அக்டோபர் 16ம் தேதியன்று மிகப்பெரிய ராசி மாற்றம்! ’5’ ராசிகளுக்கு கலக்கம்

Mars Transit: செவ்வாயின் ராசி மாற்றத்தால் யாருக்கு லாபம், யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 14, 2022, 07:08 AM IST
  • வியாபாரத்தில் புதிய முயற்சி செய்ய மேஷ ராசிக்காரர்களுக்கு வாய்ப்பு
  • மிதுன ராசிக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்
  • கடக ராசியினர் புதிய வீடு, வாகனம் வாங்கலாம்
அக்டோபர் 16ம் தேதியன்று மிகப்பெரிய ராசி மாற்றம்! ’5’ ராசிகளுக்கு கலக்கம் title=

இந்த மாதத்தின் மிகப்பெரிய ராசி மாற்றம் வரும் அக்டோபர் 16ம் தேதியன்று நடைபெறவிருக்கிறது. 5 ராசிக்காரர்களுக்கு செல்வமும் வளமும் கொழிக்கும்! அதில் உங்கள் ராசியும் உள்ளதா என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள். ஜோதிடத்தில், கிரகங்களின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கிரகங்களின் ராசியில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிகளுக்கும் நல்ல மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இந்த நாளில், கிரகங்களில் முக்கியமான செவ்வாய் கிரகம் தனது ராசியை மாற்றப் போகிறார். சில ராசிக்காரர்களுக்கு செவ்வாய் ராசி மாற்றம் அதிர்ஷ்டத்தைக் கொடுத்தாலும், சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தும்.

செவ்வாயின் ராசி மாற்றத்தால் யாருக்கு லாபம், யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம். மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிகளுக்கான பலன்கள் இவை.

மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு சாண்டள யோகம்; சில எளிய பரிகாரங்கள்

மேஷம் - மனம் மகிழ்ச்சியாக இருக்கும். கல்விப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணம் கைகூடும். தொழில் நிலை மேம்படும். வராமல் தடைபட்டு நின்றிருந்த பணம் வந்து சேரும். குடும்பத்துடன் ஆன்மீக  பயணம் மேற்கொள்ளலாம். கட்டிடம் அல்லது சொத்து தொடர்பாக தகராறு ஏற்படலாம் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம் - உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அமையும். வருமானம் அதிகரிக்கும். ஆனால், ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும், அவருக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும்.

மிதுனம் - மனதில் அமைதி இருக்கும், ஆனால் தன்னம்பிக்கை குறையும். கல்விக்காக வெளியூர் செல்ல வாய்ப்பு உண்டு. நண்பர்களின் ஆதரவு அதிகரிக்கும். வருமானம் குறையும் ஆனால் செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். செலவுகள் அதிகமாக இருக்கும். வாழ்க்கையில் விரக்தி ஏற்படும்.

மேலும் படிக்க | குருவின் ராசி மாற்றத்தினால் பஞ்சமஹாபுருஷ ராஜயோகம்; அமோக வாழ்வைப் பெரும் ‘3’ ராசிகள்! 
 
கடகம் - நம்பிக்கை நிறைந்திருக்கும். மனநல பிரச்சனைகளும் வரலாம். அமைதி எப்போது கிடைக்கும் என்று ஏக்கம் வரும். இடையூறுகள் பல விதங்களில் ஏற்படலாம். கலை மற்றும் இசையில் ஆர்வம் கூடும். கோபத்தையும், அதீத ஆர்வத்தையும் தவிர்க்கவும். குடும்பத்தில் சமய நிகழ்வுகள் நடைபெறும், வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்,

சிம்மம் - கல்விப் பணிகளில் வெற்றி பெறுவீர்கள், மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும் அறிவுசார் வேலைகளால் கெளரவம் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு கிடக்கும். நம்பிக்கை அதிகமாகும். பேச்சில் கடுமையின் தாக்கம் இருக்கும். பொறுமை குறையும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சகோதர சகோதரிகளின் ஒத்துழைப்பால் வியாபாரம் விரிவடையும். லாபம் அதிகரிக்கும்.

கன்னி - பேச்சில் இனிமை இருக்கும். முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள். கல்வித் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்களைப் பெறுவீர்கள். செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வேறு இடத்துக்குச் செல்ல வேண்டி வரலாம். பேசும்போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துங்கள். தொழில் நிலை மேம்படும் என்பதால் லாபமும் அதிகரிக்கும். ஆனால் மனக் கஷ்டங்கள் அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | Astro: ஏழரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News