Astro Remedies: பிரச்சனைகள் உங்களை விடாமல் துரத்துகிறதா; சில ‘இனிப்பான’ பரிகாரங்கள்!

சர்க்கரை நாம் காலையில் விழித்தெழும் போது பருகும், காபி அல்லது தேநீரில் இனிப்பை சேர்ப்பது செய்வது மட்டுமின்றி, வாழ்வில் விடாது துரத்தும் பிரச்சனைகளுக்கு தீர்வைத் தரும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 15, 2022, 11:49 PM IST
  • வாழ்க்கையை குலைக்கும் ராகு தோஷம் நீங்க பரிகாரங்கள்.
  • சமையலறையில் நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று சர்க்கரை.
  • சர்க்கரையை கொண்டு செய்யப்படும் சில பரிகாரங்கள்
Astro Remedies: பிரச்சனைகள் உங்களை விடாமல் துரத்துகிறதா; சில ‘இனிப்பான’ பரிகாரங்கள்! title=

சமையலறையில்  நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று சர்க்கரை. இது நாம் காலையில் விழித்தெழும் போது பருகும், காபி அல்லது தேநீரில் இனிப்பை சேர்ப்பது செய்வது மட்டுமின்றி, வாழ்வில் விடாது துரத்தும் பிரச்சனைகளுக்கு தீர்வைத் தரும்.  சர்க்கரைக்கும் கிரகங்களுக்கும் தொடர்பு உண்டு என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இது தவிர, சில விசேஷ சந்தர்ப்பங்களில், திருமணம், நிச்சயதார்த்தம், வலைகாப்பு உட்பட பல சுப காரியங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. வாழ்க்கையின் பல பிரச்சனைகளில் இருந்து விடுபட சர்க்கரையை கொண்டு செய்யும் சில இனிப்பான பரிகாரங்களை  பற்றி அறிந்து கொள்ளலாம்.

சர்க்கரையை கொண்டு செய்யப்படும் சில பரிகாரங்கள் 

நமது ஜாதகத்தில் சூரியன் வலுவிழப்பதால் உத்தியோகத்தில் சிரமங்களை சந்திக்க வேண்டி வரும். அப்படிப்பட்ட நிலையில் ஜாதகத்தில் சூரியன் வலுப்பெற தாமிர பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து குடித்தால் சூரியன் வலுவடைகிறது.

நீங்கள் சில முக்கியமான வேலைகளுக்காக வீட்டை விட்டு வெளியே செல்லும் போது வேலையில் வெற்றி பெற விரும்பினால். முந்தைய இரவில் ஒரு செப்பு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீரை கலந்து வைத்து, வேலைக்குச் செல்வதற்கு முன் அதை உட்கொள்ளவும். இவ்வாறு செய்தால் வேலையில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மேலும் படிக்க | குருவின் ராசி மாற்றத்தினால் பஞ்சமஹாபுருஷ ராஜயோகம்; அமோக வாழ்வைப் பெரும் ‘3’ ராசிகள்! 

வாழ்க்கையில், சனி கிரகத்தினால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க சர்க்கரை மற்றும் தேங்காய் துருவலை கலந்து எறும்புகளுக்கு உணவளித்தல் மிகவும் பலன் தரும்.  மேலும், பித்ரு தோஷத்திலிருந்து விடுபட கோதுமை மாவில் சர்க்கரை கலந்து காகங்களுக்கு உணவளிக்கவும். 

வாழ்க்கையை குலைக்கும் ராகு தோஷம் நீங்க இரவு தூங்கும் போது சர்க்கரையை சிவப்பு துணியில் கட்டி தலையணைக்கு அடியில் வைக்கவும். இதை பல நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு சாண்டள யோகம்; சில எளிய பரிகாரங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News