3 கிரக சேர்க்கையால் உருவான திரிகிரஹி யோகம்: இந்த ராசிகளின் வாழ்க்கை பிரகாசிக்கும்

Trigrahi Yogam: திரிக்ரஹி யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் அபரிமிதமான நற்பலன்களை பெறுவார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 26, 2023, 05:02 PM IST
  • கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த திரிகிரஹி யோகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • இந்த நேரத்தில் தொடங்கும் எந்த ஒரு திட்டம், வேலை அல்லது வணிகமும் உங்களுக்கு நல்ல லாபத்தை தரும்.
  • இந்த யோகத்தால் செல்வமும் செழிப்பும் கிடைக்கும்.
3 கிரக சேர்க்கையால் உருவான திரிகிரஹி யோகம்: இந்த ராசிகளின் வாழ்க்கை பிரகாசிக்கும் title=

திரிகிரஹி யோகம், ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களுக்கு மிக அதிக முக்கியத்துவம் உள்ளது. கிரங்களின் பெயர்ச்சிகள், இயக்க மாற்றங்கள், உதய, அஸ்தமன நிலைகள் என அனைத்து விதமான மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கிரகங்களின் சேர்க்கைகளும் பல வித ராஜயோகங்களை உருவாக்குகின்றன. இந்த ராஜயோகங்களால் அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கின்றன.

திரிகிரஹி யோகம்: 

ஜூலை 25ம் தேதி காலை சிம்ம ராசியில் செவ்வாய், சுக்கிரன், புதன் ஆகிய மூன்று கிரகங்களும் இணைந்துள்ளன. இந்த கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரஹி யோகம் உருவாகியுள்ளது. ஜோதிடத்தில் கிரகங்களின் சேர்க்கைக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. ஜோதிட சாஸ்திரத்தில் மூன்று கிரகங்களின் சேர்க்கையை திரிகிரஹி யோகம் என்று கூறுவார்கள். ஒரு ராசியில் மூன்று கிரகங்கள் சேர்ந்தால் இந்த யோகம் உருவாகும். இப்படிப்பட்ட சேர்க்கையும் இந்த யோகமும் மிக அரிதாக கருதப்படுகின்றன. 

செவ்வாய், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் இணைந்துள்ளதால் உருவாகியுள்ள திரிக்ரஹி யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் அபரிமிதமான நற்பலன்களை பெறுவார்கள். இவர்களின் வாழ்க்கை பிரகாசிக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷ ராசி:

மேஷ ராசிக்காரர்களுக்கு திரிகிரஹி யோகம் சாதகமாக அமையும். செவ்வாய், சுக்கிரன், புதன் இணைந்து வருவதால் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பணியிடத்தில் மூத்த அதிகாரிகள் உங்களுக்கு ஒத்துழைப்பார்கள். உங்கள் மீதான அவர்களது கண்ணோட்டம் மிகவும் நன்றாக இருக்கும். பணியிடத்தில் சில நல்ல மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த யோகத்தால், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் சகலவித சுகங்களையும், வசதிகளையும் பெறுவார்கள். அலுவலக வேலை மற்றும் தொழிலில் அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் ஒரு புதிய வேலையைத் தொடங்கலாம். வெளிநாட்டில் பணிபுரிய சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த நினைக்கும் தொழிலதிபர்களுக்கு இந்த யோகம் சுப பலன்களை தரும். உங்கள் ஆர்வம் ஆன்மீகத்தை நோக்கி நகரும்.

துலா ராசி

துலா ராசிக்காரர்களுக்கு தொழில் அவர் அவரது துறையில் திரிகிரஹி யோக பலன் கொடுக்கும். சிறப்பான வருமான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சில நல்ல திட்டங்களையும் செயல்படுத்துவீர்கள். இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால் உங்கள் ஜாதகத்தில் பண ஆதாயங்கள் உருவாகும். உங்கள் வாழ்வில் செழிப்பு இருக்கும். சமூகத்தில் உங்கள் மரியாதையும் மதிப்பும் அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டுப் பயணம் செல்லும் வாய்ப்பும் உருவாகி வருகிறது.

மேலும் படிக்க | சனியால் ஷஷ ராஜயோகம்.. இந்த ராசிகளுக்கு பொற்காலம், பண மழை கொட்டும்

விருச்சிக ராசி

விருச்சிக ராசிக்காரர்களுக்கு அரிதான திரிகிரஹி யோகம் மிகவும் பலனளிக்கப் போகிறது. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் மத்தியில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். அரசாங்க ராஜ்ஜீய துறை அதிகாரிகள் அல்லது நிர்வாக அதிகாரிகள் இந்த யோகத்தால் மகத்தான பலன்களைப் பெறப் போகிறார்கள். இந்த நேரத்தில் நீங்கள் வெளிநாட்டிலிருந்து நல்ல திட்டங்கள் மற்றும் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பும் கிடைக்கும்.

கும்ப ராசி

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த திரிகிரஹி யோகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நேரத்தில் தொடங்கும் எந்த ஒரு திட்டம், வேலை அல்லது வணிகமும் உங்களுக்கு நல்ல லாபத்தை தரும். இந்த யோகத்தால் செல்வமும் செழிப்பும் கிடைக்கும். இந்த நேரத்தில் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். இந்த ராசிக்காரர்கள் வேலையை விட்டுவிட்டு சொந்தமாக தொழில் தொடங்கினாலும் அதில் வெற்றி கிடைக்கும். உங்களுக்கு திடீரென்று பணம் வர வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.

மீன ராசி

மீன ராசிக்காரர்கள் அவரவர் துறையில் சிறப்பாக செயல்பட்டு பாராட்டுகளைப் பெறுவார்கள். உங்கள் நிலை மற்றும் நற்பெயரில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் உங்களின் பணியால் புகழ் பெறுவீர்கள். இந்த யோக பலன் மூலம் அனைவரின் கவனத்தையும் உங்கள் பக்கம் ஈர்ப்பீர்கள். எதிரிகளை எளிதில் வெல்வீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி - செவ்வாயின் சமசப்தக யோகம்... நிதி நெருக்கடிகளை சந்திக்கும் ‘சில’ ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News