலும், சந்திரன் கடகத்திலும், புதன் கன்னியிலும், சனி மகரத்திலும் இருப்பார்கள். இந்த முக்கியமான கிரகங்கள் தங்கள் சொந்த ராசியில் தங்கி இருக்கும்போது ஏற்படும் நாள் இன்று.  

மேலும் படிக்க | Astro: தீராத கடன் தொல்லையா; சில எளிய ஜோதிட பரிகாரங்கள்

குரு அருளுடன் கூடிய பூச நட்சத்திரம் கொண்ட யோக தினமான இன்று, அன்னை லட்சுமி தேவியை பூஜித்து அருளை பெறுவதற்கு மிகவும் உகந்த நாள் ஆகும். இந்த  அபூர்வ குரு புஷ்ய யோகம் இருக்கும் நாளில் எந்த பொருட்களை வாங்கினாலும் அது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

குரு புஷ்யத்தில் இந்த சுப காரியத்தைச் செய்யுங்கள்
குரு புஷ்ய யோகம் இருக்கும் நாளில் சொத்து-வாகனம் வாங்குவது சுபமானதாக இருக்கும். இது தவிர நகை, ஆடை, மஞ்சள் வாங்குவதும் நல்லது. வீடு-அலுவலகம் திறப்பதற்கும், புதிய வேலையைத் தொடங்குவதற்கும், பரிவர்த்தனைகளுக்கும் இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | Astro: ஏழரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்

மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News