கிரகங்களின் பெயர்ச்சி அவ்வப்போது நிகழும். அதன் தாக்கத்தை உலக அளவிலும், தனிமனிதர்கள் நிலையிலும் காணலாம். விரைவில் தேவகுரு என அழைக்கப்படும் குரு பகவானும், சனியும்  வக்ர நிவர்த்தி அடைகின்றனர். சனி நவம்பர் 4ஆம் தேதியும், குரு பகவான் டிசம்பர் 31ஆம் தேதியும் வக்ர நிவர்த்தி அடைகின்றனர். முக்கியமான இந்த இரு கிராகங்களின் நிலை மாற்றம் 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிக மங்களகரமான தாக்கத்தை ஏற்படுத்தும். இவர்கள் எதிர்பாராத நன்மைகளையும் பெறலாம். இந்த அதிர்ஷ்ட ராசிகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷ ராசி (Aries Zodiac)


குரு பகவான் மற்றும் சனி தேவன் வக்ர நிவர்த்தி அடைவது மேஷ ராசிகளுக்கு சாதகமாக இருக்கும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதளவில் தைரியம் பிறக்கும். கலகலப்பான பேச்சுக்களால் நட்பு வட்டம் விரிவடையும். இந்த நேரத்தில் உங்கள் வருமானத்தில் மிகப்பெரிய  அளவில் அதிகரிப்பு இருக்கலாம். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகலாம். பழைய முதலீட்டில் லாபம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும்.உங்கள் மரியாதை மற்றும் கவுரவம் உயரும். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். உங்கள் சொத்து மதிப்பு உயரும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். செய்யும் தொழிலில் திருப்தியான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கைகூடிவரும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை துளிர்விடும். 


மிதுன ராசி (Gemini Zodiac


குரு பகவான் மற்றும் சனி தேவன் வக்ர நிவர்த்தி அடைவது மிதுன ராசிகளுக்கு சாதகமாக இருக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.  மேலும், நீண்ட நாட்களாக முழுமையடையாமல் கிடப்பில் போடப்பட்ட பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். பணி நிமிர்த்தமான பயணங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மதிப்பு மேம்படும். மனதளவில் புத்துணர்ச்சி பிறக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும்.


மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சியால் வீடு வாங்கும் யோகம் பெற சுக்கிர ஸ்லோகம் சொன்னால் போதுமா?


சிம்ம ராசி (Leo Zodiac)


குரு பகவான் மற்றும் சனி தேவரும் வக்ர நிவர்த்தி அடைவது சிம்மராசிகளுக்கு நிதி பலன்களை அள்ளிக் கொடுக்கும். செயல்பாடுகளில் துரிதம் அதிகரிக்கும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  இந்த நேரத்தில் காதல் உறவுகளில் இனிமை அதிகரிக்கும் மற்றும் உங்கள் மனைவியுடன் இணக்கம் மேலும் அதிகரிக்கும். உங்கள் துணையின் ஆலோசனையுடன் செய்யும் எந்த வேலையிலும் வெற்றி பெறுவீர்கள். குருமார்களின் ஆசி கிடைக்கும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் பிறக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால், இந்த நேரம் மிகவும் நல்ல பலன்களைத் தரப்போகிறது. வேலையில் உயர்வு இருக்கும். பணியில் இருந்துவந்த  தடைகள் அகலும். உறவினர்களால் சாதகமான சூழல் உண்டாகும். சில பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவு கிடைக்கும்.


பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்,  உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.


 


மேலும் படிக்க | சனி, சுக்கிரன் மாற்றம்: தீபாவளிக்கு முன் இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ