ராசி மாறுகிறார் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு ராஜயோகம், உங்க ராசி என்ன?

Venus Transit: கன்னி ராசியில் சுக்கிரன் செல்வதால் பல ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட யோகம் உண்டாகும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சஞ்சாரம் நல்ல பலனகளை அளிக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 20, 2022, 07:53 PM IST
  • கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும்.
  • இந்த காலகட்டத்தில் உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும்.
  • வருமானம் உயரும் வாய்ப்புகள் உண்டு.
ராசி மாறுகிறார் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு ராஜயோகம், உங்க ராசி என்ன? title=

சுக்கிரன் ராசி பரிவர்தனை, 24 செப்டம்பர் 2022: சுக்கிரன் கிரகம் செப்டம்பர் 24 அன்று கன்னி ராசியில் நுழையவுள்ளது. ஜோதிடத்தில், சுக்கிரன் கிரகம், ஆடம்பரம், செல்வம், செழிப்பு, காதல் மற்றும் செழுமை ஆகியவற்றின் காரக கிரகமாக கருதப்படுகிறது. ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை வலுவாக இருக்கும்போது சுப பலன்கள் கிடைக்கும். சுக்கிரன் உச்சமடைந்தால், சகல சுகபோகங்களும் கிட்டும் என்பது ஐதீகம். சுக்கிரன் ஒரு ராசியில் சுமார் 23 நாட்கள் தங்கி, அதன் பிறகு வேறொரு ராசியில் நுழைகிறார். இந்து நாட்காட்டியின் படி, சுக்கிரன் செப்டம்பர் 24 சனிக்கிழமையன்று கன்னி ராசியில் நுழைகிறார். கன்னி ராசியில் சுக்கிரன் செல்வதால் பல ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட யோகம் உண்டாகும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சஞ்சாரம் நல்ல பலனகளை அளிக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

ரிஷபம்:

ரிஷப ராசிக்கு அதிபதி சுக்கிரன். சுக்கிரன் கன்னி ராசியில் பிரவேசித்தால் பண பலன்கள் கிடைக்கும். குடும்ப பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். பொருளாதார நிலை மேம்படும். உங்கள் தொழிலில் மகத்தான வெற்றியைப் பெறலாம். கௌரவம் உயரும். இந்த காலத்தில் ரிஷப ராசிக்காரர்களின் நிதி நிலை முன்பை விட வலுவாக இருக்கும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் திரும்பக் கிடைக்கும். சமூகத்தில் அவர்களின் மதிப்பும் செல்வாக்கும் அதிகரிக்கும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் பண ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. மரியாதை கூடும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

மேலும் படிக்க | ராசி பெயர்ச்சி: 59 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே ராசியில் மூன்று சுப கிரகங்கள் 

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு கன்னி ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். வருமானம் உயரும் வாய்ப்புகள் உண்டு. பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வு சாத்தியமாகும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்கள் சுக்கிரன் சஞ்சாரத்தால் சுப பலன்களைப் பெறலாம். இந்த நேரத்தில் நீங்கள் முதலீட்டின் பலனைப் பெறுவீர்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். இந்த காலத்தில் வாகனம் மற்றும் சொத்து வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பச் சூழல் இனிமையாகவும், சுகமாகவும், நிம்மதியாகவும் இருக்கும்.

மேலும் படிக்க | 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News