சுக்கிரன் பெயர்ச்சியால் வீடு வாங்கும் யோகம் பெற சுக்கிர ஸ்லோகம் சொன்னால் போதுமா?

Shukra Transit: சுகபோகங்களுக்கு அதிபதியான சுக்கிர பகவான், செல்வம், வசதியான வாழ்க்கை, பணம், மதிப்பு மரியாதை, வீடு, வாகனம் என உலகில் வசதியாகவும் மனதிருப்தியுடன் வாழ்வதற்கு காரணமானவர்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 30, 2023, 08:16 AM IST
  • சுகபோகங்களுக்கு அதிபதி சுக்கிர பகவான்
  • வசதியாக மனதிருப்தியுடன் வாழ வேண்டுமா?
  • சுக்கிர பெயர்ச்சிக்கு காத்திருங்கள்
சுக்கிரன் பெயர்ச்சியால் வீடு வாங்கும் யோகம் பெற சுக்கிர ஸ்லோகம் சொன்னால் போதுமா? title=

சுக்கிரன் பெயர்ச்சியால் வீடு கட்டும் யோகம்: நவம்பர் மாதத்தில் மிகவும் மங்களகரமான கிரகம் சுக்கிரன் ராசி மாற்றம் செய்கிறார்.  செல்வம், வசதியான வாழ்க்கை, பணம், மதிப்பு மரியாதை, வீடு, வாகனம் என உலகில் வசதியாகவும் மனதிருப்தியுடன் வாழ்வதற்கு காரகரான சுக்கிரன் நவம்பர் 3ஆம் தேதி பெயர்ச்சி ஆகவுள்ளார். சுக்கிரன் தற்போது இருக்கும் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆவது, சில ராசியினருக்கு தீபாவளியை கோலாகலமாக மாற்றும்.

எந்தவொரு கிரகங்களின் மாற்றமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரனின் பெயர்ச்சியும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிர பகவான் உச்சம் பெற்றால், அருமையான வசதியான வீடு அமையும் என்பது நம்பிக்கை. சுகபோகங்களுக்கு அதிபதியான சுக்கிர பகவானின் அருள் யாருக்கு பூரணமாக இருக்கிறது? அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

சுக்கிரன் பெயர்ச்சியால் வீடு வாங்கும் யோகம் பெறவுள்ள ராசிகள் இவைதான் 

நவம்பர் 3, 2023 அன்று, சுக்கிரன் பெயர்ச்சியாகி கன்னி ராசிக்குள் நுழைகிறார். நவம்பர் 3ம் தேதி அதிகாலை 05:13 மணிக்கு சிம்ம ராசியிலிருந்து சுக்கிரன் கன்னி ராசியில் பிரவேசிக்கிறார். இதற்குப் பிறகு நவம்பர் 12-ம் தேதி அஸ்த நட்சத்திரத்திலும், நவம்பர் 24-ம் தேதி சித்ரா நட்சத்திரத்திலும் சுக்கிரன் நுழைகிறார். அதன் பிறகு நவம்பர் 30-ம் தேதி துலாம் ராசிக்குள் மாறுகிறார்.  

சுக்கிரன் சஞ்சாரத்தின் சுப பலன்
 

ரிஷபம்: ரிஷப ராசியின் (Taurus) அதிபதி சுக்கிரன், ரிஷப ராசிக்காரர்கள் வழிபடக்கூடிய தெய்வ அன்னை துர்க்கை என்றாலும், இவர்கள் அன்னை மகாலட்சுமையை வணங்கிவந்தால், வீடு கட்டும் அல்லது வாங்கும் யோகம் வரும். சுக்கிரனின் ராசி மாற்றத்தால் ரிஷபம் ராசிக்காரர்களின் வாழ்வில் காதல் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி வந்து சேரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுக்கு மரியாதையும் பதவியும் கௌரவமும் கிடைக்கும். ரிஷபம் ராசிக்காரர்களில், காதல் வயப்பட்டவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும். வருமானம் அதிகரிக்கும்.

துலாம்: துலாம் ராசியின் அதிபதியும் சுக்கிரன்தான். துலாம் ராசிக்காரர்கள் சுக்கிரனின் ராசி மாற்றத்தால் பொருளாதார ரீதியாக பலன் அடைவார்கள். பல வழிகளில் பணம் கிடைக்கும். உங்கள் மகிழ்ச்சிக்காக பணத்தை செலவிடுவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கலாம். உறவுகள் மகிழ்ச்சி கொடுக்கும். பதவி உயர்வு, கௌரவம் என சமூக அந்தஸ்து கிடைக்கும். துலாம் ராசிக்காரர்கள் (Libra) ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் சொல்லியும் மகாலக்ஷ்மி அஷ்டோத்திரம் சொல்லியும் வேண்டிக்கொண்டால், வீடு வாங்கும் யோகம் கிடைக்கும்

விருச்சிகம்: விருச்சிக ராசிக்கு சுக்கிரன் சஞ்சரிப்பதால் வருமானம் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். தொழில் மற்றும் வியாபாரத்திலும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவீர்கள். நவம்பர் மாதத்தில், சூரிய பகவானும் விருச்சிக ராசியில் சஞ்சரிப்பார். விருச்சிக ராசிக்காரர்கள் (Scorpio நவம்பர் மாதத்தில் பெரிய பலன்களைப் பெறலாம். குறிப்பாக வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயத்துக்குச் சென்று, நவக்கிரகங்களில் உள்ள சுக்கிர பகவானை மனதார வேண்டிக்கொண்டு, ஒன்பது முறை சுற்றி வந்தால் வீடு வாங்கும் ஆசை நிறைவேறும்.

மீனம்: சுக்கிரனின் சஞ்சாரம் மீன ராசிக்காரர்களுக்கு (Pisces) வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சியைத் தரும். பல்வேறு துறைகளில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். தனியாக இருப்பவர்களின் திருமணம் நிச்சயிக்கப்படும். கணவன் மனைவி இடையே உறவு இனிமையாக இருக்கும். மீன ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சஞ்சாரம் நல்ல பலன்களைத் தரும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி வக்ர நிவர்த்தி: நவம்பர் முதல் இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்.. முழு ராசிபலன் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News