சுக்கிரன் மாற்றத்தால் இந்த ராசிகள் மீது லட்சுமி அன்னையின் அருள் மழை: செல்வம் பெருகும்
Venus Transit: சுக்சிரனின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படும். எனினும், சில ராசிக்காரர்கள் சிறப்புப் பலன்களைப் பெறுவார்கள்.
சுக்கிரன் பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு தனித்துவமான முக்கியத்துவம் உள்ளது. சுக்கிரன் கிரகம் செல்வம், செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் வளமை ஆகியவற்றின் அடையாளமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக, ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் பலமாகவும், பலவீனமாகவும் இருப்பது, அந்த நபரின் வாழ்வில் முக்கிய தாக்கங்களை ஏற்படுத்தும். ஜோதிட சாஸ்திரப்படி, ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் வலுவான நிலையில் இருந்தால், அவருக்கு லட்சுமி தேவியின் சிறப்புப் அருள் கிடைக்கும். எனினும், சுக்கிரன் சாதகமான நிலையில் இல்லாவிட்டால், அந்த நபர் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசி மற்றும் நிலையை மாற்றுகிறது. அக்டோபர் 18 ஆம் தேதி சுக்கிரன் துலாம் ராசியில் நுழையவுள்ளார். சுக்சிரனின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படும். எனினும், சில ராசிக்காரர்கள் சிறப்புப் பலன்களைப் பெறுவார்கள். இவர்களின் வாழ்வில் நல்ல நாட்கள் துவங்கி அன்னை லட்சுமியின் இவர்கள் மீது பரிபூரண அருளை பொழிவார். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அவர்களின் கௌரவம் உயரும். சுக்கிரன் சஞ்சாரம் செய்யும் போது வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பொருளாதார நிலை மேம்படும். இவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவார்கள். கொடுக்கல் வாங்கலில் லாபம் கூடும். அன்னை லக்ஷ்மியின் அருள் நிலைத்திருக்கும்.
கடகம்:
சுக்கிரனின் ராசி மாற்றத்தினால், கடக ராசிக்காரர்களுக்கு பணி இடத்தில் பல வெற்றிகளும், நல்ல செய்திகளும் கிடைக்கும். இந்த காலத்தில் வருமானம் அதிகரிக்கும். இதன் காரணமாக பண பிரச்சனைகள் தீரும். உங்கள் மனைவியுடனான உறவில் இனிமை அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் நேரத்தை செலவிடுவார்கள். இந்தக் காலம் கல்வித் துறையில் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். நீங்கள் முதலீடு செய்யும் எண்ணத்தில் இருந்தால், அதை இப்போது செய்வது நல்லது. இந்த காலத்தில் செய்யப்படும் முதலீட்டால், எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மேலும் படிக்க | சனிதசையால் சிக்கித்தவிக்கும் ராசிகள்: இந்த பரிகாரங்களால் பலன் கிடைக்கும்
கன்னி:
ஜோதிட சாஸ்திரத்தின்படி, சுக்கிரனின் ராசி மாற்றம் கன்னி ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலனைத் தரும். நீண்ட நாட்களாக நடக்காமல் முடக்கத்தில் இருந்த பணிகள் தற்போது நடந்துமுடியும். பணியிடத்தில் மரியாதையும் மதிப்பும் அதிகரிக்கும். பயணங்களால் நன்மை உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். நீங்கள் செய்யும் பணி பாராட்டப்படும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள கன்னி ராசிக்காரர்களுக்கும் இது மிக நல்ல நேரமாக இருக்கும். இந்த நேரம் வேலை மற்றும் வணிகம் இரண்டிற்கும் ஏற்றதாக கருதப்படுகிறது.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு பலவித சுப பலன்கள் கிடைக்கும். இதுமட்டுமின்றி உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் ஏதாவது புதிய வேலையைச் செய்ய நினைத்தால், இப்போது அதைச் செய்யலாம். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். பண ஆதாயங்களால் நிதி நிலை வலுப்பெறும். கல்வித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கும் இந்த நேரம் சாதகமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பரிபூரண ஆதரவு இப்போது கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தீபாவளியை களை கட்ட வைக்கும் சூரிய பெயர்ச்சி! வாயைக் கட்டுப்படுத்தினால் நிம்மதி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ