குரு உதயம் 2023: பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழப்போகும் ‘சில’ ராசிகள்!
Guru Uday 2023 Effects: ஒரு கிரகம் உதயமாகவோ அல்லது அஸ்தமனமாகவோ ஆகும் போதெல்லாம், அது அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
Guru Uday 2023 Effects: ஒவ்வொரு மாதமும் சில அல்லது மற்ற கிரகங்கள் அதன் இயக்கத்தை மாற்றுகின்றன அல்லது பெயர்ச்சியாகின்றன. இதனுடன், கிரகங்களின் உதயம் மற்றும் அஸ்தமனம் ஆகியவையும் தொடர்கிறது. ஒரு கிரகம் உதயமாகும்போது அல்லது அஸ்தமனம் ஆகும் போது, அது 12 ராசிகளையும் பாதிக்கிறது.
ஒவ்வொரு கிரகத்திற்கும் ஏதாவது ஒரு ராசியுடன் தொடர்பு உண்டு. ஒரு கிரகம் உதயமாகவோ அல்லது அஸ்தமனமாகவோ ஆகும் போதெல்லாம், அது அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சில ராசிக்காரர்களுக்கு சாதகமாகவும், சிலருக்கு சிரமங்களும் உண்டாகும். செல்வம், சொத்து, கல்வி, குழந்தைகள், வாழ்க்கை துணை மற்றும் உயர் பதவி ஆகியவற்றின் காரணியாக குரு பிருஹஸ்பதி கருதப்படுகிறார். ஒருவருடைய ஜாதகத்தில் குரு கிரகம் வலுவாக இருந்தால், வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும். ஜோதிட சாஸ்திரப்படி குரு குரு மார்ச் மாதத்தில் உதயமாகப் போகிறார். குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு பொற்காலம் தொடங்கும் என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | வக்ர நிவர்த்தி அடையும் செவ்வாய்! இனி ‘இந்த’ ராசிகள் தொட்டதெல்லாம் வெற்றி தான்!
கடக ராசிக்கான குரு உதய பலன்கள்
குருவின் உதயத்தால் கடக ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் சூரியைப் போல் பிரகாசிக்கும். அதிர்ஷ்ட காற்று பலமாக வீசுவதன் மூலம், தொட்டது அனைத்தும் துலங்கும். தொழில் சம்பந்தமான பயணம் செல்வதால் சுப பலன்கள் உண்டாகும்.
மிதுன ராசிகளுக்கான குரு உதய பலன்கள்
வியாழனின் உதயம் மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகளைத் தரும். தொழில் ரீதியாக இது ஒரு சிறந்த நேரமாக இருக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைத்து விரும்பிய இடத்துக்கு மாறலாம். தொழிலதிபர்களுக்கும் இந்த நேரம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
கும்ப ராசிகளுக்கான குரு உதய பலன்கள்
வியாழன் உதயத்தால் கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிட்டும். தடைப்பட்ட பணம் திரும்ப கிடைத்து பொருளாதார நிலை வலுப்பெறும். குறிப்பாக கல்வி, ஊடகத்துறையுடன் தொடர்புடையவர்கள் அதிக நன்மைகளைப் பெறுவார்கள்.
மீன ராசிகளுக்கான குரு உதய பலன்கள்
மீன ராசிக்காரர்களுக்கு குருவின் உதயத்தால் எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வராத பணம் கிடைக்கும். இதனுடன், புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். இது நிதி நெருக்கடியிலிருந்து விடுபட உதவும். இதன் போது எந்த வேலையில் ஈடுபட்டாலும் வெற்றி கிடைக்கும். கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவீர்கள்.
(துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | நெருங்கும் சனிப்பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை காலம், ஜாக்கிரதை!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ