Budhan Peyarchi Palangal: அனைத்து கிரகங்களும்  ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. ராசிகள் தவிர கிரகங்களின் நட்சத்திரங்கள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி, உதய, அஸ்தம நிலைகள் என பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. புதன் புத்திசாலித்தனம், வணிகம், ஞானம், பேச்சாற்றல், ஆகியவற்றின் காரணி கிரகமாக கருதப்படுகிறார். ஒருவருடைய ஜாதகத்தில் புதப் சுப ஸ்தானத்தில் இருந்தால், அவர் வாழ்வில் பல வித உச்சங்களைத் தொடுகிறார். வணிகத்தில் அதிக லாபம் காண்கிறார். சிறந்த பேச்சாளராக, புத்திசாலியாக, பெரிய தொழிலதிபராக திகழ்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதன் மிதுன ராசியின் அதிபதியாக உள்ளார். கிரகங்களின் இளவரசன் என அழைக்கப்படும் புதனின் அருள் இருந்தால், தொலைந்து போன அதிர்ஷ்டமும் மீண்டும் கிடைக்கும். இன்று, அதாவது மே 31ம் தேதி புதன் மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷப ராசிக்குள் பெயர்ச்சி ஆவார். இந்த பெயர்ச்சி அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. 


புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். நிதி ஆதாயம் உண்டாகும். புத்திசாலித்தனத்தின் அடிப்படையில் வேலை கிடைக்கும். ரிஷப ராசியில் புதனின் பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை (Zodiac Signs) பற்றி இங்கே காணலாம். 


மேஷம் (Aries): 


மேஷ ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி சுப பலன்களைத் தரும். வியாபாரம் செய்பவர்கள் பெரிய வெற்றியைப் பெறலாம். வியாபாரமும் லாபமும் அதிகரிக்கும். அலுவலக பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். வீட்டில் சாதகமான சூழல் நிலவும்.


ரிஷபம் (Taurus):


ரிஷப ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியாகி ரிஷப ராசியில் பிரவேசிப்பதால் ஏற்படும் புதன் பெயர்ச்சி, ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மையாக அமையப் போகிறது. சமூகத்தில் உங்கள் மதிப்பும், மரியாதையும், பதவியும் உயரும். பணி இடத்தில் ஊதிய உயர்வும், பதவி உயர்வும் இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.


மேலும் படிக்க | சுக்கிரனின் அருள் பெற பரிகாரங்கள்! தோஷம் வரமாய் மாற லட்சுமி கடாட்சம் அளிக்கும் ருரு பைரவர் வழிபாடு


மிதுனம் (Gemini): 


மிதுன ராசிக்கு அதிபதியான புதன் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தருவார். புதனின் பெயர்ச்சி காரணமாக பணி இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 


சிம்மம் (Leo): 


சிம்ம ராசிக்காரர்களுக்கு புதன் சுப பலன்களைத் தருவார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். உங்களுக்கு நல்ல நேரம் இப்போது ஆரம்பம் ஆகும். புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய செல்வ வளங்கள் உருவாகும். வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சேரும் கிரகங்களின் தன்மைக்கேற்ப பலனை மாற்றிக் கொடுக்கும் புத்திசாலி புதன் பெயர்ச்சி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ