ராகு பெயர்ச்சி 2023, ராசிகளில் அதன் தாக்கம்: கேதுவைப் போலவே, ராகுவும் ஜோதிடத்தில் நிழல் கிரகம் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக சனி பகவானை போலவே ராகு மற்றும் கேதுவின் பெயரை கேட்டாலும் மக்கள் அச்சப்படுவது உண்டு. இந்த கிரகங்கள் தீய விளைவுகளை மட்டுமே ஏற்படுத்தும் என பொதுவாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது தவறான புரிதலாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராகு கேது கிரகங்கள் மக்களுக்கு பல வித நன்மைகளையும் செய்கின்றன. ஜோதிடத்தின்படி, ராகு எந்த ராசியில் பெயர்ச்சி ஆனாலும், அந்த ராசிக்காரர்களுக்கு சுப மற்றும் அசுப விளைவுகள் இரண்டும் ஏற்படுகின்றன. இந்த ஆண்டு ராகு, செவ்வாய்க்கு சொந்தமான மேஷ ராசியில் இருந்து விலகி, அக்டோபர் 30ம் தேதி மதியம் 2.13 மணிக்கு மீன ராசியில் பிரவேசிக்கிறார். ராகு எப்போதும் வக்ர நிலையில் பெயர்ச்சி ஆகிறார் என்பது குறிப்ப்பிட்டத்தக்கது. 


ராசிகளில் தாக்கம்


இந்த வருடம் ராகு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், இந்த பெயர்ச்சியால் மூன்று ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களது வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் பூத்துக்குலுங்கும். 


மேஷ ராசி


மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு ராகுவின் பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும் என்று ஜோதிடர்கள் நம்புகிறார்கள். மேஷ ராசிக்காரர்கள் இந்தப் பெயர்ச்சியின் மூலம் நிதிப் பலன்களைப் பெறுவார்கள். இது உங்கள் நிதி நிலையை வலுப்படுத்தும். இது தவிர, வருமானம் பெருகும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். வேலையில் மகத்தான வெற்றியும் கிடைக்கும். ராகுவின் சஞ்சாரத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு மரியாதை கூடும் வாய்ப்பும் அதிகம் உள்ளது.


இவர்களின் நம்பிக்கை இந்த காலத்தில் மிக அதிகமாக இருக்கும். வியாபாரத்தை முன்னேற்ற புதிய வழிகள் உங்களுக்கு சாதகமாக அமையும். அதுமட்டுமின்றி வேலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.


மேலும் படிக்க | செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும்.. அமோகமாய் வாழ்வார்கள்


கடக ராசி


ஜோதிடர்களின் கூற்றுப்படி, கடக ராசிக்காரர்களும் இந்த ராகுவின் சஞ்சாரத்தால் பல நன்மைகளைப் பெறுவார்கள். ராகுவின் சஞ்சாரத்தால் கடக ராசிக்காரர்களின் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். இது தவிர இந்த ராசிக்காரர்களுக்கு சொந்த வீடு, வாகனம் வாங்கும் யோகம் இப்போது உண்டாகும். இருப்பினும், இங்கே நீங்கள் பொறுமையையும் கட்டுப்பாட்டையும் பராமரிக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இது தவிர, நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த உங்கள் பணிகள் இப்போது முடிவடையும்.  செயல்திறன் நன்றாக இருக்கும், இதனால் பதவி உயர்வுடன் சேர்த்து ஊதிய உயர்வும் கிடைக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.


மீன ராசி


ராகுவின் இந்த பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கப்போகும் மூன்றாவது மற்றும் கடைசி ராசி மீனம் ஆகும். இந்த காலத்தில் மீன ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். நிதி ரீதியாக பல வெற்றிகள் கிடைக்கும். இது தவிர, கடந்த காலத்தில் நீங்கள் யாருக்காவது பணம் கொடுத்திருந்தால், அதை இந்த நேரத்தில் திரும்ப பெறலாம். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இதுதவிர எதிர்பாராத இடங்களிலிருந்து நல்ல செய்தி வரவும் வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு இலக்கையும் எளிதாக அடைவீர்கள். குடும்பத்துடன் இனிமையாக பொழுதை கழிப்பீர்கள். பயணங்கள் செல்வதால் அதிக செலவு ஏற்படும். வேலையை மாற்றும் எண்ணத்தில் இருந்தால் அதிக பலன் கிடைக்கும். இந்தக் காலகட்டத்தில் ஐடி துறையில் இருப்பவர்களுக்கு அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும்.    


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி 2023: இந்த ராசியினருக்கு பணம், பதவி, கௌரவம் கிடைக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ