செவ்வாய்-சுக்கிரன்-புதன் சேர்க்கையின் தாக்கம் 2023: வேத ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறது. அத்தகைய சூழ்நிலையில், பல முறை ஒரே ராசியில் கிரகங்களின் சேர்க்கை உருவாகிறது, இது பல ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். தற்போது 50 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்ம ராசியில் செவ்வாய், சுக்கிரன், புதன் இணைந்துள்ளதால் 12 ராசிகளையும் பாதிக்கும். ஆனால் கிரகங்களின் நிலை மிகவும் சாதகமான விளைவை ஏற்படுத்தும் மூன்று ராசிகள் உள்ளன. இந்த ராசிக்காரர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திரிகிரஹி யோகம்
ஜூலை 25 ஆம் தேதி காலை சிம்ம ராசியில் செவ்வாய், சுக்கிரன், புதன் ஆகிய மூன்று கிரகங்களும் இணைந்துள்ளன. இந்த கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரஹி யோகம் உருவாகியுள்ளது. ஜோதிடத்தில் கிரகங்களின் சேர்க்கைக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. ஜோதிட சாஸ்திரத்தில் மூன்று கிரகங்களின் சேர்க்கையை திரிகிரஹி யோகம் என்று கூறுவார்கள். ஒரு ராசியில் மூன்று கிரகங்கள் சேர்ந்தால் இந்த யோகம் உருவாகும். இப்படிப்பட்ட சேர்க்கையும் இந்த யோகமும் மிக அரிதாக கருதப்படுகின்றன.


மேலும் படிக்க | குரு வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது குரு அருள் பொழிவார்! டபுள் கொண்டாட்டம்


திரிகிரஹி யோகத்தின் தாக்கத்தால் அதிர்ஷ்டம் பெரும் ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


சிம்ம ராசி - சிம்ம ராசியில் செவ்வாய்-சுக்கிரன்-புதன் சேர்க்கை சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் பலன் தரும். திரிகிரஹி யோகம் அமைவதால், உங்கள் திருமண வாழ்வில் இருந்த பல பிரச்சனைகள் நீங்கும். வாழ்க்கைத்துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். இக்கூட்டணியின் பலன் காரணமாக வேலை, உத்யோகம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். கனவுகளை நிறைவேற்றவும், வியாபாரத்தில் லாபம் ஈட்டவும் இது ஒரு நல்ல வாய்ப்பு. குடும்பத்தின் ஆதரவு இருக்கும், சிம்ம ராசி கொண்ட மக்களுக்கு வாழ்வில் மகிழ்ச்சி அலை வீசும். செல்வத்தைப் பெருக்குவதற்கும் பெரிய இழப்புகளைத் தடுப்பதற்கும் இதுவே சரியான நேரம்.


துலாம் ராசி - மூன்று கிரகங்களின் சேர்க்கையானது துலாம் ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளில் இருந்து விடுபட ஒரு முக்கிய வாய்ப்பாக அமையும். வருமானம் பெருகும், பதவி உயர்வு உண்டாகும். துலாம் ராசியின் மக்களின் அதிர்ஷ்டம் மேம்படும் மற்றும் அவர்களின் வருமான அளவை அதிகரிக்க இதுவே சிறந்த நேரம். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.


கும்ப ராசி - சிம்மம் ராசியில் உள்ள மூன்று கிரகங்களின் சேர்க்கை கும்ப ராசி மக்களின் வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. தொழிலதிபர்கள் லாபம் சம்பாதிப்பதோடு தங்கள் தொழில் வாழ்க்கையில் வேகமாக முன்னேறுவார்கள். உங்கள் வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும், மேலும் உங்கள் துணையுடன் பயணம் செய்வதில் மகிழ்ச்சி அடைவீர்கள். வருமானம் உயரும், கும்ப ராசி மக்கள் நல்ல ஆரோக்கியத்தைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அளவு அதிகமாக இருக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE Media மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: ஆடிப் பெருக்கு... இந்த 4 ராசிகளுக்கு அதிஷ்டமான நாள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ