ராசி மாறுகிறார் புதன்: இந்த ராசிகளுக்கு அமோகமான ராஜயோகம் உண்டாகும்
Mercury Transit: சில ராசிக்காரர்கள் புதனின் ராசி மாற்றத்தால் அபரிமிதமான பலன்களை பெறுவார்கள். இவர்களுக்கு செல்வச் செழிப்பு அதிகரிப்பதுடன் இவர்களது வாழ்வில் மகிழ்ச்சியும் பன்மடங்கு பெருகும்.
புதன் ராசி மாற்றம், ராசிகளின் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரப்படி கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன், அனைத்து 12 ராசிகளிலும் தனது தாக்கத்தை ஏற்படுத்துகிறார். ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறது. கிரகங்கள் தங்கள் ராசிகளை மாற்றும்போதும், நிலைகளை மாற்றும்போதும், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தெரியும். அக்டோபர் 26 ஆம் தேதி புதன் கிரகம் துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார். புதனின் ராசி மாற்றமும் 12 ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும்.
எனினும், சில ராசிக்காரர்கள் புதனின் ராசி மாற்றத்தால் அபரிமிதமான பலன்களை பெறுவார்கள். இவர்களுக்கு செல்வச் செழிப்பு அதிகரிப்பதுடன் இவர்களது வாழ்வில் மகிழ்ச்சியும் பன்மடங்கு பெருகும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
கன்னி:
துலாம் ராசியில் புதனின் சஞ்சாரம் கன்னி ராசியினருக்கு மிகவும் சாதகமாக இருக்கும். கன்னி ராசிக்காரர்களுக்கு பண ஆதாயம் உண்டாகும். உங்கள் இனிமையான மற்றும் அன்பான பேச்சால் அனைவரின் அன்பையும் பெறுவீர்கள். திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள கன்னி ராசிக்காரர்கள் லாபம் அடைவார்கள்.
மேலும் படிக்க | வார ராசிபலன்: மிதுனம், விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை
தனுசு:
புதனின் ராசி மாற்றத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். இந்தக் காலக்கட்டத்தில் எந்த ஒரு வேலையை கையில் எடுத்தாலும் அதில் அமோகமான வெற்றி கிடைக்கும். திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த காலகட்டத்தில் தனுசு ராசிக்காரர்களின் வருமானம் உயர வாய்ப்பு உள்ளது.
இத்தனை நாட்களாக நடந்து முடியாமல் தடைபட்டிருந்த பல பணிகளை தற்போது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். இப்போது அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். குடும்பச் சூழல் இனிமையாக இருக்கும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பண ஆதாயம் கூடும். மேல் அதிகாரிகளின் முழுமையான ஆதரவு இப்போது கிடைக்கும். இது முதலீடு செய்வதற்கு ஏற்ற காலமாக இருக்கும். சொத்து, வாகனம் வாங்கும் யோகம் தற்போது உண்டாகும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள கும்ப ராசிக்காரர்களுக்கும் இது லாபகரமான நேரமாக இருக்கும். இந்த காலத்தில் அதிகப்படியான லாபம் காண்பீர்கள். இப்போது செய்யும் முதலீட்டின் காரணமாக எதிர்காலத்தில் நல்ல லாபம் பெறுவீர்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் / மனைவி, குழந்தைகளுக்கு இடையில் அன்பு அதிகமாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு தற்போது கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இளைஞர்களுக்கு நல்ல செய்தி! தலைவிதியை மாற்றும் சூரியன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ