குரு உதயத்தால் இந்த ராசிகளுக்கு குபேர யோகம்: பண மழையில் நனைவார்கள்

Guru Udhayam Palangal: அனைத்து கிரகங்களிலும் மிகவும் சுபமான கிரகமாக கருதப்படும் குரு பகவான் ஜூன் 6 ஆம் தேதி உதயமாகவுள்ளார். குரு உதயத்தால் சில ராசிகளுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். பண வரவு அதிகமாகும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Guru Udhayam Palangal: குரு பகவான் செல்வம், கல்வி, அறிவு, திருமணம், குழந்தைகள், தொண்டு போன்றவற்றின் காரணி கிரகமாக கருதப்படுகிறார். சனி பெயர்ச்சியை போலவே குரு பெயர்ச்சிக்கும் மிகப்பெரிய முக்கியத்துவம் உள்ளது. மே 1 ஆம் தேதி குரு ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆனார். இது இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. 

1 /9

மே 1 ஆம் தேதி ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆன குரு பகவான் மே 7 ஆம் தேதி அஸ்தமனமானார். இப்போது அவர் ஜூன் 6 ஆம் தேதி ரிஷபத்திலேயே உதயமாவார். ஜூன் மாத குரு உதயம் மிக முக்கியமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. 

2 /9

குரு உதயத்தின் தாக்கம் பெரும்பாலும் அனைத்து ராசிகளிலும் ஆக்கப்பூர்வமான பலன்களையே அளிக்கும். எனினு, சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். பண வரவு அதிகமாகும். வியாபாரம் செழிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

3 /9

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு குரு உதயமும் குரு பெயர்ச்சியும் மிகவும் நன்மை பயக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டாகும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். கடின உழைப்புடன் செய்யும் வேலையில் வெற்றி பெறுவீர்கள். பொருளாதார அம்சம் வலுவாக இருக்கும்.

4 /9

ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு குரு உதயமும் குரு பெயர்ச்சியும் லாபகரமான பலன்களை அள்ளித்தரும். வேலை தேடிக்கொண்டு இருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த நேரம் சுப காரியங்களுக்கு உகந்தது. இந்த காலம் காதலர்களுக்கும் சாதகமாக இருக்கும். கடன் தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

5 /9

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களும் இந்த காலகட்டத்தில் நன்மையடையப் போகிறார்கள். கல்வித் துறையுடன் தொடர்புடையவர்கள் சில நல்ல செய்திகளைப் பெறுவார்கள். வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். தொழில் துறையில் லாபம் உண்டாகும். செல்வம் பெருக வாய்ப்பு உண்டு. மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். 

6 /9

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கும் குரு பகவானின் சிறப்பு ஆசிகள் கிடைக்கவுள்ளன. குரு பெயர்ச்சி மற்றும் குரு உதயத்தின்  தாக்கத்தால் இவர்களுக்கு ஆன்மீக பணிகளில்  நாட்டம் அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். பதவி உயர்வு மற்றும் நிதி ஆதாயம் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் ஆதாயம் அடைவார்கள். துணிச்சல் துணை இருக்கும். பதவி, கௌரவம் உயரும்.

7 /9

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியும் குரு உதயமும் மிகவும் சாதகமாக இருக்கும். நீண்ட நாட்களாக சிக்கி இருந்த பணம் இப்போது திரும்பக் கிடைக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு. இந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகள் உண்டாகும்.

8 /9

குரு பகவானின் அருள் பெற,    'குரவே சர்வ லோகானாம், பிஷஜே பவ ரோகினாம்   நிதயே சர்வ வித்யானாம் தக்ஷிணா மூர்த்தயே நமஹ!'  என்ற ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லலாம்.

9 /9

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.