சேரும் கிரகங்களின் தன்மைக்கேற்ப பலனை மாற்றிக் கொடுக்கும் புத்திசாலி புதன் பெயர்ச்சி!

Budh Graha Traits:  சுபகிரகங்களில் ஒன்றான புதன் பகவான் அலிக்கிரகம் என்று அழைக்கபடுகிறது. புதன், எந்த கிரகத்தோடு சேர்கிறதோ அதன் தன்மையை பிரதிபலிக்கும் தன்மைக் கொண்டது. 

புதன் கிரகம், வித்யாகாரகன் என்றும் அழைக்கப்படுகிறார். கல்வித்துறையில் பிரபலமானவர்கள், கல்வி-கேள்வி, கலை வித்தை, தொழில், சாதுர்யம் மிக்கவர்கள் அனைவரும் புதன் பலம் பெற்றவர்களாக இருப்பார்கள்.  

1 /8

புதன் கிரகம் அறிவுக்கு அதிபதி, எந்த கிரகத்துடன் சேர்ந்தாலும் அதன் பலன்களை கூட்டிக் கொடுக்கும் கிரகம் என்பதால், அலிக்கிரகம் எனப்படுகிறது. தனக்கு என்று தனிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துவதைவிட, சேரும் கிரகங்களின் தன்மையை கூட்டும் தன்மையால் இந்த பெயர் பெற்றுள்ளது

2 /8

புத்திசாலித்தனமாக செயல்படுபவர்களுக்கு புதன் வலுவாக இருப்பார்.

3 /8

புதன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாற 25 நாட்கள் ஆகும். இன்று மே 31 ஆம் தேதி ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் புதன் பகவான்.  

4 /8

புதன் பெயர்ச்சியின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் இருக்கும். ஆனால் ராசிக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும்

5 /8

புதன் கேட்டை, ஆயில்யம், ரேவதி நட்சத்திரங்களின் அதிபதியான புதன் ஆட்சி பெற்று அல்லது உச்சம் பெற்ற சூரியனுடன் சேர்ந்தால் புதாதித்ய யோகம் ஏற்படும்.  

6 /8

பேச்சு வல்லமை, நடனக் கலைஞர்கள், பாடகர்கள், இசைக்கலைஞர்கள் என கலைஞர்களுக்கும் புதன் வலுவாக இருக்கும். வாக்குஸ்தானம் வலிமையாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு புதனின் அனுக்கிரகம் தேவை.

7 /8

புதனுக்கு உரிய பச்சை நிற ஆடைகளை புதன்கிழமை நாட்களில் அணிவது, உங்கள் ஜாதகத்தில் புதனின் நிலையை வலுப்படுத்தும்.

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது